Skip to main content

Posts

Showing posts with the label CanadaTamilNews

உக்ரேன் Vs ரஸ்யா போரால் சரிவடைந்த கனடாவின் பொருளாதாரம்.

  இந்த உக்ரேன் Vs ரஸ்யா போரானது February 20,2014 Cremea ( Crimean peninsula ) ரஸ்யா ஆக்கிரமித்ததிலிருந்து இந்த போரானது தொடங்குகிறது அதன் பின்னர் February 24 2022 ரஸ்யாவானது உக்ரேனை ஆக்கிரமித்ததிலிருந்து தற்போதுவரை இந்த போரானது நடைபெற்றுக்கொணடிருக்கிறது. இந்த போரால் இரண்டு நாடுகளுக்கும் பெரும் பொருளாதாரச்சேதமும்.உயிர்சேதமும் இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது.இந்த பதிவில் உக்ரேன் Vs ரஸ்யாவுடனான போரால் கனடாவின் பொருளாதாரம் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது என்பதனை நோக்குவோம். உக்ரேன் நாடானது ஐரோப்பாவில் ஏழ்மைநாடுகளில் ஒன்றாகும்.அத்துடன் இவ்நாட்டில் ஊழல்கள் அதிகமாக நடைபெறுகின்றன.உக்ரேன் உலகத்தின் ஆயுதங்களுக்கான கறுப்புச்சந்தையாக அறியப்படுகிறது.உலகின் பல பகுதிகளுக்கும் பல அமைப்புக்களுக்கும் ஆயுதங்களை வழங்கும் நாடாகவும் காணப்படுகிறது.கூலிக்காக கொலைசெய்யும் ராணுவத்தையும் கொண்டநாடு மிக முக்கியமாக விவசாயம் சார்ந்த உற்பத்திகளிலேயே தங்கிநிற்கிறது. இந்த உக்ரேன் 1991 வரை அன்றைய USSR (The union of Soviet socialist Republics) லிருந்து பிரிந்து 24,August 1991 தனிநாடாக பிரகடணப்படுத்தப்பட்டது.இந்த USSR லிருந்து...

St. Paul இடைத்தேர்தலில் Don Stewart வெற்றி 30 வருட Liberals கோட்டை தகர்ப்பு

    கனடா மக்கள் அதிகம் எதிர்பார்த்த விடயங்களில் இந்த இடைத்தேர்தல் மிக முக்கியமானதாக அமைந்திருந்தது. கடந்த 30 வருடங்களாக liberal கட்சியின் பலம் பொருந்திய கோட்டையாக St. Paul இருந்துவந்தது. கனடா முழுவதும் தற்போதைய அரசாங்கத்துக்கு எதிரான அதிருப்தி நிலை இருந்துவரும் நிலையில் குறிப்பாக liberals ன் ஆதிக்கம் நிறைந்த பகுதியில் மக்களின் மனநிலை எவ்வாறு உள்ளது என்பதை இந்த தேர்தல் முடிவுகள் காட்டிநிற்கும் என எதிர்பார்க்கப்பட்டது அது போலவே மக்கள் மாற்றத்தை விரும்பி Conservative கட்சியை தெரிவு செய்துள்ளனர். இந்த முடிவானது எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலின் முடிவுகளை எதிரொலிப்பதாக உள்ளது. கடந்த பதிவில் தேர்தல் கருத்துக்கணிப்புக்கள் கனடா மாற்றத்தை விரும்புகிறது எனபதை குறிப்பிட்டிருந்தேன்."ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்" என்பது போல் liberal கட்சியானது அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் குறிப்பாக Ontario மாகாணத்தில் Toronto போன்ற பகுதிகளில் மிகப்பெரும் தோல்விகளை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.  லிபரல் கட்சியின் சார்பில் போட்டியிட்ட Leslie church ஐ காட்டிலும் 590 வாக்குகள் அதிகம் பெற்று co...

ஐரோப்பாவிலிருந்து பற்றிய வலதுசாரிகள் எனும் தீ வீழ்சியடையும் liberals

  கனடாவானது மிகப்பெரிய பொருளாதார மற்றும் அரசியல் சிக்கலில் சிக்கியுள்ளது.கணிசமான கனடிய மக்கள் கனடாவைவிட்டு வெளியேறிக்கொண்டிருப்பது சமூக வலைதளங்களில் பேசுபடுபொருளாக உள்ளது.கனடாவின் பிரதமருக்கான தேர்த்தல் கருத்துக்கணிப்புகள் வெளியாகி தற்போதுள்ள அரசாங்கத்தின் உண்மைநிலையை வெளிக்காட்டியுள்ளது.வீட்டுவாடகை,அத்தியாவசிய பொருட்களின் விலைஏற்றம்,அதிகரித்த குடிவரவு,வாழ்க்கை தரமானது வீழ்ச்சியடைந்துள்ளமை,மருத்துவமனைகள் மக்களின் வரிசை,அதிகரித்த வரி என கடந்த 3 ஆண்டுகளாக மக்கள் தற்போதைய அரசாங்கத்தின் மீது கடும் வெறுப்பில் உள்ளனர் அதனையே கருத்துக்கணிப்புகள் சுட்டிக்காட்டுகின்றது. 16 june 2024 அன்று வெளியான அடுத்த பாராளுமன்ற தேர்தலுக்கான கருத்துக்கணிப்பின் படி தற்போது ஆளும் கட்சியான Liberal கட்சி 4 ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இதன்படி  Conservative கட்சியானது 223 ஆசனங்களை பெறும் என கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது.கனடாவின் பாராளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை 338 ஆகும் இதில் 170 ஆசங்களை பெறும் கட்சியானது ஆட்சியமைக்கமுடியும். 2025 ல் தேர்தல் நடைபெறுவதற்கு 15 மாதங்கள் இருக்கும் நிலையில் இவ்வாறான கருத...

இனி கனடா போகமுடியாதா? 😱 இரண்டுவருட Study Visa தடை

  கனடாவிற்கு வருவதற்கும்/குடியேறுவதற்கும் பலரால் பயன்படுத்தப்படும் ஓரு வழி Student Visa முறையாகும் இதன் மூலம் பல இலட்சம் மக்கள் உலகெங்கிலுமிருந்து வருடாவருடம்கனடாவிற்கு வருகைதந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் பலகாலமாக இலகுவாக இருந்த இந்த முறமை இனி Student visa வில் கனடாவினுள் நுளையவே முடியாததாக மாறிவிட்டுள்ளது.கடந்த 22 ம் திகதி Immigration minister Mr.Marc Miller அவர்கள் முக்கியமான அறிவுப்புக்களை வெளியிட்டுள்ளார் அதில் இனிவரும் 2வருடங்களுக்கு கனடாவிற்கு வருகை தரும் மாணவர்கள் அளவை 36% ஆக குறைக்கப்போவதாகவும் 2023 ஐ ஒப்பிடும் போது 36% வீசாக்களை 2024 ல் குறைக்கப்போவதாகவும் குறிப்பாக Ontario மாகாணத்தில் 50% Student Visa வை குறைக்கப்போவதாகவும் அறிக்கையை வெளியிட்டுள்ளார். இந்த வீசா குறைப்பு Masters & Doctorate மாணவர்களுக்கு பொருந்தாது. அடுத்ததாக student visaவில் கனடாவருபவரின்துணை ஆண்/பெண் இனி வேலைசெய்யமுடியாது இதுவரை இருந்துவந்த Open Work permit முறை Masters & Doctorate படிக்க வரும் மாணவர்களின் துணை ஆண்/ பெண் வேலை செய்யமுடியும். 1 Year Diploma அல்லது 2 Year Diploma படிக்கவருபவர்கள் க...

கனடாவிற்கு Visitor விசாவில் வருபவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள்.

  பல்வேறுபட்ட கனவுகளுடன் கனடாவிற்கு 460,000 பேருக்கு மேற்பட்டவர்கள் இந்த visitor visa வில் கனடாவிற்கு வந்துள்ளனர். இதில் பெரும்பான்மையானோர் கனடாவில் வேலை ஒன்றை பெற்று குடியேறவேண்டுமென்பதே விருப்பம். ஆனால் தற்போது கனடாவின் நிலை மோசமாக உள்ளதால் கனடா மக்கள் தங்கள் வாழ்க்கையை கொண்டு நடத்துவதற்கு பெரும் சிரமப்பட்டுக்கொண்டிருக்கும் காலப்பகுதியில், கனடா சென்றால் வாழ்க்கையே மாறிவிடும் நல்ல பணம் சம்பாதிக்கலாம் என்ற எதிர்பார்ப்புக்களோடு கனடா வந்தவர்களுக்கு நிதர்சனமாக கனடாவின் நிலை அதிர்ச்சியே அளிக்கின்றது. கனடா வந்தபின்னர் பலரும் மன அழுத்தத்துக்கு உள்ளாகின்றனர். பலர் உறவுகளை பிரிந்து இவ்வளவு தூரம் வந்தடைந்திருப்பதாலும் இங்குள்ள காலநிலைக்கு ஈடுகொடுக்க முடியாமலும், வேலையின்மை, திரும்பி சொந்தஊர் போகவேண்டிவருமோ என்ற சிந்தனைகளால் பெரிதும் மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர். அடுத்ததாக வேலையின்மை நீங்கள் கனடாவில் வேலை செய்வதற்கு தகுதியுடையவராக வேண்டுமெனில் SIN (Social Insurance Number) ஐ பெறவேண்டும் Visitor visa வில் வருபவர்கள் அதை பெறமுடியாது. சிலர் பணத்துக்காக வேலைக்கு செல்கின்றார்கள் அவர்களுக்கு 6$ மாத்...

விதிக்கப்படும் வரிகள் சர்வதேசத்திடம் கடன் பெறவே

 இலங்கை கடந்த 3 ஆண்டுகளாக கடும் நெருக்கடியினுள் சிக்கியுள்ளது நாம் அனைவரும் அறிந்ததே தற்போது VAT வரி 15% லிருந்து18% அதிகரித்துள்ளதுடன், 18 மேற்பட்டஅனைத்து இலங்கையர்களும் TIN (Tax Identification Number) வரி கட்டுபவரை அடையாளப்படுத்தும் இலக்க முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் நாம் கவனமாக சிந்திக்க வேண்டிய சில விடயங்கள் உள்ளன. முதலில் ஏன் நாம் வரி செலுத்தவேண்டும் உதாரணமாக மேற்கத்தேய நாடுகளில் வரி முறைமை பல்நெடுங்காலமாக செயல் பாட்டிலிருந்துவருகிறது. முன்னேறிய நாடுகள் இதனால் தம் நாடுகளை அபிவிருத்தி செய்தும் பெறப்படும் வரிப்பணத்தின் மூலமும் கல்வி,போக்குவரத்து,மருத்துவம்,ஓய்வூதியம்,வீடு என்று தரமான வாழ்க்கை முறையை மக்களுக்கு வழங்கிவருகிறது. இந்த முறைமை இலங்கைக்கு பொருந்துமா என்று பார்ப்போமேயானால் நடைமுறைச்சிக்கல்கள் ஏராளம் உள்ளன. இலங்கை மக்கள் ஏற்கனவே அதீத பணவீக்கத்தால் அதிகளவு செலவீனங்களை எதிர்நோக்கி வாழ்க்கையை கொண்டுநடத்துவதற்கு சிரமமப்பட்டுக்கொண்டிக்கும் வேளையில் அவர்களிடமிருந்து வரி அறவிடுவது உண்மையில் ஏற்புடையாதா?  மக்களிடம் பணம் பற்றாக்குறையாக உள்ளது,வாழ்க்கை தரம் உயவில்...

Redlight ticket 325$ அதிகரிக்கப்பட்ட தண்டப்பண விபரம்.

   கடந்த சில மாதங்களாக கனடாவின் Ontario மாகாணத்தில் வீதி நடைமுறைச்சட்டங்கள் மிகுந்த கடுமையாக்கப்பட்டுள்ளது. கவனக்குறைவாக வாகனங்களை செலுத்துவதால் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனை குறைப்பதற்கு அரசு மேற்கொண்டநடவடிக்கைகளில் வீதி விதிமுறைகளை மீறுபவர்கள்மீது தண்டப்பணம் அறவிடப்படுவது வழமை ஆனால் அதன் கட்டணங்கள் தற்போது அதிகரித்துள்ளதுடன் கட்டணங்கள் தொடர்பான அதிகாரபூர்வமற்ற கட்டண விபரம் வெளியாகியுள்ளது அதனை நீங்கள் பார்வையிடலாம். 🇨🇦🇨🇦🇨🇦🇨🇦Canada 🚦 New regulation for Canadian drivers (you must read)💸💰💵 🔳Not carrying driver’s license: $250 🔳After 6 days without a change of new address with MTO: $230  🔳Driving without insurance cause an accident: $ 5000 and license suspended for 5 years 🔳 Through a red light: $ 900 🔳Crossing two solid yellow lines : $500 🔳Turn, U-Turn and  turn violation: $350 🔁 🔳Speeding (from 1-15km over): $250 🔳Speeding (from 16-25km over): $450 🔳Driving too slow 🐢: $399 🔳 Fail to Full stop at Stop Sign ⚠:  $270 🔳...

கனடா வரும் International Students ற்கு ஏற்பட்டுள்ள சிக்கல்கள்!!!

  உலகலாவிய ரீதியில் உயர்கல்வியை தொடர்வதற்காக மாணவர்கள் தேர்வுசெய்யும் நாடுகளில் கனடாவிற்கு முக்கிய இடமுண்டு. இதுவரைகாலமும் பல இலட்சம் சர்வதேசமாணவர்களை கனடாவானது உள்வாங்கி அவர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்களை வழங்கிவருகிறது. ஐக்கிய இராச்சியம் , அமெரிக்கா , அவுஸ்திரேலியா, பிரான்ஸ் என பல நாடுகளில் சர்வதேச ரீதியில் மாணவர்கள் தங்கள் உயர்கல்வி கனவை பூர்த்திசெய்து கொள்ள பயணப்படுகின்றனர். இதில் பெரும்பான்மையான மாணவர்கள் அந்தந்த நாடுகளில் வேலைவாய்புகளை பெற்று அதே நாட்டில் தொடர்ந்து வாழ்ந்தும் வருகின்றனர். ஏனைய உலகநாடுகளை ஒப்பிடும் போது கனடாவானது புதிய மக்களை வரவேற்றும் நாடாகும் இதனால் படித்து முடித்த பின்னர் ஒரு வேலையை பெற்று கனடாகுடியுரிமை பெறுவது மற்றைய நாடுகளுடன் ஒப்பிடும் போது இலகுவானதாகவும் இருந்து வருகிறது. இதன் காரணமாக உலகெங்கிலுமிருந்து மாணவர்கள் Covid - 19 முடிவடைந்து நாடுகள் பழைய நிலைக்கு திரும்பும் போது படையெடுத்தனர். அவர்களின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவு அதிகமானதாகவே இருந்தது. கடந்த December 07 தற்போதைய குடிவரவு மற்றும் அகதிகள் தொடர்பான அமைச்சர் மிகமுக்க...

Ontario வில் திருடப்படும் கார்கள் எண்ணிக்கை அதிகரிப்பு.

  கனடாவின் Ontario மாகாணத்தில் கடந்த சிலவருடங்களாக கார்கள் திருட்டு அதிகரித்துவருகிறது. கடந்த 2022 ம் ஆண்டு 3500 வாகனங்கள் திருடப்பட்ட நிலையில் 2023 இல் 9,747 ஆக அதிகரித்துள்ளது. Honda CR-V , Lexus RX series, Doge RAM 1500 series, Toyota Highlander , Land Rover Range Rover , Ford 150 Series, Jeep Grand Cherokee, Jeep wrangler, Honda Civic, Acura RDX , போன்ற வாகனங்களாகும்.  மேல் குறிப்பிட்ட வாகனங்களை வைத்திருக்கும் உரிமையாளர்கள் மிகவும் கவனமாக செயல்படுவது மிகவும் நல்லது.

தினமும் 39 நபர்கள் கனடாவிலிருந்து நாடுகடத்தப்படுகிறார்கள் அதிர்ச்சி அறிக்கை!!!

  கனடாவானது பல தாசாப்தங்களாக பல இலட்சம் மக்களை கனடாவினுள் வரவேற்றுள்ளது. அத்துடன் கனடாவானது அகதிகளாக தஞ்சம் கோருபவர்களுக்கு அடைக்கலம் வழங்கும் நாடாக இருந்துவருகிறது. இந்நிலையில் 2023 ன் அரையாண்டில் 6 மாதகாலப்பகுதியில் 7032 மக்கள் கனடாவின் CBSA (Canada Border Services Agency) ஆல் நாடுகடத்தப்பட்டுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனை ஒரு நாளுக்கு 39 நபர்கள் என்ற வகையில் நாடுகடத்தப்பட்டுள்ளனர். Parkdale Community legal services ஐ சேர்ந்த Mary Gellatly கருத்து தெரிக்கும் போது 2021 சராசரியாக 21நபர்களும் 2022 ம் ஆண்டில் 23 நபர்களும் சராசரியாக நாடுகடத்தப்பட்டுள்ள எண்ணிக்கையாகும். கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது. எவ்வாறான காரணங்களால் மக்கள் நாடுகடத்தபடுகிறார்கள் என்று நாம் நோக்கினால் Criminality, health issues, Security issues, financial concer or misrepresentation  ns போன்ற காரணங்களுக்காக மக்கள் நாடுகடத்தப்படுவது இடம்பெறுகிறது.  பின்வரும் காரணங்களும் நபர் ஒருவர் கனடாவை விட்டு வாழ்நாள்முழுவதும் உள் நுளைய தடை செய்யப்படலாம். The following...

International students GIC money $20,635 ஆக உயர்வு

  கடந்த December 7 ம் திகதி குடிவரவு மற்றும் அகதிகள்அமைச்சர் Mark Miller அவர்கள் கனடா மாணவர் விசா தொடர்பிலான முக்கியமான அறிவிப்புக்களை வெளியிட்டார் அதன் அடிப்படையில் கனடாவிற்கு மாணவராக வருபவர்கள் GIC ( Guaranteed investment certificate) வங்கியில் வைப்பிலிட்டு காண்பிக்க வேண்டும். இதுவரை ஒரு மாணவருக்கு $10,000 ஆக இருந்தது. தற்போது கனடாவில் நிலவும் பொருளாதார மந்த நிலையால் மற்றும் High Cost-of-Living அதிகரிப்பாலும் $20,635 ஆக உயர்துவதாக அறிவித்துள்ளது. இந்த அறிவுப்பானது international students மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, 

இனி 20h/week மட்டுமே வேலை வழமைக்கு திரும்பும் சட்டம்!!!

  கனடாவில் நீங்கள் ஒரு International Student (IS) ஆக இருந்தால் நீங்கள் வாரம் 20 மணிநேரம் மாத்திரமே வேலைசெய்யமுடியும். இந்த நடைமுறை கடந்தவருட இறுதியில் International student வாரம் ஒன்றுக்கு 20 மணிநேரத்துக்கு மேல் வேலைசெய்யமுடியுமெனவும் இந்த நடைமுறை 2023 December வரை நடைமுறையில் இருக்கும் வகையில் சட்டம் கொண்டுவரப்பட்டது. இதனால் பல மாணவர்கள் முழுநேரவேலைகளை செய்யதொடங்கினார்கள் அதன் விளைவாக பல இலட்சம் மாணவர்கள் வேலை இல்லாமல் ஆக்கப்பட்டதுடன் புதிதாக கனடா வரும் மாணவர்கள் ஒருவேலையை பெற்றுக்கொள்ள பலமாதங்கள் இன்னல்களுக்கு முகம் கொடுக்கவேண்டிவந்தது. மாணவர்கள் தஙகள் கல்விக்கான பணத்தை செலுத்துவதற்காக அதிக நேரம் (Over time) வேலைகளை செய்யத்தொடங்கினர் இதனால் அடுத்த வேலை நேரம்(next shift ) பார்ப்பதற்கு ஊழியர்கள் தேவைப்படவில்லை சுருக்கமாக சொல்லப்போனால் ஒரு மாணவர் 3 நபர்களின் வேலையை பறித்துவிட்டார் என்பதே கணக்கு. எவ்வளவு கொடுமையான விடயம் என்பதை நீங்களே எண்ணிப்பாருங்கள் நீங்கள் எங்கு வேலை தேடினாலும் வேலை எடுப்பவர்கள் மிகவும் குறைவு அத்துடன் அவர்களுக்கு குறைந்த ஊழியர் எண்ணிக்கையில் அதிகநேரம் வேலைசெய்ய ...

"கனடாவில் இனி International Students படித்துவிட்டு நாடு திரும்பவேண்டியது தான்" கனடா எதிர்கட்சி தலைவர் Pierre Poilievre கருத்து!!!

  கனடாவில் குடியேறவேண்டுமென்பது பல இலட்சக்கணக்கானவர்களின் கனவு அதில் பலவழிகளை  பின்பற்றி அந்த கனவை மக்கள் பூர்த்திசெய்து கொள்கின்றனர். இதில் வேலைதேடி கனடாவருபவர்கள் மற்றும் உயர்கல்விவேண்டி கனடா வருபவர்கள் மிக அதிகம், இவ்வாறு கனடாவினுள்வருபவர்களால் கனடா அரசுக்கு பல நன்மைகள் கிடைப்பதுடன் சில பிரச்சனைகளும் ஏற்படுகின்றன. அதில் குறிப்பிடத்தக்க வகையில் international students ஐ ஆண்டுக்கு அதிகமாக உள்வாங்குகின்றது இந்த எண்ணிக்கை வருடாவருடம் மிகஅதிகமாக உயர்ந்துவருகிறது. இதனால் இங்கு கல்விக்காக வரும் மாணவர்கள் தங்குமிடங்களுக்கான கேள்வியை அதிகரிக்கின்றனர் இதனால் கனடா மக்களும் மாணவர்களும் பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர்.  வேறு எந்த உலகநாடுகளையும் ஒப்பிடும்போது  கனடாவினுள் மாணவராக நுளைந்து நிரந்தர குடியுரிமையை இலகுவாக பெறமுடியும் அதனால் உலகளவில் பலர் மாணவர்களாக கனடாவருவதற்கு எத்தனிக்கின்றனர். இதனை பயன்படுத்தி பல மோசடிக்காரர்கள் மாணவர்களை ஏமாற்றி பணம் பறிக்கும் செயற்பாட்டிலும் ஈடுபட்டுவருகின்றனர். சரி இதற்கும் தலைப்பிற்கும் என்ன சம்பந்தம் என நீங்கள் நினைக்கக்கூடும், காரணம் இருக்கிறது...

கனடாவில் வீட்டு வாடகை தொடர்பில் அதிர்ச்சி அறிக்கை

  கனடாவில் வீட்டுவாடகை தொடர்ச்சியாக அதிகரித்துவருகிறது. சராரசரியாக ஒரு வாடகை குடியிருப்பாளர் 2117 $ சராசரியாக செலுத்த வேண்டியுள்ளது.  கனடாவின் பிரபல rentals தளமான Rentals.ca ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பீடு செய்யும் போது இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தின் சராசரி வாடகை தொகையானது சுமார் 9.6 வீதத்தினால் அதிகரித்துள்ளது. கடந்த மே மாதம் முதல் சராசரியாக வீட்டு வாடகை தொகையானது சுமார் நூறு டாலர்களினால் மாதாந்தம் அதிகரித்துச் செல்லும் போக்கு பதிவாகியுள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நாடு முழுவதும் வாடகை தொகை அதிகரித்துள்ளதுடன் புதிதாக கட்டப்படும் வீடுகள் எண்ணிக்கைகள் மிக குறைவாக உள்ள நிலையில் நாட்டினுள் புதிய குடியிருப்பாளர்கள் மற்றும் பெருந்தொகை மாணவர்கள் வருகை தருவதனால் வாடகை வீடுகளுக்கான கேள்வி மிக அதிகளவாக அதிகரித்துள்ளது. 

கனேடிய மக்களுக்கு புத்தாண்டு தொடக்கத்திலேயே காத்திருக்கும் அதிர்ச்சி நிபுணர்கள் வெளிப்படை

கடந்தபதிவில் உலகப்பொருளாதாரம் கடும் சரிவை எதிர்நோக்கும் என IMF எச்சரிக்கைவிடுத்ததினை நீங்கள் வாசித்திரூப்பீர்கள். இதனால் பல நாடுகள் பாதிப்படைய உள்ளன அதில் முக்கியமாக ஐரோப்பிய யூனியன் மற்றும் ஐரோப்பா கண்டத்தினை சார்ந்த நாடுகளே ஆகும்.ஏற்கனவே பிரான்ஸ்சில் எரிபொருளுக்கான வரிசை Germany யில் வேலையில்லா பிரச்சினை,மின்கட்டணம் பலமடங்காக உயர்ந்துள்ளது.ஏனைய சிறு நாடுகளான மால்டோவா,லித்துவேனியா,ஹங்கேரி,குரோசியா,ஸ்லோவாக்கியா போன்றன ஏற்கனவே பொருளாதாரத்தில் நலிந்து நாடே திவாலாகும் நிலையை எட்டியுள்ளது. உதாரணமாக இலங்கையில் நடந்ததைப்போல இதனால் மேற்கத்தேயநாடுகளான அமெரிக்கா,கனடா பாதிப்புக்குள்ளாகும் என எதிர்பார்க்கப்பபடுகிறது.அதன்படி கனடாவின் ரோயல் வங்கியின் பொருளாதார நிபுணர்கள் சில அதிர்சியூட்டும் விடயங்களை தெரிவித்துள்ளனர். 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நாடு பொருளாதார மந்தநிலைக்குள் நுழையும் என்று கனடாவின் ராயல் வங்கியின் பொருளாதார நிபுணர்கள் எதிர்பார்க்கிறார்கள். கனடாவில் கடந்த நான்கு மாதங்களில் மட்டும் வேலை வாய்ப்பு 92,000 குறைந்துள்ளது. மத்திய வங்கி வட்டி விகிதங்களை தொடர்ந்து அதிகரி...