Skip to main content

Posts

இலங்கையின் ஐனாதிபதி ஆனார் ரணில் விக்கிரம சிங்கே; மிகச்சிறப்பான ராஐதந்திரம் வேலை செய்தது.

இலங்கையில் கடந்த சில மாதங்களாக ஆர்பாட்டங்கள்,வன்முறைகள் என மக்கள் கொதிநிலையிலேஇருந்துவந்தனர் அதன் விளைவாக மக்கள் ஐனாதிபதிமாளிகையை முற்றுகையிட்டு தங்கள் பலத்தை காண்பித்தனர். பதில் ஐனாதிபதியாக பதவியேற்ற ரணில் தனது வாழ்நாள் ஆசைய ஐனாதிபதி பதவியை அடைந்தே தீரவேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தார். அவர் நினைத்ததை கச்சிதமாக அடைந்துவிட்டார் இது அவ்வளவு எளிதில் கைகூடவில்லை தனது அரசியல் ராஐதந்திரங்களை நாசூக்காக செயல்படுத்தி வெற்றிகண்டுள்ளார். இறுதிநேரத்தில் சயித் பிரேமதாச போட்டியில் இருந்து விலகி டலஸ் அழகபெருமவிற்கு வழங்கிஆதரவும் நாம் எண்ணிப்பார்க்காத விடயம்ஆம் ஆனால்நான் இதை எதிர்பார்திருந்தேன் அரசியலில் அதிகாரப்போட்டிகளில் பேரங்கள் பேசப்படுவது வழமை இதில்திரைக்குப்பின்னால் இழுபறிகள் மட்டும்நடந்தனவே தவிர எந்தவித கோரிக்கைகள் முன்வைத்து மக்கள் நலனுடன் எவரும் செயற்படவில்லை. இங்குதான் ரணிலின் தந்திரங்கள் வேலை செய்தன எவரும்தனித்துஇல்லை ஒருகூட்டம் சயித்தின் கைஅசைவில் உள்ளன மற்றொன்று முதிர்ந்து தளர்ந்த சம்பந்தனின் கூட்டமைப்பு இங்குஅந்த தந்திரகார நரி கூட்டமைப்பின் தலைவரை தொலைபேசியில் அணுகி தன் விருப...

Elon Musk டிவிட்டரை வாங்கும் திட்டத்தினை தற்காலிகமாக இடை நிறுத்தியுள்ளார்.

சிலவாரங்களாக சர்வதேசரீதியில் எலான் மஸ்க் பற்றிய பேச்சே இருந்தது டிவிட்டரை எலான் வாங்கப்போகிறார் என்பது சமூக வலைதளங்களில் தீயாக பேசப்பட்ட விடயமாகும். டிவிட்டரில் மக்களின் பேச்சு சுதந்திரம் மறுக்கப்படுகிறது, மக்கள் தங்கள் கருத்துகளை முன்வைக்க முடியாமலும் தனிப்பட்ட நாட்டிற்குசார்பான கருத்துகள் அளவுக்குஅதிகமாக ஊக்குவிக்கப்படுவதுடன் தனிப்பட்டவர்களின் கருத்து சுதந்திரம் அடக்கப்பட்டுகிறதாக வெளிப்படையாக குற்றம் சாட்டினார். இந்நிலையில் டிவிட்டரில் போலி கணக்குகள் காணப்படுவதனால் அதன் விவரங்கள் நிலுவையில் இருப்பதால் ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்திவைக்கபபட்டுள்ளது என்று தனது டிவிட்டர்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் பழகும் சிங்களவர்களும் தடையாய் இருக்கும் இனவாதமும்

சுதந்திரம் பெற்றகாலத்திலிருந்தே பௌத்தமத ஆதிக்கமும் அதன் இனவாத கருத்தியல்களின் வெளிப்பாடாகவே இலங்கை அரசியல் இருந்து வருகிறது ஆனால் இன்றையகாலகட்டத்தில் நிலைமை மாற்றமடைந்துள்ளதை காணக்கூடியதாக உள்ளது. நாட்டில் இடம்பெறும் போராட்டங்கள் இளையசமுதாயத்தை சிந்திக்கவைத்துள்ளதுடன் போராடும் மநோநிலையும் தூண்டியுள்ளது என்றால் மிகையாகாது. இவ்வளவு காலமும் பௌத்தபேரினவாதத்தில் மூள்கியிருந்த மக்கள் தங்கள் பொருளாதாரம் கேள்விக்குறியாக்கப்பட்டு எதிர்காலம் பற்றிய பயத்தை தோற்றுவித்ததையடுத்து தங்களை சுயபரிசோதனை செய்துகொண்டதன் விளைவு பெரும்பான்மையானோர் பௌத்த பேரினவாதம் பயனற்ற மற்றும் ஆபத்தான ஒன்று என்பதை உணர்ந்துள்ளனர். இந்த தெளிவு எதிர்கால நாட்டின் வளர்ச்சிக்கும் சிறுபான்மை மக்களின் குரல்களுக்கு வலுச்சேர்பதாக அமையும் எனலாம். சிங்களவர்கள் தற்காலத்தில் எதிர்கொள்ளும் நெருக்கடிகளை என்றும் சந்தித்ததில்லை அவர்கள் பொறுமை எல்லைமீறும் போது அதன் வெளிப்பாடு பல கேள்விகளை எழுப்பியது? நாட்டின் இந்நிலைக்கு யார்காரணம்? ஆட்சி அதிகாரங்கள் எவ்வாறு ஒரு குடும்பத்தின்கீழ் சர்வாதிகாரமாக செயற்படுகிறது? ஊழல் குற்றச்சாட்டுகள் அம்பல...

புதிய பிரதமராக ரணில் விக்கரமசிங்கே பதவியேற்றுக்கொண்டார்.

நாட்டில் நிலவும் அரசியல்குழப்பங்களுக்கு மத்தியில் ஐனாதிபதி கோத்தபய ராஐபக்சவால் புதியபிரதமராக ரணில் விக்கிரமசிங்கே பதவிப்பிரமாணம் மேற்கொண்டுள்ளார். முன்னாள் பிரதமர் மகிந்த வாழ்த்துத்தெரிவுத்துள்ளார். கடந்த தேர்தலில் ரணில் விக்ரமசிங்கே தோற்கடிக்கப்பட்டார் தேசியப்பட்டியலின் மூலம் நாடாளுமன்றம் நுளைந்தார் இவர் தற்போது 6 வது தடவையாக பிரதமராக பதவியேற்றுள்ளார் உலகில் அதிகதடவைகள் பிரதமர் பதவி வகித்தவர் என்ற சாதனையைபடைத்துள்ளார். இவரின் பதவியேற்பிற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர். மக்கள் பழைய ஆட்சிஅதிகாரங்களின் மீது ஏமாற்றமும் வெறுப்பும் கொண்டுள்ளனர் மீண்டும் ரணில் பிரதமர் ஆவது ராஐபக்சாக்களை காப்பாற்றும் சதித்திட்டமாக கருதுகின்றனர். மக்கள் கோத்தாவை வீட்டுக்கு போகுமாறு போராடுகின்றனர் ஆனால் ஐனாதிபதியோ தன்னால் முடிந்த தந்திரங்களைச்செய்து ஆட்சியில் நீடிப்பதே அவரின் திட்டம்.இப்போது நாடாளுமன்றில் ரணில் தனது பெரும்பான்மையை நிரூபிக்கவேண்டும் அதில் சிக்கலும் உள்ளது எதிகட்சியினர் ஆதரவு அளிக்கமாட்டார்கள் 25 பேர் ஆதரவாக உள்ளனர் என ரணில் அணி கூறுகிறது. எதிர்க்கட்சியினருக்கும் ஐனாதிபதி ...

இலங்கையில் எதிர்வரும்நாட்களில் மக்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்??

கடந்த 9 ம் திகதி அரசாங்கத்திற்க்கு சார்பானவர்களால் காலிமுத்திடலில் கட்டவிழ்க்கப்பட்ட வன்முறைகாரணமாக பல அரசியல் வாதிகள் மற்றும் அரச சொத்துக்கள் தீக்கிரையாக்கப்பட்டதுடன் அரச ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்கப்பட்டதனையும் காணக்கூடியதாக இருந்தது. தற்போதைய நிலையில் பதவி விலகிய பிரதமர் தப்பியோடி ஒழிந்திருப்பதாக நம்பப்படுகின்ற திருகோணமலை திருமலை கடற்படைத்தளத்தை மையமாகக்கொண்டு செய்திகள் வெளியாவதனை நாம் காணக்கூடியதாக உள்ளது. நாட்டுதழுவிய ஊரடங்கு மற்றும் போலீஸ் ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பொது இடங்களில் கூடுவோர், தனியார் மற்றும் அரச சொத்துக்களை சேதப்படுத்தினால் துப்பாக்கி சூடு நடத்தப்படும் என ராணுவம் அறிவித்துள்ளது இதனை மக்கள் அவதானமாக நோக்கவேண்டும். நாடுதழுவிய ரீதியில் பெரும் கலவரத்துக்கு பிந்தியதான பதற்றம் நிலவுகிறது அது அடக்கியதாக தெரியவில்லை.தொடர்ந்தும் போராட்டக்காரர்கள் ஆளும் கட்சியினரின் சொத்துககளை தேடி தேடி அழித்துவரும் நிலையில் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம். மக்கள் வீட்டில் இருப்பதே இந்நாட்களில் சிறந்தது ஏனெனில் ஊரடங்கு வாரங்கள் கடந்த...

ரஸ்யா உக்ரைன் மோதல் மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்குமா?

கடந்த சில வாரங்களாக ஐரோப்பாவின் உக்ரைன் ரஸ்ய எல்லையில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. உக்ரைன் ரஸ்யா எல்லைப்பிரச்சினை சோவியத் ஒன்றியம் உடைந்த காலம் தொட்டே இருந்து வருகிறது ஆனால் சமீபகாலமாக மோதல் நிலை உக்கிரமடைந்துள்ளது. அமெரிக்காவின் நட்பு நாடுகளின் கூட்டணி என்றழைக்கப்படும் நேட்டோ வில் அமெரிக்காவின் உந்துததால் உக்கிரைனை சேர்க்க பார்க்கிறது இதனை ரஸ்யா துளியளவும் விரும்பாது அதற்கான காரணம் தனது எதிரி நாடான அமெரிக்காவின் கூட்டணியில் உக்ரைன் இணைந்தால் பாரிய பாதுகாப்புப்பிரச்சினைகளையும் அமெரிக்காதனது ராணுவத்தளபாடங்கள், ஏவுகணைகளை உக்ரைனில் நிறுவமுடியும் ஆதலால் உக்ரைனை போர்மூலம் வெல்ல எண்ணுகிறது.  உக்ரைன் முன்னைய சோவியத்தொன்றியத்தின் பகுதியாகும் 2014 ல் கிரீமியா தீபகர்ப்பம் பொதுவாக்கெடுப்பின் மூலம் ரஸ்யாவுடன் இணைக்கப்பட்டது. ரஸ்ய மொழி பேசும் பலர் உக்ரைனில் வாழ்கிறார்கள் மேலும் பல மருத்துவர்களை உருவாக்கும் மருத்துவ மற்றும் தொழில்நுட்பத்தில் சிறந்த நாடு உக்ரைன்.நிலைமை மோசமாடைந்துள்ளதற்கான எடுத்துக்காட்டாக அமெரிக்கா தனது தூதரக அதிகாரிகளை நாட்டிற்க்கு திரும்ப அழைத்துள்ளது போர்க்கப்பல்க...

இலங்கை பொருளாதார வீழ்ச்சி ! தற்சார்பு வாழ்க்கை முறையும் புதிய வாழ்க்கை முறைக்கான தொடக்கம்.

அனைருக்கும் எனது வணக்கங்கள் இந்த கட்டுரை இலங்கை வாசகர்களுக்கு பெரிதும் பனுள்ளதாக அமையும் என நம்புகிறேன். கடந்த வருடம் October மாதம் எனது கட்டுரையில் எப்படியான பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ளது என்பதனை குறிப்பிட்டிருந்தேன் அதன் படி தற்போது இலங்கை பாரிய பொருளாதார சிக்கலில் சிக்குண்டு உள்ளது நிர்சனமான விடயம். இப்போது அதன் தொர்ச்சியாக நாட்டில் தற்போதைய நிலையையும் எவ்வாறான திட்டமிடல்களை மேற்கொண்டால் இலங்கை மீண்டும் பழைய நிலைக்கு திரும்பக்கூடிய சாத்திக்கூறுகள் உள்ளது என்பதனையும்,ஓர் இங்கையராக நீங்கள் எதை செய்யும் பட்சத்தில் உங்களை நீங்கள் தற்காத்து கொள்ளலாம் என்பதனையும் பார்ப்போம்.இக்கட்டுரையை வேறுநாடுகளிலிருந்து வாசிப்பர்களுக்கு இங்கையின் தற்போதைய நிலைபற்றிய தெளிவு கிடைக்கும் என்பதில் எந்தவிதமான ஜயமுமில்லை ஆகவே இக்கட்டுரை இறுதிக்கட்டுரையின் தொடர்ச்சியாக எழுதப்பட்டுள்ளது.பழைய கட்டுரைக்கான இணைப்பை இங்கு வழங்குகிறேன். இதனை வாசித்தபின் இக்கட்டுரையை தொடர்வது மிகச்சிறந்தது. நாம் அனைவரும் 2022ம் ஆண்டில் கால்பதித்துள்ளோம் இலங்கை மட்டுமல்ல உ...