Skip to main content

Posts

200 Billion Dollars சந்தை மதிப்பை இழந்தது Tesla ஆப்பு வைத்த சீன நிறுவனம்!!!

 உலகில் சிறந்த EV கார்களை தயாரித்துவெளியிடும் நிறுவனமாக Tesla விளங்கிறது கடந்த ஒருமாதத்தில் Tesla வின் Market Value சந்தை மதிப்பானது 26% சரிந்துள்ளது இது 205 Billion Dollars ஆகும்.  இது அதன் மொத்த சந்தை மதிப்பில் பெரும் சரிவை கண்டுள்ளது. தற்போது EV வாகனங்களுக்கான சந்தை சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது, முன்னர் Tesla மட்டும் கோலோச்சிய காலங்கள் சென்று BYD,Honda,Toyota,BMW,Hyundai,GM,Rivian இன்னும் பல பல EV தயாரிப்பாளர்கள். இதில் குறிப்பிடும்படியாக சீனாவில் மட்டும் 91 EV Cars தயாரிப்பாளர்கள் தயாரிப்பில் உள்ளனர் இதனைவிட பலநூறு நிறுவனங்கள் இதுதொடர்பான ஆய்வில் முடிவு கட்டத்தை எட்டியுள்ளனர். தற்போது நாம் Elon Musk கூறிய கருத்து ஒன்றை எடுத்துக்கொள்ளவேண்டும்"எவ்வளவுதான் விற்பனை தடைகளை நீங்கள் சீன  EV தயாரிப்புக்களுக்கு விதித்தாலும் சீன EV தயாரிப்புக்களால் மற்றைய நிறுவனங்களின் தயாரிப்புக்கள் அழிக்கப்படுவதை நிறுத்த முடியாது"  அவர் குறிப்பிட்டதாவது குறிப்பாக வட அமெரிக்கா மற்றைய மேற்குலக நாடுகளில் சீன தயாரிப்புக்களுக்கு தடைஉள்ளது அதற்கு அரசியல் காரணங்கள் இருந்தாலும், ஐரோப்பாவில் சீன த...

The Investment - முதலீடு

  முதலீடு என்னும் சொல்லை நம்மில் பலர் அதிகம் தடைவைகள் எமது வாழ்க்கையில் கேட்டிருப்போம் பலர் அதன் அர்த்தத்தை தெரிந்தும் உள்ளோம். " An investment is  an asset or item acquired with the goal of generating income or appreciation"         இதுவே முதலீட்டுக்கான வரைவிலக்கணமாக குறிப்பிடப்படுகிறது. முதலீட்டில் பலவகைகள் உள்ளன இலகுவாக கூறினால் நீங்கள் ஒரு பொருளைகொள்வனவு செய்வதன் மூலமோ அல்லது பணத்தை முதலீட்டுவதன் மூலம் காலப்போக்கில் நீங்கள் முதலிட்ட பணத்தினை விட அதிகபணத்தை பெறுதல்/ கொள்வனவு செய்த பொருட்களை விற்பனை அல்லது பரிமாற்றம் மூலம் லாபம் பெறுதல் உதாரணமாக தங்கத்தினை கூறமுடியும். நீங்கள் இன்று ஓர் குறிப்பிட்ட தொகைக்கு தங்கத்தை கொள்வனவு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம் நிட்சயமாக அடுத்துவருடங்களின் அந்த தங்கத்தின் பெறுமதி நிட்சயம் அதிகரிக்கும் இதுபோலவே மக்கள் பங்குச்சந்தை(Stock market),Indexfund, Real Estate, bonds,ETF, Gold ETF, போன்று பலவகையான முதலீடுகள் உள்ளன. இதில் சில முதலீடுகளில் ஆபத்துக்களும் உள்ளன இருந்த போதிலும் மக்கள் உலகெங்கிலும் முதலீடுகளை செய்து கொண்ட...

இனி கனடா போகமுடியாதா? 😱 இரண்டுவருட Study Visa தடை

  கனடாவிற்கு வருவதற்கும்/குடியேறுவதற்கும் பலரால் பயன்படுத்தப்படும் ஓரு வழி Student Visa முறையாகும் இதன் மூலம் பல இலட்சம் மக்கள் உலகெங்கிலுமிருந்து வருடாவருடம்கனடாவிற்கு வருகைதந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் பலகாலமாக இலகுவாக இருந்த இந்த முறமை இனி Student visa வில் கனடாவினுள் நுளையவே முடியாததாக மாறிவிட்டுள்ளது.கடந்த 22 ம் திகதி Immigration minister Mr.Marc Miller அவர்கள் முக்கியமான அறிவுப்புக்களை வெளியிட்டுள்ளார் அதில் இனிவரும் 2வருடங்களுக்கு கனடாவிற்கு வருகை தரும் மாணவர்கள் அளவை 36% ஆக குறைக்கப்போவதாகவும் 2023 ஐ ஒப்பிடும் போது 36% வீசாக்களை 2024 ல் குறைக்கப்போவதாகவும் குறிப்பாக Ontario மாகாணத்தில் 50% Student Visa வை குறைக்கப்போவதாகவும் அறிக்கையை வெளியிட்டுள்ளார். இந்த வீசா குறைப்பு Masters & Doctorate மாணவர்களுக்கு பொருந்தாது. அடுத்ததாக student visaவில் கனடாவருபவரின்துணை ஆண்/பெண் இனி வேலைசெய்யமுடியாது இதுவரை இருந்துவந்த Open Work permit முறை Masters & Doctorate படிக்க வரும் மாணவர்களின் துணை ஆண்/ பெண் வேலை செய்யமுடியும். 1 Year Diploma அல்லது 2 Year Diploma படிக்கவருபவர்கள் க...

The Benefits of regular exercise

  இந்த பரபரப்பான இயந்தியமயமாகிப்போன வாழ்க்கையில் நாம் சரியான உணவு,நித்திரை, உடற்பயிற்சி என்பவற்றை தவிர்த்துவிடுகிறோம். இதனால் உடல்பருமன்,பல்வேறுபட்ட நோய்கள்,மனஅழத்தம் என்பவற்றுக்கு ஆளாகின்றோம்.நாம் எவ்வளவு ஆரோக்கியமான உணவு எடுத்துக்கொண்டு தேவையான அளவு நேரம் நித்திரை செய்தாலும் ஆரோக்கியத்தில் குறைபாடு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. உங்களில் எத்தனை பேர் தினமும் உடற்பயிற்ச்சி செய்கிறீர்கள்? நாம் எல்லாவற்றுக்கும் காரணம் ஒன்றை வைத்துள்ளோம் அதுதான் நேரம் இல்லை என்பது. தற்போது பலர் உடற்பயிற்ச்சி இன்மையால் பல துன்பங்களை அனுபவிக்கிறார்கள் ஒரு நாளில் 30 நிமிடங்களை ஒதுக்கி நடைபயிர்ச்சி செய்வது மிகவும் நல்லது. இனி உடற்பயிற்ச்சி செய்வதால் எமக்கு கிடைக்கும் பலன்களை பார்ப்போம்  உடல் எடையை கட்டுப்பாட்டினுள் வைத்திருக்க முடியும் மூளை சம்பந்தமான நோய்களிலிருந்து விலகியிருக்கலாம் தசைகள் என்புகளின்பலம்  அதிகரிக்கும் உங்கள் நாளாந்த வேலைகளை செய்வதற்கான ஆற்றல் மற்றும் சுறுசுறுப்பு அதிகரிக்கும் உடலில் சக்கரையின் அளவை கட்டுப்படுத்தலாம் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம் Cholesterol அளவு கட்ட...

Frugal life

  சிலவருடங்களா   உலகம்   முழுவதும்   இந்த  Frugal lifestyle  என்பது   பிரபலமாகிவருகிறது . அனைவருக்கும் விளங்கக்கூடிய வகையில் சொல்லவேண்டுமாயின் செலவை குறைத்து வாழ்வது என்று எடுத்துக்கொள்ளலாம்.புது பொருட்கள்,உபகரணங்கள்,இலத்திரனியல் பொருட்கள் போன்றவற்றை கொள்வனவு செய்யவேண்டுமென்பது பலரினதும் விருப்பம் ஆனால் இவ்வாறு அதீக கொள்வனவால் எம்மையறியாமலேயே நாம் அதிகளவு பணம் செலவு செய்கிறோம். இந்த வாழ்க்கை முறையிலிருந்து விலகி அல்லது தனது செலவுகளை கட்டுப்படுத்த உலக மக்கள் ஏற்படுத்திக்கொண்ட வாழ்க்கை முறையே இதுவாகும். இந்த வாழ்க்கை முறை வளரந்த பொருளாதாரம் கொண்ட எந்த நாடுகளிலும் வாழும் மக்களுக்கும் பெரிதும் உதவியாக இருக்கும். இந்த வாழ்க்கை முறை தனிநபர்கள் அல்லது நண்பர்களின் கூட்டு முயற்சியால் நிகழ்வதாகும். உதாரணமாக நீங்கள் வீட்டிற்கு வெளியே உணவு அருந்துபவராக இருந்தால் அந்த உணவுக்கான ஒருமாத செலவை நீங்கள் கணக்கிட்டு பாருங்கள்.நீங்கள் வேலைக்கு,கல்வி சம்பந்தமாக வெளியில் செல்பவராயின் உங்கள் காலை/மதிய உணவை வீட்டில் தயார் செய்து கொண்டுபோவீர்களாயின் வெளியில் உணவருந்துவதற்கான செ...

கனடாவிற்கு Visitor விசாவில் வருபவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள்.

  பல்வேறுபட்ட கனவுகளுடன் கனடாவிற்கு 460,000 பேருக்கு மேற்பட்டவர்கள் இந்த visitor visa வில் கனடாவிற்கு வந்துள்ளனர். இதில் பெரும்பான்மையானோர் கனடாவில் வேலை ஒன்றை பெற்று குடியேறவேண்டுமென்பதே விருப்பம். ஆனால் தற்போது கனடாவின் நிலை மோசமாக உள்ளதால் கனடா மக்கள் தங்கள் வாழ்க்கையை கொண்டு நடத்துவதற்கு பெரும் சிரமப்பட்டுக்கொண்டிருக்கும் காலப்பகுதியில், கனடா சென்றால் வாழ்க்கையே மாறிவிடும் நல்ல பணம் சம்பாதிக்கலாம் என்ற எதிர்பார்ப்புக்களோடு கனடா வந்தவர்களுக்கு நிதர்சனமாக கனடாவின் நிலை அதிர்ச்சியே அளிக்கின்றது. கனடா வந்தபின்னர் பலரும் மன அழுத்தத்துக்கு உள்ளாகின்றனர். பலர் உறவுகளை பிரிந்து இவ்வளவு தூரம் வந்தடைந்திருப்பதாலும் இங்குள்ள காலநிலைக்கு ஈடுகொடுக்க முடியாமலும், வேலையின்மை, திரும்பி சொந்தஊர் போகவேண்டிவருமோ என்ற சிந்தனைகளால் பெரிதும் மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர். அடுத்ததாக வேலையின்மை நீங்கள் கனடாவில் வேலை செய்வதற்கு தகுதியுடையவராக வேண்டுமெனில் SIN (Social Insurance Number) ஐ பெறவேண்டும் Visitor visa வில் வருபவர்கள் அதை பெறமுடியாது. சிலர் பணத்துக்காக வேலைக்கு செல்கின்றார்கள் அவர்களுக்கு 6$ மாத்...

விதிக்கப்படும் வரிகள் சர்வதேசத்திடம் கடன் பெறவே

 இலங்கை கடந்த 3 ஆண்டுகளாக கடும் நெருக்கடியினுள் சிக்கியுள்ளது நாம் அனைவரும் அறிந்ததே தற்போது VAT வரி 15% லிருந்து18% அதிகரித்துள்ளதுடன், 18 மேற்பட்டஅனைத்து இலங்கையர்களும் TIN (Tax Identification Number) வரி கட்டுபவரை அடையாளப்படுத்தும் இலக்க முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் நாம் கவனமாக சிந்திக்க வேண்டிய சில விடயங்கள் உள்ளன. முதலில் ஏன் நாம் வரி செலுத்தவேண்டும் உதாரணமாக மேற்கத்தேய நாடுகளில் வரி முறைமை பல்நெடுங்காலமாக செயல் பாட்டிலிருந்துவருகிறது. முன்னேறிய நாடுகள் இதனால் தம் நாடுகளை அபிவிருத்தி செய்தும் பெறப்படும் வரிப்பணத்தின் மூலமும் கல்வி,போக்குவரத்து,மருத்துவம்,ஓய்வூதியம்,வீடு என்று தரமான வாழ்க்கை முறையை மக்களுக்கு வழங்கிவருகிறது. இந்த முறைமை இலங்கைக்கு பொருந்துமா என்று பார்ப்போமேயானால் நடைமுறைச்சிக்கல்கள் ஏராளம் உள்ளன. இலங்கை மக்கள் ஏற்கனவே அதீத பணவீக்கத்தால் அதிகளவு செலவீனங்களை எதிர்நோக்கி வாழ்க்கையை கொண்டுநடத்துவதற்கு சிரமமப்பட்டுக்கொண்டிக்கும் வேளையில் அவர்களிடமிருந்து வரி அறவிடுவது உண்மையில் ஏற்புடையாதா?  மக்களிடம் பணம் பற்றாக்குறையாக உள்ளது,வாழ்க்கை தரம் உயவில்...