பல்வேறுபட்ட கனவுகளுடன் கனடாவிற்கு 460,000 பேருக்கு மேற்பட்டவர்கள் இந்த visitor visa வில் கனடாவிற்கு வந்துள்ளனர். இதில் பெரும்பான்மையானோர் கனடாவில் வேலை ஒன்றை பெற்று குடியேறவேண்டுமென்பதே விருப்பம். ஆனால் தற்போது கனடாவின் நிலை மோசமாக உள்ளதால் கனடா மக்கள் தங்கள் வாழ்க்கையை கொண்டு நடத்துவதற்கு பெரும் சிரமப்பட்டுக்கொண்டிருக்கும் காலப்பகுதியில், கனடா சென்றால் வாழ்க்கையே மாறிவிடும் நல்ல பணம் சம்பாதிக்கலாம் என்ற எதிர்பார்ப்புக்களோடு கனடா வந்தவர்களுக்கு நிதர்சனமாக கனடாவின் நிலை அதிர்ச்சியே அளிக்கின்றது.
கனடா வந்தபின்னர் பலரும் மன அழுத்தத்துக்கு உள்ளாகின்றனர். பலர் உறவுகளை பிரிந்து இவ்வளவு தூரம் வந்தடைந்திருப்பதாலும் இங்குள்ள காலநிலைக்கு ஈடுகொடுக்க முடியாமலும், வேலையின்மை, திரும்பி சொந்தஊர் போகவேண்டிவருமோ என்ற சிந்தனைகளால் பெரிதும் மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர். அடுத்ததாக வேலையின்மை நீங்கள் கனடாவில் வேலை செய்வதற்கு தகுதியுடையவராக வேண்டுமெனில் SIN (Social Insurance Number) ஐ பெறவேண்டும் Visitor visa வில் வருபவர்கள் அதை பெறமுடியாது. சிலர் பணத்துக்காக வேலைக்கு செல்கின்றார்கள் அவர்களுக்கு 6$ மாத்திரமே வழங்கப்படுகிறது. உண்மையில் Ontario மாகாணத்தில் அடிப்படை சம்பளமாக 16.55$ வழங்கப்படுகிறது. Visitor visa வில் வந்தவர்கள் என்பதால் தமிழ் கடைகளில் மிகக்குறைந்த சம்பளத்துக்கு வேலைசெய்கிறார்கள். ஆனால் இவ்வாறு வேலை செய்பவர்கள் மிக மிக குறைவு பலரும் வேலை ஒன்றை பெற்றுக்கொள்வதில் பெரும் சிரமத்தையே எதிர்நோக்குகின்றனர்.
அடுத்ததாக இவ்வாறு visitor visa வில் வருபவர்களை குறிவைத்து மோசடிகளும் நடைபெறுகின்றன. குறிப்பிட்ட தொகை தருமாறு கூறி வேலை ஒன்றை நாம் பெற்றுக்கொடுக்கிறோம் என்று ஏமாற்று வேலைகள் நடைபெறுகிறது.தற்போது கனடாவில் பொருளாதார பிரச்சனையால் வேலை ஒன்றை பெறுவது கடினம் நீங்கள் பணம் செலுத்தி ஒரு வேலை எடுப்பதற்கான சாத்தியங்கள் குறைவு.வீணாக பணத்தை கொடுத்து ஏமாந்துவிட்டு திரும்ப இலங்கை திரும்புவதில் எந்த விதமான அர்த்தமுமில்லை "சிந்தித்து செயல்படுங்கள்"
பலரும் visitor visa வில் வந்து Asylum புகலிடம் கோரலாம் என்று குறிப்பிடுகிறார்கள் உண்மையில் எத்தனை பேர் இவ்வாறு புகலிடம் கோரி அதை சாத்தியமாக்கியுள்ளார்கள் என்பது கேள்விக்குறி? நீங்கள் கனடாவிற்கு ஒரு பார்வையாளர்/விருந்தினராக வந்து எப்படி எனக்கு இலங்கையில் உயிருக்கு ஆபத்து என்று கூறி புகலிடம் பெறமுடியும்? உண்மையில் உங்களுக்கு உயிர் அச்சுறுத்தல் இருக்குமேயானால் நீங்கள் புகலிடம் கோருவது சரியே. இதில் நான் மேற்குறிப்பிட்டது சில பிரச்சனைகளை இதை விட பல பிரச்சனைகளுக்கு visitor visa வில் வந்தவர்கள் முகம் கொடுக்கிறார்கள்.
Comments
Post a Comment