கனடாவில் கடந்த சிலமாதங்களில் பல குடிவரவு மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன.அவை எதிர்காலத்தில் கனடா வரஇருப்பவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துவதாகவே அமைந்துள்ளது. முக்கியமான குடிவரவு மாற்றங்களை இந்த தளத்திலும் எனது YouTube Sarujan View தளத்தில் பார்வையிடலாம். இந்த பதிவில் கனடாவில் குடிவரவு மாற்றங்களையும் தரவுகளையும் பார்ப்போம். கனடிய அரசானது கடந்த 2023 இல் 471,550 நபர்களுக்கு நிரந்தர குடியுரிமையை(PR) வழங்கியுள்ளது.இந்த எண்ணிக்கையானது கடந்த 2022 ல் 437,600 ஆகும் அத்துடன் 2024ம் ஆண்டுக்கான தொகையாக 485,000 நபர்களை நிரந்தர குடியுரிமையாளர்களாக்க கனடா திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் கனடா வருடா வருடம் அதிகப்படியான மக்களுக்கு நிரந்தர வதிவுரிமை வாய்ப்பை வழங்குகின்றது குறிப்பிடத்தக்க ஓர் விடயமாகும்.
கடந்த ஆண்டு 2023 Spousal Sponsorship மூலம் 75,185 புதிய Permanent Residency ஐ பெற்றுள்ளனர்.இந்த எண்ணிக்கை கடந்த 2022 ஐ ஒப்பிடும்போது 17.2% அதிகமாகும் 2022 இல் 64,145 பேர் வரவேற்கப்பட்டிருந்தனர். அடுத்ததாக parents Grand parents (PGP) கடந்த 2023 இல் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.கடந்த 2023 டிசம்பர் வரையான கணக்கெடுப்பின்படி 3.7% அதாவது 28,280 இந்த program மூலமாக புதிய permanent residence ஐ பெற்றுள்ளனர்.இந்த எண்ணிக்கை 2022 இல் 27,270 ஆகும்.
கனடாவில் 2024 485,000 புதிய நிரந்தர குடியுரிமைகள் வழங்கப்பட உள்ளது அதில் 2024 ன்முதன் 3மாதங்களில் 121,620 புதிய PR குடியேற்றம் பெற்றுள்ளனர் இதில் 52,720 பேர் Ontario மாகாணத்திற்கும்17,745 British Colombia மாகாணத்திற்கும் ஆகும். இந்த எண்ணிக்கை கடந்த 2023 ல் 145,495 ஆக காணப்பட்டது. 2022 ல் 113,805 ஆகும். கனடாவானது
2024 - 485,000 Permanent Residents
2025 - 500,000 Permanent Residents
2026 - 500,000 Permanent Residents ஐ உள்வாங்க திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
Comments
Post a Comment