கனடா மக்கள் அதிகம் எதிர்பார்த்த விடயங்களில் இந்த இடைத்தேர்தல் மிக முக்கியமானதாக அமைந்திருந்தது. கடந்த 30 வருடங்களாக liberal கட்சியின் பலம் பொருந்திய கோட்டையாக St. Paul இருந்துவந்தது. கனடா முழுவதும் தற்போதைய அரசாங்கத்துக்கு எதிரான அதிருப்தி நிலை இருந்துவரும் நிலையில் குறிப்பாக liberals ன் ஆதிக்கம் நிறைந்த பகுதியில் மக்களின் மனநிலை எவ்வாறு உள்ளது என்பதை இந்த தேர்தல் முடிவுகள் காட்டிநிற்கும் என எதிர்பார்க்கப்பட்டது அது போலவே மக்கள் மாற்றத்தை விரும்பி Conservative கட்சியை தெரிவு செய்துள்ளனர். இந்த முடிவானது எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலின் முடிவுகளை எதிரொலிப்பதாக உள்ளது. கடந்த பதிவில் தேர்தல் கருத்துக்கணிப்புக்கள் கனடா மாற்றத்தை விரும்புகிறது எனபதை குறிப்பிட்டிருந்தேன்."ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்" என்பது போல் liberal கட்சியானது அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் குறிப்பாக Ontario மாகாணத்தில் Toronto போன்ற பகுதிகளில் மிகப்பெரும் தோல்விகளை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
லிபரல் கட்சியின் சார்பில் போட்டியிட்ட Leslie church ஐ காட்டிலும் 590 வாக்குகள் அதிகம் பெற்று consecutive கட்சியை சார்ந்த Don Stewart வெற்றி பெற்றார்.
nithuvithu7@gmail.com
ReplyDelete