இந்த உக்ரேன் Vs ரஸ்யா போரானது February 20,2014 Cremea (Crimean peninsula ) ரஸ்யா ஆக்கிரமித்ததிலிருந்து இந்த போரானது தொடங்குகிறது அதன் பின்னர் February 24 2022 ரஸ்யாவானது உக்ரேனை ஆக்கிரமித்ததிலிருந்து தற்போதுவரை இந்த போரானது நடைபெற்றுக்கொணடிருக்கிறது. இந்த போரால் இரண்டு நாடுகளுக்கும் பெரும் பொருளாதாரச்சேதமும்.உயிர்சேதமும் இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது.இந்த பதிவில் உக்ரேன் Vs ரஸ்யாவுடனான போரால் கனடாவின் பொருளாதாரம் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது என்பதனை நோக்குவோம்.
உக்ரேன் நாடானது ஐரோப்பாவில் ஏழ்மைநாடுகளில் ஒன்றாகும்.அத்துடன் இவ்நாட்டில் ஊழல்கள் அதிகமாக நடைபெறுகின்றன.உக்ரேன் உலகத்தின் ஆயுதங்களுக்கான கறுப்புச்சந்தையாக அறியப்படுகிறது.உலகின் பல பகுதிகளுக்கும் பல அமைப்புக்களுக்கும் ஆயுதங்களை வழங்கும் நாடாகவும் காணப்படுகிறது.கூலிக்காக கொலைசெய்யும் ராணுவத்தையும் கொண்டநாடு மிக முக்கியமாக விவசாயம் சார்ந்த உற்பத்திகளிலேயே தங்கிநிற்கிறது. இந்த உக்ரேன் 1991 வரை அன்றைய USSR(The union of Soviet socialist Republics) லிருந்து பிரிந்து 24,August 1991 தனிநாடாக பிரகடணப்படுத்தப்பட்டது.இந்த USSR லிருந்து 15 நாடுகள் உருவாகியது.Arminia,Azerbaijan,Belarus,Estonia,Georgia,Kazakhstan,Kyrgyzstan,Latvia,Lithuania,Moldova,Russia,Tajikistan,Turkmenistan,Ukraine, Uzbekistan. கிட்டத்தட்ட 1956 தொடங்கி 1991 வரை இந்த நாடுகள் USSR லிருந்து பிரிந்து தனிநாடுகளாகியது.
இந்த USSR ன் வீழ்ச்சியின் பின்னால் அமெரிக்காவின் பங்கு உள்ளதையாராலும் மறுக்கமுடியாது. உக்ரேனானது உலகின் 7வது மிகப்பெரிய கோதுமை ஏற்றுமதிசெய்யும் நாடாகும்.அத்துடன் சூரியகாந்தி எண்ணை,பசளை உற்பத்தி ஏற்றுமதியையும் மேற்கொள்கிறது.உலகின் 10% கோதுமை தேவையை பூர்த்தி செய்வதுடன் இதன்மூலம் 5.1 Billon dollars களை வருவாயக ஈட்டிக்கொள்கிறது.உலகின் 15% சோளஉற்பத்தியையும்,13% பார்லி உற்பத்தியையும் மேற்கொள்கிறது.முழு ஐரோப்பாவிற்கும் உணவழித்து வந்த நாடாக இந்த உக்ரேன் இருந்து வந்தது.
இந்த உக்ரேன் Vs ரஸ்யா போரினால் உலகளவில் கோதுமைக்கான கேள்வி உலகளவில் அதிகரித்ததுடன் பயிர்ச்செய்கைக்கான இரசாயன மற்றும் இயற்கை உரத்துக்கான கேள்வியும் உலகளவில் அதிகரித்தது.ரஸ்யாவானது இயற்கை எரிவாயு(Liquefied natural gas) ஐரோப்பாவிற்கு செய்து வந்த நிலையில் அதில் தடைகள் ஏற்பட்டன.ரஸ்யாவானது உலகின் இரண்டாவது மிகப்பெரிய இயற்கை எரிவாயு ஏற்றுமதியாளராகும்.ஐரோப்பாவுக்கு Germany,Italy,Belarus,Turkey,Netherlands, போன்ற நாடுகளுக்கு அதிகளவில் LNG விநியோகராக உள்ளது. மேற்குறிப்பிட்ட நாடுகள் ரஸ்யாவின் LNG இனையே நம்பியுள்ளன.2021 காலப்பகுதிவரை ஐரோப்பிய ஒன்றியமானது ரஸ்யாவிடமிருந்து 40% LNG யினை பெற்றுவந்தநிலையில் அது 2023 ல் 8% ஆக குறைவடைந்தது. தற்போது Norway நாடு ஐரோப்பிய ஒன்றியத்துக்கான LNG யினை வழங்கிவருகிறது குறிப்பிடத்தக்க விடயமாகும். ஐரோப்பிய நாடுகள் குளிர்காலத்தைசூடாக்குவதற்கும் LNG இன்றியமையாத ஒன்றாகும் இந்த போரால் LNG ஆன தட்டுப்பாட்டால் ஐரோப்பிய நாடுகளில் மின்சார கட்டணம்,வீடுகள் வணிக தளங்களை சூடாக்குவதற்கான கட்டணங்கள் அதிகரிப்பை கண்டன.இந்த போரால் ஐரோபிய நாடுகள் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளன என்பதை இதன் மூலம் விளங்கிக்கொள்ளக்கூடியதாக உள்ளது.
ரஸ்யா மீது 16,000 மேற்பட்ட பொருளாதார தடைகள் ரஸ்யா மீது விதிக்கப்பட்டுள்ளது.இருந்த போதிலும் ரஸ்யாவின் பொருளாதாரம் NATO நாடுகள் மற்றும் உலகநாடுகளின் பொருளாதாரத்தை காட்டிலும் சிறப்பாகவே செயல்பட்டுவருகிறது.இதற்கு காரணமாக ரஸ்யாவின் நட்புநாடுகளான சீனா,ஈரான் போன்றவற்றின் ஆதரவுஙபெரும் பங்காக அமைந்துள்ளது.இந்த போரானது முடிவடையாத நீண்டு கொண்டு செல்லும் போராகவே காணப்படுகிறது. இதனால் இரண்டு நாடுகளுக்கும் சேதங்கள்,இழப்புக்கள் அதிகம் ஏற்பட்டுள்ளது. NATO நாடுகளின் தொடர் ஆயுத மற்றும் பொருளாதார உதவிகளால் உக்ரேன் தொடர்ந்தும் போரிட்டுக்கொண்டுள்ளது.உக்ரேனின் தரப்பில் ஆளணி பற்றாக்குறையாக உள்ளது. இதற்கு காரணமாக பெருந்தொகை மக்கள் ஐரோப்பிய நாடுகள் மற்றும் கனடா போன்ற வளர்ந்த நாடுகள் உலகின் பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாக புலம்பெயர்ந்துவிட்டனர்.உக்ரேனில் கடந்த 2 வருட போரில் ஏராளமாக வீரர்கள் கொல்லப்பட்டும் காயமுற்றும் அங்கவீனர்களாகவும் ஆகிவிட்டனர். இந்த போர் ஆரம்பித்த சில நாட்களிலேயே Bank of Canada வின் ஆளுநர் இந்த போரால் கனடா பொருளாதாரத்தில் பாதிப்புக்கள் ஏற்படும் எனவும் உணவு,பணவீககம்,பங்குச்சந்தைகளில் இதன் தாக்கங்களை குறிப்பிட்டிருந்தார்.மேலும் பல பொருளாதார நிபுணர்களும் இதனை முண்கணித்திருந்தனர்.இந்த நிலமையின் தீவிரத்தன்மை கனடாவின் வீடுகளுக்கான சந்தையிலும் எதிரொலித்திருந்தது.
கனடாஇதுவரை பொருளாதார உதவிகளாக 12.4Billion dollars களையும் 6.75 Billion dollars களை கடனாகவும் $500 million dollars களை Direct bilateral Loans கடன்களாகவும் 4.5 billion dollar Military Aids களாகவும் 2024 February Kyiv தலைநகருக்கு சென்ற கனடா பிரதமர் பெரும் மதிப்புக்குரிய Justin Trudeau 2024 ல் 3.02 Billion dollars Critical Finacial and military support வழங்கியுள்ளார். கடந்த March 2024 கூடுதலாக $40 million Dollars ராணுவ உதவியை வழங்கியுள்ளது.மேலும் July 11,2024 மேலும் $500 million dollars ராணுவ உதவி இந்த 2024 ற்கு வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.உக்ரேனுக்கான உதவிகள் 2029 வரை தொடரும் என தற்போதையை ஆளும் Liberal கட்சி முடிவெடுத்துள்ளது.
இதுமட்டுமல்லாது கனடாவிற்கு அகதிகளாக வரும் உக்ரேனியர்களுக்கு வயதுவந்த ஒருவருக்கு 3000$ களும் 17வயதுக்கு குறைந்த சிறுவர் ஒருவர் 1500$ பெற்றுக்கொள்ளமுடியும். இவ்வாறான நடவடிக்கைகளாலேயே கனடா பொருளாதாரம் மிகப்பெரிய சீரழிவை சந்தித்தது. இவ்வாறு கனடா தொடர்ந்தும் உக்ரேனுக்கு பணத்தை வாரிவழங்குவதால் கனடா பொருளாதாரம் அதள பாதாளத்திற்கு சென்றுகொண்டிருப்பதுடன் கனடாவின் மொத்த கடன் 1.4 Trillion Dollars ஆக உயர்ந்துள்ளது. இந்த கடன் அளவு 2015 ல் 612.3Billon dollars களாக இருந்தது குறிப்பிடத்தக்க விடயமாகும். இவ்வாறு வாரி வழங்கப்பட்ட பணத்துக்கான பொருளாதார வெற்றிடம கனடாவில் எழுந்தது இதனை நிவர்த்தி செய்ய அதிகப்படியான மக்களை கனடா அதன் கொள்ளளவை காட்டிலும் அதிகமாக குறுகியகாலத்தில் உள்வாங்கியதும் கனடா பொருளாதாரத்தை மேலும் சரிவைநோக்கியே சென்றது.தொடர்ந்து வரித்திணிப்புகள்,பொருக்களின் விலையேற்றமும் அதிகப்படீயான மக்களினால் வீடுகளுக்கான தேவை அதிகரித்தது அடிப்படை தேவைகளுக்கான செலவுகள் முன் எப்போதும் இல்லாத அளவு அதிகரித்தது. உணவுப்பொருட்களின் விலை,Household debt,தனிநபர் கடன்கள் G7 நாடுகளை காட்டிலும் மிக அதிகரித்தது.
Covid-19 லிருந்து விடுபட்டு கனடா பொருளாதாரம் இயங்க ஆரம்பித்த போது கனடா 2 மாபெரும் தவறுகளை இழைத்தது. பணத்தை உக்ரேனுக்கு வாரிஇறைத்தது மிகப்பெரிய தவறு அடுத்ததாக அதிகப்படியான மக்களை உள்வாங்கியது. இதன் விளைவாக பலவீனமாக இருந்த கனடாவின் பொருளாதாரம் பொருளாதார மந்த நிலையாக பரிணமித்தது. அதுவே தற்போது கனடா மக்கள் அனுபவித்துவரும் துன்பங்களுக்கு காரணமாக உள்ளது. இந்த போரானது தொடர்ந்து நீளும்வரை NATO நாடுகளினதும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளினதும் பொருளாதாரம் அதளபாதாளத்திற்கே செல்லும்.எந்தெந்த நாடுகள் தங்கள் பொருளாதாரத்தின் பெரும்பங்கை உக்ரேனுக்கு வழங்கி வரலாற்றி அதீத செலவு வாய்த இந்த போரை நடாத்துகிறார்களோ அவர்களின் பொருளாதாரம் தரைமட்டமாகும் என்பதில் எந்தவித ஐயமுமில்லை.இந்த போரால் NATO நாடுகளுக்கோ அல்லது கனடா விற்கோ கனடா மக்களுக்கோ எந்தவிதமானபயன்கள் விளைந்தன?
இந்த போரை நாம் வேறோர் கண்ணோட்டத்தில் நோக்கவேண்டியுள்ளது அதுவேசாலச்சிறந்தது.உக்ரேன் NATO நாடுகளின் கூட்டமைப்பில் அங்கத்துவம் பெறுவதில் ரஸ்யாவுக்கு விருப்பமின்மையும் அவ்வாறு உக்ரேன் இணைந்தால் அது எதிர்காலத்தில் ரஸ்யாவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக அமையும் என்பதாலேயும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரஸ்யா உக்ரேன் மீதான இந்த ஆக்கிரமிப்பை மேற்கொண்டது குறிப்பிடத்தக்க விடயமாகும்.ரஸ்யாவானது அண்டைய நாட்டில் எதிரி நாடான அமெரிக்கா ராணுவத்தளங்கை அமைப்பதையோ ஏன் அணுவாயுதங்களை ரஸ்யாவுக்கு எதிராக நிலைநிறுத்தப்படுவதையோ என்றுமே விரும்பாது. மேலும் அமெரிக்காவில் வைரஸ்களை ஆய்வுசெய்யும் ரகசிய ஆய்வுகூடங்கள் இருப்பதாக ரஸ்யா குற்றம் சாட்டியுள்ளது. எதிர்காலத்தில் ரஸ்யாவுடன் போர் ஏற்பட்டால் Bio weapon ஆக கொடிய வைரசுகளை ரஸ்யாவில் பரப்புவதே திட்டம். இவ்வாறு பல ஆபத்துக்களை கருத்திற்கொண்டே ரஸ்யா இவ்வாறான ஆக்கிரமிப்பை மேற்கொண்டது.
இந்த போரில் உக்ரேன் வென்றாலும் தோற்றாலும் NATO நாடுகள் உக்ரேனுக்கு கடன் வழங்கியநாடுகளுக்கும் பயன் உள்ளது. இந்த போர் முடிவடைந்தால் பெருமளவான உழைக்கும் ஆண்கள் இறந்திருப்பார்கள் வயது முதிந்தவர்களே எஞ்சியிருப்பார்கள்.வெளிநாடுகளுக்கு அகதிகளாக சென்றவர்கள் போரால் அழிந்த நாட்டுக்கு மீழவரப்போவதும் இல்லை ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல ஐரோப்பாவில் ஒரு ஏழை நாடு உக்ரேன் அதனால் இந்த போருக்காக வாங்கியகடன்களை மீள்செலுத்தமுடியாது. உக்ரேனில் ரில்லியன் டாலர் பெறுமதியான கனிம வளங்கள் உள்ளன கடனை செலுத்த முடியாத நிலையில் நாட்டின் பல பாகங்களை கடன் வழங்கிய நாடுகளுக்கு வழச்சுறண்டலுக்காக வழங்குவதற்காக உக்ரேன் தள்ளப்படும். உக்ரேனால் முதியவர்களையும்,போரில் அங்கவீனமுற்ற நபர்களையும் வைத்து ஊழல் ஊறிப்போன இந்த நாட்டால் பொருளாதாரத்தில் உயரமுடியாது என்பதேநிதர்சனம்.இந்த போரானது வல்லசு நாடுகளின் வளவேட்டைக்காககவும். NATO நாடுகள் தங்கள் ஆயுதங்களை உக்ரேன் மண்ணில் பரிசோதிக்கும் களமாக பயன்படுத்துகிறார்கள்.உக்ரேனும் ரஸ்யாவும் நிலப்பரப்பில் எந்த வித வித்தியாசமும் இல்லாத இடமாகும். இங்கே NATO ஆயுதங்கள் ரஸ்யமண்ணில் பரிசோதிப்பதைப்போல செய்வதுடன் ரஸ்யாவின் தாக்குதல் நடவடிக்கைகளை ஆய்வுசெய்கின்றன.எதிர்காலத்தில் ரஸ்யாவுடன் ஓர் போர் மூண்டால் அதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த NATO நாடுகள் தங்கள் ஆயதங்களை அங்கே குவிக்கிறது.தினமும் உக்ரேன் போரில் million dollars செலவுஏற்படுகிறது ஆயுத இழப்புக்கள் அவர்கள் பயன்படுத்தும் ஆயதங்கள் ஏவுகணைகள்,யுத்த தாங்கிகள் million dollars பெறுமதிவாய்ந்தவைகளாகும்.முடிவுறா பெருஞ்செலவு செய்துவரும் ஒரு போராகவே இது தொடர்கிறது.
Comments
Post a Comment