முன்னைய பதிவில் அமெரிக்கா அதன் உள்நாட்டில் எதிர்நோக்கிவரும் சவால்களை அலசியிருந்தேன். அமெரிக்காவில் அளவுக்குமிஞ்சிய துப்பாக்கி கலாச்சாரம்,போதைப்பொருள்பாவனை,அதிகரித்த வெளிநாட்டு மக்களின் குடியேற்றம்,சுகாதாரத்துறையில் பிரச்சனைகள், என்று பல உள்ளக பிரச்சனைகளை எதிர்கொண்டு வருவதனால் அமெரிக்கா வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு அமெரிக்கா உலகின் வலிமையான நாடாக தோன்றினாலும் உண்மையில் பல முன்னேறிவரும் 3ம் உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் பல விடயங்களில் பின்தங்கியே உள்ளது.
இரண்டாம் உலகப்போரின் பின்னரே அமெரிக்க பேரரசு உலகின் வல்லரசாக உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.பேர்ள் துறைமுகத்தின் மீது ஐப்பான் தாக்குதலை மேற்கொண்டது இதன் மூலம் இரண்டாம் உலகப்போரில் அமெரிக்கா, இங்கிலாந்து,ரஸ்யா என நேசநாடுகள்(Allied forces) அமெரிக்க அதிபர் Franklin D Roosevelt ரஸ்யா சர்வாதிகாரி Joesph Stalin இங்கிலாந்து பிரதமர் Winston Churchill நேச அணி வெற்றியை ஈட்டியது. ஐப்பானின் ஹிரோசிமா,நாகசாகி மீது அமெரிக்கா அணுகுண்டுவீசி உலகுக்கே தனது அணுஆயுதபலத்தை காட்டி பயமுறுத்தியது, அவ்வாறே அமெரிக்கா தலைமையிலான உலக ஒழுங்கு ஆரம்பமானது. கம்யூனிசத்தை அழிக்க 1950 தொடங்கி 1970 வரை கொரியப்போர்,வியட்நாம் போர், தென்னமெரிக்காவில் CIA மூலம் ஆட்சி கலைப்பு, கம்யூனிசத்தை தோற்கடிக்க மறைமுக ராஐதந்திர போர்கள்,சூழ்ச்சிகள், உலக கச்சா எண்ணை வணிகத்தை தனது கட்டுப்பாட்டினுள் வைத்து மத்திய கிழக்கில் பொம்மை ஆட்சிகளை நிறுவி இடைவிடாத போர்களை நடாத்தி உலகெங்கிலும் பல நாடுகளில் ராணுவதளங்களை நிறுவி எதேச்சை அதிகாரத்துடன் அடாவடி யான செயல்களையே செய்துவந்துள்ளது. ஆனால் இனி அந்த விடயங்களை திரும்பவும் அமெரிக்காவினால் செய்யமுடியாது மறைமுகமாக உக்ரைனுக்கு ஆதரவாக இஸ்ரேலுக்கு ஆதரவாக போரில் நிற்கவே முடியும் இனி அமெரிக்கா நேரடியாக களம் காணுவது அதன் பேரரசையே அத்திவாரத்துடன் அழித்துவிடும் என்று தெரியும். அத்துடன் அமெரிக்கா போல பல நாடுகள் பலம் பொருந்தியனவாக வளரந்துவிட்டன இந்தியா,சீனாவை கூறலாம்.
அமெரிக்காவின் எதிரி ரஸ்யா என்றே பல்நெடுங்காலமாக உலகத்தில் உள்ள கருத்து உண்மையில் சீனா அமெரிக்காவுக்கு சரிக்கு சமனாக வளரந்துவிட்டது ஏன் குறிப்பிட்டு சொன்னால் அமெரிக்காவைவிட அசுர வளர்ச்சி கண்டுள்ளது.டிரம் அமெரிக்காவின் அதிபராக இருந்தபோது பல பொருளாதார தடைகளை தேடி தேடி விதித்ததை மீண்டும் நினைவுபடுத்தி பாருங்கள். சீனா கடந்த தசாப்தத்தில் சீனாவை அமெரிக்கா கடுமையாக எதிர்ப்பதை நீங்கள் கண்கூடாக பாரக்ககூடியதாக உள்ளது இதுவே சீனாவின் வளர்ச்சிக்கா எடுத்துக்காட்டு. சீனா மட்டுமல்ல இந்தியாவும் விரைவான வளரச்சியை கண்டுகொண்டிருக்கிறது அத்துடன் முன்பைபோல அமெரிக்காவின் பேச்சை இந்தியா கேட்பதில்லை தன்னிச்சையான முடிவுகளையே எடுத்துவருகிறது. நீங்கள் நினைக்கலாம் இந்தியாவும் அமெரிக்காவும் நட்பு நாடுகள் தானே என்று இந்த பூகோள அரசியலில் நட்பு நாடுகள் என்பது ஒரு காரியத்திற்காக நட்புறவாக மாறுவார்கள் அந்த காரியம் முடியும் வரை நண்பர்களே இங்கே நீண்ட கால நட்புநாடுகள் என்றும் பகைநாடுகள் என்று எவையும் இருந்ததில்லை காலமும்,சூழ்நிலையும்,நிறைவேறவேண்டிய காரியங்களுக்காக எல்லாம் மாற்றமடையும். அமெரிக்க இந்திய நட்பு இலங்கை விடயத்தில் மட்டுமே நீடிக்கிறது. சீனா இலங்கையில் பலமாவது இந்தியாவுக்கும் எதிரியானஅமெரிக்காவுக்கும் ஆபத்து ஆதலால் ஒரு பொது எதிரியைஎதிர்க ஒன்றாக கூடியுள்ளனர் இந்த நட்பு ஒரு குறிக்கோளை முன்வைத்தே உள்ளது.
"இப்போது உலகில் நடைபெற்றுவரும் போர்களைவைத்து அதில் அமெரிக்காவின் பங்கினையும் இந்த போர்களின் முடிவால் அது எவ்வாறு அமெரிக்காவின் வீழ்ச்சிக்கு காரணிகளாக அமையும் என்பதனையும்,அமெரிக்கா வீழச்சிபாதையில் உள்ளதையும் நிறுவுவோம்."
முதலில் உக்ரேன் Vs ரஸ்யாபோரை எடுத்து நோக்குவோம் இக்ரேனுக்கு ஆதரவாக அமெரிக்கா தலைமையிலான NATO நாடுகளளும் ரஸ்யா எதுவித நாடுகளின் அதரவுஇன்றி February 24 2022 இல் இருந்து போரிட்டுவருகிறது. அமெரிக்காவும் அதன் NATO நாடுகளும் சேர்ந்து ரஸ்யா மீது பல விதமான பொருளாதார தடைகளை விதித்தன இனி ரஸ்யா வீழந்துவிடும் போரிட முடியாது என்று அறிக்கைகள் விட்டனர் ஆனால் ரஸ்யா பல புதிய ராணுவதளபாடங்களை உற்பத்தி செய்து இப்போதுவரை எந்த தடங்கலுமின்றி போரிட்டுவருகிறது. ரஸ்யாவினையும் அதன் பொருளாதாரத்தையும் எதுவும் செய்யமுடியவில்லை, இது அமெரிக்காவின் முதல் தோல்வி உக்ரேனுக்கு அமெரிக்கா உட்பட NATO நாடுகளான UK,Poland,Germany,Norway,Denmark,Sweden என ஆயுதங்களை வாரிவழங்கியது அத்துடன் அவர்களுடைந ரேடார் தொழில்நுட்பம், ராணுவ பயிற்சி, கடனாக பணம் என வழங்கியது இருந்த போதிலும் உக்ரேன் போரில் பெரும் இளப்புகளை சந்தித்துவருவதுடன் America எதிர்பாரத்த முன்னேற்றங்களை எட்டவில்லை இது அமரிக்காவின் இரண்டாவது தோல்வி அமெரிக்கா அமெரிக்கர்களின் வரிப்பணத்தை உக்ரேனுக்கு வழங்குவது மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது அமெரிக்கா மட்டுமல்ல NATO நாடுகளிலும் மக்கள் அதன் அரசாங்கங்களுக்கு எதிராக மக்கள் வரிப்பணம் போருக்காக வழங்கப்படுவதை கண்டித்து ஆர்ப்பாட்கள் நடைபெற்றது, குறிப்பாக அமெரிக்காவில் நடைபெற்ற போராட்டங்களால் அமெரிக்க அரசு பணம் வழங்குவதை நிறத்தியது அதற்கு மக்கள் காரணமாக இருந்தாலும் உக்ரேனால் இந்த போரில் அமெரிக்கா எதிர்பார்த்த இலக்குகளைஅடையவில்லை என்பதும் காரணமாகும். இது அமெரிக்காவின் மூன்றாவது தோல்வி இதுமட்டுமல்லாது உலகளவில் உக்ரேன் ரஸ்யா போருக்கு காரணம் அமெரிக்காவே அதன் ஆயுத பண உதவியாலேயே இந்த போர் நீடிக்கிறது என்பதை உலக மக்கள் கண்டிக்க ஆரம்பித்தனர் இதனால் எதுவும் செய்யமுடியாமல் தோல்வியடைந்துள்ளது அமெரிக்கா நான் மேலே குறிப்பிட்டதைவிட மேலும் பல ஆதாரங்கள் அமெரிக்கா தந்திரோபாய ரீதியில் தோல்வியடைந்துள்ளதை காட்டுவதாக உள்ளது.
அடுத்ததாக கடந்த October 07 2023 லிருந்து அமெரிக்க ஆதரவுடன் நடைபெற்றுவரும் இஸ்ரேல் Vs பாலஸ்தீன போர் இதில் 180 நாட்களுக்கு மேலாக நடந்துவரும் நிலையில் உலகின் தலைசிறந்த ராணுவமாக சொல்லப்பட்ட இஸ்ரேல் படுதோல்வியை சந்தித்து வருவதனையும் இஸ்ரேல் ராணுவத்துனர் கொத்து கொத்தாக கொல்லப்படுவதுடன் இஸ்ரேலின் தயாரிப்பான சிறந்த Tank ஆக சொல்லப்பட்ட merkava தாங்கி யாசின் RPG தாக்குதல்களால் அழிக்கப்படும் காணொளிகள் உலகெங்கிலுள்ள மக்களால் பார்வையிடப்பட்டது. அமெரிக்காவின் ஆதரவின்றி ஒருநாள் போரைகூட இஸ்ரேல் தாக்குபிடிக்க முடியாது என்பது உலகுக்கு வெளிச்சமாகியுள்ளது.அத்துடன் இஸ்ரேல் மேற்கொள்ளும் இனப்படுகொலை தாக்குதல்களில் இருந்து அதனை காப்பது அதன் நண்பன் அமெரிக்காவே அதனால் உலகெங்கிலும் எதிர்ப்பையும் வெறுப்பையும் சம்பாதித்துள்ளது. இந்த போரில் அமெரிக்கா, இஸ்ரேல் நினைத்தால் போல் எதுவும் நடைபெறவில்லை எவ்வாறு உக்ரேன் Vs ரஸ்யா போரில் தோல்வியை கண்டதோ அதைவிட பல மடங்கு தோல்வி மற்றும் உலக மக்களால் இகழப்பட்டும் வருகிறது அமெரிக்கா. இஸ்ரேலின் பக்கத்துநாடான லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பும், யேமன் நாட்டின் ஹைதிகள் கப்பல்களை செங்கடலின் நுளையவிடாமல் தாக்குதல்களை மேற்கொண்டுவருகின்றனர். ஆனால் அந்த ஹைதிகளை அமெரிக்காவும் அதன் கூட்டணிநாடுகளாலும் எதுவும் செய்ய முடியவில்லை அமெரிக்காவின் எதிரிகள் பட்டியல் நீள்வதுடன் தோல்விகள் அதிகரித்தே செல்கிறது. உலக அளவில் பேரரசு என்ற விம்பம் உடைந்து சிதறுகிறது.
சீனா Vs தாய்வான் பிரச்சனையில் தாய்வானின் பக்கமே அமெரிக்காஉள்ளது. சீனா தாய்வான் போர்தொடுத்தால் அமெரிக்கா எதிர்ப்பை தெரிவிக்கும் என்று சில ஆண்டுகளாக பூச்சாண்டி காட்டி வந்தது. மேற்குறிப்பிட்ட இரண்டு போர்களில் படுதோல்வியடைந்துள்ளது ஆதலால் இன்னுமொரு போரைதொடக்கி தோல்வியடைய அமெரிக்கா நிட்சயம் முனையாது. தாய்வானை சூழ உள்ள தென்சீனக்கடல் சீனாவின் வசமே உள்ளது அதனால் அமெரிக்காவுக்கு அது ஒரு பலவீனம் அத்துடன் அமெரிக்கா இந்த போரில் நுளைந்தால் நிட்சம் சீனாவுக்கு சார்பாக ரஸ்யா,வடகொரியா நிட்சயம் இணையும் இது அமெரிக்காவை தற்கொலைக்கு இட்டு செல்லும் என்பது அமெரிக்காவுக்கு நன்கே தெரியும். அமெரிக்கா பலவீனமானது,இனியும் பேரரசு என்ற விம்பத்தை தொடரமுடியாது. படிப்படியாக வீழந்து கொண்டுள்ளது என்பதற்கு மேற்கூறப்பட்ட விடயங்களே ஆதாரம். எந்த ஒரு பேரரசும் ஓரிரு வருடங்களில் வீழாது அதற்கு சில தசாப்தங்கள் எடுக்கும் ஆதலால் அமெரிக்கா முற்றுமுழுதாக வீழவில்லை அதன் வீழ்ச்சி பாதையில் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது என்பதை நாம் எடுத்துக்கொள்ளலாம். உலக வரலாற்றில் வீழத்த முடியாத பேரரசு என்று எதுவும் இருந்ததில்லை அந்த வரிசையில் தற்போது அமெரிக்கா உள்ளது அதுவே நிதர்சனம்.கடந்த வருடம் July 17 அன்று வீழும் அமெரிக்க பேரரசு என்ற முதலாவது பதிவை இட்டிரந்தேன் அதன் தொடர்சியாக வெளியக விடயங்களை வைத்து அமெரிக்காவின் வீழ்ச்சியை நிறுவியுள்ளேன். இந்த பதிவில் நடைபெற்றுவரும் போர்களை வைத்து அமெரிக்க பேரரசின் வீழ்ச்சியை ஆதாரங்களுடன் குறிப்பிட்டுள்ளேன் இனிவரும் காலத்தில் உலகில் அமெரிக்காவின் தாக்கத்தையும் நடைமுறை விடங்களையும் வைத்து அதன் வீழ்ச்சியை ஆராய்வோம். இதுவரை இந்த பதிவினை வாசித்தமைக்கு மனமார்ந்த நன்றிகள்.
Comments
Post a Comment