உலகலாவிய ரீதியில் உயர்கல்வியை தொடர்வதற்காக மாணவர்கள் தேர்வுசெய்யும் நாடுகளில் கனடாவிற்கு முக்கிய இடமுண்டு. இதுவரைகாலமும் பல இலட்சம் சர்வதேசமாணவர்களை கனடாவானது உள்வாங்கி அவர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்களை வழங்கிவருகிறது. ஐக்கிய இராச்சியம் , அமெரிக்கா , அவுஸ்திரேலியா, பிரான்ஸ் என பல நாடுகளில் சர்வதேச ரீதியில் மாணவர்கள் தங்கள் உயர்கல்வி கனவை பூர்த்திசெய்து கொள்ள பயணப்படுகின்றனர். இதில் பெரும்பான்மையான மாணவர்கள் அந்தந்த நாடுகளில் வேலைவாய்புகளை பெற்று அதே நாட்டில் தொடர்ந்து வாழ்ந்தும் வருகின்றனர். ஏனைய உலகநாடுகளை ஒப்பிடும் போது கனடாவானது புதிய மக்களை வரவேற்றும் நாடாகும் இதனால் படித்து முடித்த பின்னர் ஒரு வேலையை பெற்று கனடாகுடியுரிமை பெறுவது மற்றைய நாடுகளுடன் ஒப்பிடும் போது இலகுவானதாகவும் இருந்து வருகிறது. இதன் காரணமாக உலகெங்கிலுமிருந்து மாணவர்கள் Covid - 19 முடிவடைந்து நாடுகள் பழைய நிலைக்கு திரும்பும் போது படையெடுத்தனர். அவர்களின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவு அதிகமானதாகவே இருந்தது. கடந்த December 07 தற்போதைய குடிவரவு மற்றும் அகதிகள் தொடர்பான அமைச்சர் மிகமுக்க...
Articles, Day Today News, and more