2020 ன் ஆரம்பத்தில் பெரிதான ஆர்ப்பாட்டம் இல்லாமல் ஆரம்பித்து தற்பொழுது இலங்கை அரசு பொருளாதார அவசர நிலையினை எதிர்கொள்ளும் நிலைக்கு தள்ளிவிட்டுள்ளது. இன்நிலைக்கு Covid-19 ன் மீது முற்றுமுழுதாக குற்றம் சொல்லிவிடமுடியாது இங்கு தீட்டப்பட்ட திட்டங்கள் தொடர்தோல்விகளை சந்திக்க அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சிக்கலும் ஒன்று சேர்ந்து நாட்டை முடக்கிவிட்டுள்ளது என்பதே உண்மை. கடந்த சில மாதங்களாக அரசாங்கத்திடம் அரசாங்கத்திடமிருந்து வெளியாகும் அறிவிப்புகள் மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.எதைச்செய்தால் இப்பிரச்சினைகளில் இருந்து மீண்டு வரலாம் என்பதே இலங்கை வாழ் மக்களின் பரிதவிப்பு. இந்த கள எதார்த்தம் ஓர் நிட்சயமற்ற குழப்பத்தையும் எதிர்காலம் குறித்த எச்சரிக்கை மணியை ஒலிக்கச்செய்துள்ளது. இந்நிலைமை மேலும் மோசமடையாமல் இருப்பதற்கு இறைவனை பிரார்த்தித்துக்கொண்டு இந்நிலைமை எவ்வாறு பரிணமித்தது என்பதை அலசியாகவேண்டும். இதை வாசித்துக்கொண்டிருக்கும் யாராக இருந்தாலும் உலகின் எந்த இடத்தில் வசித்தாலும் நம் பிறப்பிடத்தின் தற்போதைய நிலையை அறிந்தே ஆக வேண்டும்.தவறுகள் மற்றும் ...
Articles, Day Today News, and more