Skip to main content

Posts

Showing posts with the label Worldnews

UK Civil WAR பற்றி எரியும் பிரிட்டன்!!!

  பிருத்தானியாவில் ஓர் நடன பாடசாலை வளகத்திலே 3 சிறுமிகள் கத்திக்குத்துக்கு இலக்காகி படுகொலைசெய்யப்பட்டதை தொடர்ந்து சந்தேக நபர் தொடர்பான அடையாளங்கள் தவறான முறையில் பகிரப்பட்டது.குறித்த கொலையாளி 17வயதுடையவன் அவன் இஸ்லாமியன் என தீவிர வலதுசாரிகளால் பரப்புரை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து பிரிட்டனில் பல பாகங்களில் வெறுப்பு போராட்டங்கள் வெடித்தன தொடர்ந்து கடைகள்,வீடுகள்,கார்கள் என்பன போராட்டக்காரர்களால் அழித்து சேதமாக்கப்பட்டது. இதுவரை 400 ற்கு மேற்பட்டவர்கள் நாடுமுழுவதிலிருந்தும் கைது செய்யப்பட்டுள்ளனர். இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதிகளை குறிவைத்து தாக்குதல்கள்நடத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றன.பிருத்தானியாவின் குடிவரவுக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையிலும் இந்த வன்முறைச்சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. சாலைகளில் தீவிர வலதுசாரிகள் கடைகள்,வணிகநிறுவனங்களை தாக்கி கொள்ளையிடுவதையும்,போலீசாரை பட்டாசுகள் வைத்து தாக்குவதும்,”Islam Out” போன்ற வாசங்களை உச்சரித்தபடியும் வன்முறையில் ஈடுபடுகின்றனர். அவர்கள் முன்னிற்கும் கோட்பாடாக “இங்கிலாந்து ஆங்கிலேயருக்கே” என்பதாகும்.மேலும் வன்முறைகள் மூளாமல் இருக்க பிரதமர...

அதிரும் இஸ்ரேல் களம் பல முனை தாக்குதலால் திணறும் இஸ்ரேல்

  இஸ்ரேலின் மீது பலமுனைதாக்குதல்கள் நடாத்தப்பட்டு வருகின்து ஹமாஸ் இஸ்ரேல் மீது பலாயிரம் ஏவுகணை தாக்குதல்களை மேற்கொண்டது. தற்போது தெற்கு லெபனானிலிருந்து ஏவுகணை தாக்குதல்களும் இடம்பெற்றுள்ளது. இத்துடன் சில ஆயுதக்குழுக்களும் இந்த போரில் இணைந்துள்ளது. இஸ்ரேல் பொதுமக்களை இலக்காக வைத்து தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. ஹாசாவினுள் தரைவழி தாக்குதலை மேற்கொள்ளவுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ள நிலையில் இந்த நடவடிக்கை போரை நீட்டிக்குமென CIA ன் முன்னாள்தலைவர் குறிப்பிட்டுள்ளார். லிபியா நாட்டின் பாராளுமன்றில் ஓர் தீர்மானம்மொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. பலஸ்தீனுக்கு ஆயுதங்களைவழங்கவுள்ளதாகவும் இஸ்ரேலின் தாக்குதல்களை முறையடிப்பதற்காக இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. இதுமட்டுமல்லாது ஏமனின் ஹைதி குழுவினர் 3  long range ஏவுகணைகளை இஸ்ரேலை நோக்கி ஏவியுள்ளனர். நாளுக்குநாள் இஸ்ரேலை நோக்கி பல வழிகளில் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. தற்போது இஸ்ரேலானது ஆயுத உதவி மற்றும் 6 பில்லியன் பணஉதவியை அமெரிக்காவிடம் கோரியுள்ளது குறிப்பிடத்தக்கவிடயமாகும். 

பலஸ்தீனை அழிக்கமுடியாது இஸ்ரேலின் போலி முகத்திரை கிழிகிறது...

  இஸ்ரேல்   பாலஸ்தீன   போரானது   மிககடுமையாக   நடைபெற்றுவருகிறது   இதில்   இஸ்ரேலானது   எந்தவிதமான சர்வதேச   போர்   சட்டங்களையும்   பின்பற்ற   மாட்டோம்   என்று   குறீப்பிட்டிருந்தது . கடந்த  2  நாட்கள்   முதல்  Gaza  பகுதியில்   போரில்   காயமடைந்தவர்கள்   தங்கவைக்கப்பட்டுள்ளவர்களின் வைத்தியசாலை   மீது   ஏவுகணை   தாக்குதலை   மேற்கொண்டது .  இவ்வாறான   ஒட்டுமொத்த   மனிதகுலத்துக்கும் எதிரான   ஒரு   செயலை   இஸ்ரேல்   செய்வது   முதல்முறைஇல்லை   ஹமாஸ்   ராணுவத்தின்   தாக்குதலின் தீவிரத்தன்மையை   எதிர்கொள்ளமுடியாமல்   தங்களின்   தோல்வியின்   வெளிப்பாடாகவே   இந்த கொடூரதாக்குதலை   இந்த   கடும்போக்கு   யூதர்கள்   செய்துள்ளனர் .  இதுமட்டுமல்லாது   பாடசாலை   ஒன்றும் கிறிஸ்தவர்களின்   பழமையான   ஒரு  Church  ஒன்றும்   குண்டு   வீசி...

Mossad தோல்வி இஸ்ரேல் Vs பாலஸ்தீன போர்

  கடந்த சிலநாட்களாக உலகளவில் இஸ்ரேல் Vs பாலஸ்தீனப்போர் உக்கிரமாக நடந்துவருகிறது. ஊடகங்களில் பெரும்பேசுபொருளாக உள்ள தலைப்பு இதுவாகும். பாலஸ்தீன கிளரச்சியாளர்கள் திடீர் தாக்குதலை மேற்கொண்டனர் தரை, வான்வழியாகவும் நிலக்கீழ் சுரங்கம் வழியாகவும் உள்நுளைந்த Hamas போராளிகள் தாக்குதல்களை மேற்கொண்டனர். Gaza  பிராந்தியத்திலிருந்து 20 நிமிடங்களில் இஸ்ரேலின் பல பகதிகளை இலக்குவைத்து சரமாரி ராக்கெட்தாக்குதல்களை மேற்கொண்டனர் இதனை இஸ்ரேல் தேசம் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. இந்த முறை தாக்குதல்கள் Gaza பகுதிகளிலிருந்து மட்டும் இடம்பெறவில்லை தென் லெபானில் எறிகணைகள் வீசப்பட்டுள்ளன. தற்போது உலகளவில் சர்ச்சையை ஏற்படுத்திய விடயம் என்னவெனில் உலகின் Number one உளவு அமைப்பு என்று அழைக்கப்படும் Mossad ற்கு இந்த தாக்குதல் பற்றி முன்கூட்டியே தெரியவில்லையா அத்துடன் உள்நாட்டுஉளவுஅமைப்பான Shin bet(Shabak) ராணுவ புலனாய்வு பிரிவான Aman என்பனவும் இதை கணிக்க தவறிவிட்டதா? இது ஒரு புலனாய்வு தோல்வியாக உலகம் கருதுகிறது. எனது தனிப்பட்ட கருத்தின்படி முன்னைய காலங்கள் போல ஹமாஸ் ன் நடவடிக்கைகளை கண்காணிக்க Mossad ஆனது Pale...

அமெரிக்காவின் F-35 போர்விமானம் மாயம்! தேடுதல் பணிக்கு பொதுமக்களின் உதவியை இராணுவம் நாடியுள்ளது.

  அமெரிக்காவின் போர்விமானங்களில் அதிநவீன விமானமான F-35 Lightning கடந்த ஞாயிற்றுக்கிழமை Charleston South Carolina வில் காணாமல் போயியுள்ளது. 90 மில்லியன் அமெரிக்கன் டாலர் பெறுமதியான fighter jet காணாமல் போயுள்ளது. அதி நவீன தொழில் நுட்பங்கள் அடங்கிய இந்த போர்விமானம்  stealth தொழில்நுட்பம் ரேடார் மற்றும் Satellite னால் கூட கண்ணில் படாமல் பறக்கக்கூடியது. இந்த போர் விமானத்தை Track செய்வதில் கடினமாக உள்ளதாகவும் அதன் Tracking System பழுதடைந்துள்ளதாக இராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அளவு அதிநவீன விமானம் அதன் கட்டுப்பாடுகளை இழந்த போது விமானி Automatic system மூலம் inject செய்யப்பட்டார். உலக மக்கள் மற்றும் அமெரிக்கர்களின் கேள்வி என்ன வென்றால் அதி நவீன விமானமாக இருந்தும் அதன் தொழில் நுட்பங்கள் கோழாறானாலும் அதை கண்டுபிடிக்க முடியாமல் திணறுவது தொழில் நுட்பத்தின் மீது வைத்த அதீத நம்பிக்கை தவறு என்பதை உணர்த்துகிறது.

சிறுவன் சுட்டு கொலை பற்றிஎரியும் பிரான்ஸ்

  கடந்த  27/06/2023  Algeria  🇩🇿   வம்சாவளியை   சேரந்த  17  வயது  Nahel  எனும்   சிறுவன்   பிரெஞ்சு   பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்டான்   இதனை   தொடரந்து   பிரான்ஸ்இன்   தலைநகர்   தொடங்கி   நாடுமுழுவதும் போராட்டங்கள்   வெடித்தது .  உயிரிழந்த   சிறுவனுக்கு   நீதி   கோரி   போராட்டங்கள்   நடாத்தப்பட்டது   அதன்போது கலவரக்காரர்கள் கோபத்தின்   மிகுதியால்   வர்ததக கட்டடங்கள் , கடைதொகுதிகள் , அடுக்குமாடிகள் , கார் , டிராம் , பஸ்   என்பவற்றை தீக்கிரையாக்கினர் .  இதன்போது   கலவரக்காரர்கள்   பட்டாசுகளை   வெடித்து   பொலிசாரை   விரட்டியடித்தனர் .  ஆறுநாட்களுக்கு   மேலாக  போராட்டங்கள்  தொடரந்துவருகிறது .  பிரான்ஸ்   ஐனாதிபதி   போராட்டக்காரர்களை   அமைதியாகுமாறு   அழைப்புவிடுத்தார் . இந்த   போராட்டங்கள் கலவரமாக   வெடித்து   பல   கடைகள்   சூரையாடப்பட்டது ...

ஈரானில் வலுக்கும் Hijab க்கு எதிரான போராட்டங்கள், தொடரும் கொலைகள்!

  ஈரானில்   கடந்த   சிலவாரங்களாக   இந்த  Hijab  சர்சை   உலகளாவிய   ரீதியில்   கவனம்   பெற்றுள்ளது .  அமெரிக்கா , ஐரோப்பா   மற்றும்   உலகம்   முழுவதும்   போராட்டம்   வெடித்துள்ளது   சரி   இந்தப்பிரச்சினை எங்கிருந்து   தொடங்கியது   என்று   பார்ப்போம் . தெஹ்ரான்   நகரில்   ஹிஜாப்   சரியாக   அணியவில்லை   என   கூறி பொலிஸார்   நடத்திய   தாக்குதலில்   கோமா   நிலைக்கு   சென்ற  22  வயதான   மாஷா   அமினி   என்ற   இளம்பெண் கடந்த     September17ம்  திகதி   உயிரிழந்தார் .  இதனால்   ஈரானில்   போராட்டங்கள்   வெடித்தது   பெண்கள் வீதிக்கு   வந்து   தங்கள்  Hijab  ஐ   நெருப்பு   வைத்து   எரித்தனர் , தலைமுடியைவெட்டியும்மொட்டையடித்தும்   தங்கள் எதிர்ப்பை   அரசுக்கு   வெளிக்காட்டினர் .  இந்த   போராட்டங்கள்   சமூக ...

153பேர் பலி 76 பேர் படுகாயம் தென்கொரியாவில் பயங்கரம்!

கடந்த 29ம் திகதி Halloween கொண்டாடுவதற்காக பெரும்திரளான மக்கள் Itaewon என்ற குறுகிய ந்திக்குள் நுளையமுற்பட்டு கூட்ட நெரிசலில்சிக்கி மூச்சுத்திணறல்,காயம் காரணமாக 56 ஆண்கள் மற்றும் 97 பெண்கள் பலியாகிஉள்ளனர்.  இதில் 4 பேர்பதின்மவயதினர் 95 பேர் 20 வயது உடையவர்கள் மற்றும் 32 பேர் 30 வயது உடையவர்கள்.9 பேர் 40 வயதை உடையவர்கள் 13 நபர்களின் வயது இன்னும் அடையாளம் காணப்படவில்லை. இதில் ஒரு நோர்வே பிரசை மற்றும் ஒரு இலங்கை பிரசை,2 ஐப்பானிய பிரசைகள் மேலும் ஈரானியர்கள்,சீனர்கள்4 பேர்அடையாளம் காணப்பட்டுள்ளனர். Covid-19 கட்டுபாடுகள் தளர்த்தப்பட்டு நடைபெறும் ஒரு கேளிக்கை நிகழ்வு இதுவாகும். இந்த சனக்கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறிஉள்ளனர். தென்கொரிய அதிபர் யூன்சுக்-யோல் விசாரணைகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய பாடம் அந்நிய கலாச்சாரம் நமக்கு பாதிப்பை ஏற்படுத்துவது மட்டுமில்லாது உயிரையே பறிக்கும் என்பது தெளிவாகிறது. தென்கொரியர்கள் Halloween என்ற அமெரிக்க கொண்டாட்டத்தை தங்கள்நாட்டில் கொண்டாடி பல உயிர்களை இழந்துள்ளனர். மக்கள் 2 வருடங்களுக்கு ...