கடந்த சில வாரங்களாக ஐரோப்பாவின் உக்ரைன் ரஸ்ய எல்லையில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. உக்ரைன் ரஸ்யா எல்லைப்பிரச்சினை சோவியத் ஒன்றியம் உடைந்த காலம் தொட்டே இருந்து வருகிறது ஆனால் சமீபகாலமாக மோதல் நிலை உக்கிரமடைந்துள்ளது. அமெரிக்காவின் நட்பு நாடுகளின் கூட்டணி என்றழைக்கப்படும் நேட்டோ வில் அமெரிக்காவின் உந்துததால் உக்கிரைனை சேர்க்க பார்க்கிறது இதனை ரஸ்யா துளியளவும் விரும்பாது அதற்கான காரணம் தனது எதிரி நாடான அமெரிக்காவின் கூட்டணியில் உக்ரைன் இணைந்தால் பாரிய பாதுகாப்புப்பிரச்சினைகளையும் அமெரிக்காதனது ராணுவத்தளபாடங்கள், ஏவுகணைகளை உக்ரைனில் நிறுவமுடியும் ஆதலால் உக்ரைனை போர்மூலம் வெல்ல எண்ணுகிறது. உக்ரைன் முன்னைய சோவியத்தொன்றியத்தின் பகுதியாகும் 2014 ல் கிரீமியா தீபகர்ப்பம் பொதுவாக்கெடுப்பின் மூலம் ரஸ்யாவுடன் இணைக்கப்பட்டது. ரஸ்ய மொழி பேசும் பலர் உக்ரைனில் வாழ்கிறார்கள் மேலும் பல மருத்துவர்களை உருவாக்கும் மருத்துவ மற்றும் தொழில்நுட்பத்தில் சிறந்த நாடு உக்ரைன்.நிலைமை மோசமாடைந்துள்ளதற்கான எடுத்துக்காட்டாக அமெரிக்கா தனது தூதரக அதிகாரிகளை நாட்டிற்க்கு திரும்ப அழைத்துள்ளது போர்க்கப்பல்க...
Articles, Day Today News, and more