கனடாவானது மிகப்பெரிய பொருளாதார மற்றும் அரசியல் சிக்கலில் சிக்கியுள்ளது.கணிசமான கனடிய மக்கள் கனடாவைவிட்டு வெளியேறிக்கொண்டிருப்பது சமூக வலைதளங்களில் பேசுபடுபொருளாக உள்ளது.கனடாவின் பிரதமருக்கான தேர்த்தல் கருத்துக்கணிப்புகள் வெளியாகி தற்போதுள்ள அரசாங்கத்தின் உண்மைநிலையை வெளிக்காட்டியுள்ளது.வீட்டுவாடகை,அத்தியாவசிய பொருட்களின் விலைஏற்றம்,அதிகரித்த குடிவரவு,வாழ்க்கை தரமானது வீழ்ச்சியடைந்துள்ளமை,மருத்துவமனைகள் மக்களின் வரிசை,அதிகரித்த வரி என கடந்த 3 ஆண்டுகளாக மக்கள் தற்போதைய அரசாங்கத்தின் மீது கடும் வெறுப்பில் உள்ளனர் அதனையே கருத்துக்கணிப்புகள் சுட்டிக்காட்டுகின்றது.
16 june 2024 அன்று வெளியான அடுத்த பாராளுமன்ற தேர்தலுக்கான கருத்துக்கணிப்பின் படி தற்போது ஆளும் கட்சியான Liberal கட்சி 4 ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இதன்படி
Conservative கட்சியானது 223 ஆசனங்களை பெறும் என கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது.கனடாவின் பாராளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை 338 ஆகும் இதில் 170 ஆசங்களை பெறும் கட்சியானது ஆட்சியமைக்கமுடியும். 2025 ல் தேர்தல் நடைபெறுவதற்கு 15 மாதங்கள் இருக்கும் நிலையில் இவ்வாறான கருத்துக்கணிப்பு ஆளும் கட்சியை கதிகலங்க வைத்துள்ளது இதன்மூலம் Conservative கட்சியானது மிகப்பெரிய பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என்பதில் சந்தேகமில்லை. இதில் குறிப்பிடத்தக்க விடயமாக NDP (New Democratic Party) ஆனது தனது மக்கள் ஆதரவை பெருக்கிக்கொண்டிருக்கிறது. இடதுசாரியான Liberals இதுவரை கனடியர்கள் பெரும் ஆதரவை பெற்று தொடர்ந்து ஆட்சியிலிருந்தனர் ஆனால் தற்போது அவர்கள் நிலையானது எதிர்வரும் தேர்தலில் 20% வாக்கு சதவீதத்தை எட்டுவதே கடினம் என்பதே நிதர்சனமாகும். Conservative ஆனது வலது சாரிகளாகும் அவர்கள் கனடிய மக்களின் உரிமைகளுக்கே முன்னுரிமை வழங்குவார்கள்,சட்டங்கள் கடுமையாக்கப்படும்,கனடாவிற்கு குடிபெயர நினைப்பவர்கள் நிலை நிட்சயம் கடினமானதாகவே அமையும்.கனடிய சட்டங்களை ஏமாற்றுபவர்கள் தண்டிக்கப்படுவார்கள்,கனடியர்களுக்கு முன்னுரிமை,வேலைவாய்ப்பு அதிகரித்து வரிகள் சீர்செய்யப்படும்.Liberals மிகப்பெரிய பாடத்தை கற்றுக்கொள்ளும் தேர்தலாக நிட்சம் இது அமையும் கனடா மாற்றத்தை விரும்புகிறது கனடியர்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்.
Comments
Post a Comment