Skip to main content

Posts

Showing posts with the label UK

UK Civil WAR பற்றி எரியும் பிரிட்டன்!!!

  பிருத்தானியாவில் ஓர் நடன பாடசாலை வளகத்திலே 3 சிறுமிகள் கத்திக்குத்துக்கு இலக்காகி படுகொலைசெய்யப்பட்டதை தொடர்ந்து சந்தேக நபர் தொடர்பான அடையாளங்கள் தவறான முறையில் பகிரப்பட்டது.குறித்த கொலையாளி 17வயதுடையவன் அவன் இஸ்லாமியன் என தீவிர வலதுசாரிகளால் பரப்புரை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து பிரிட்டனில் பல பாகங்களில் வெறுப்பு போராட்டங்கள் வெடித்தன தொடர்ந்து கடைகள்,வீடுகள்,கார்கள் என்பன போராட்டக்காரர்களால் அழித்து சேதமாக்கப்பட்டது. இதுவரை 400 ற்கு மேற்பட்டவர்கள் நாடுமுழுவதிலிருந்தும் கைது செய்யப்பட்டுள்ளனர். இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதிகளை குறிவைத்து தாக்குதல்கள்நடத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றன.பிருத்தானியாவின் குடிவரவுக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையிலும் இந்த வன்முறைச்சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. சாலைகளில் தீவிர வலதுசாரிகள் கடைகள்,வணிகநிறுவனங்களை தாக்கி கொள்ளையிடுவதையும்,போலீசாரை பட்டாசுகள் வைத்து தாக்குவதும்,”Islam Out” போன்ற வாசங்களை உச்சரித்தபடியும் வன்முறையில் ஈடுபடுகின்றனர். அவர்கள் முன்னிற்கும் கோட்பாடாக “இங்கிலாந்து ஆங்கிலேயருக்கே” என்பதாகும்.மேலும் வன்முறைகள் மூளாமல் இருக்க பிரதமர...

பிரிட்டனின் அடுத்த பிரதமர் யார்?

கடந்த 20ம் திகதி அன்று Liz Truss அவர்கள் தனது பிரதமர் பதவியிலிருந்து விலகினார். அதனைத்தொடர்ந்து அடுத்த பிரதமர் யார் என்ற கேள்வியில் இந்தியவம்சாவளியைச்சேர்ந்த Rishi Sunak அவர்கள் 100 க்கு மேற்பட்ட கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் உள்ளார். அதிகாரபூர்வமாக பிரதமர் பதவிக்காக போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். பிருத்தானியாவில் பொருளாதாரநெருக்கடி,எரிபொருள்விலையேற்றதிட்டம், mini-budget, பணக்காரர்களுக்கு வரிக்குறைப்பு என்பன 45 நாட்களில் Liz Truss அவர்களை பதவிவிலக காரணமானது. இந்நிலையில் கரீபியன் தீவுகளில் சுற்றுலா சென்ற முன்னார் பிரதமர் Boris Johnson அவர்கள் அவசர அவசரமாக பிருத்தானியா திரும்பியுள்ளார். கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் இவர் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியால் பதவியிலிருந்து அகற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. Boris Johnson, Rishi Sunak, முன்னாள் தற்காப்பு அமைச்சர் Penny Mordant இவர்களில் ஒருவர் பிரதமர் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.