முதலீடு என்னும் சொல்லை நம்மில் பலர் அதிகம் தடைவைகள் எமது வாழ்க்கையில் கேட்டிருப்போம் பலர் அதன் அர்த்தத்தை தெரிந்தும் உள்ளோம். "An investment is an asset or item acquired with the goal of generating income or appreciation"
இதுவே முதலீட்டுக்கான வரைவிலக்கணமாக குறிப்பிடப்படுகிறது. முதலீட்டில் பலவகைகள் உள்ளன இலகுவாக கூறினால் நீங்கள் ஒரு பொருளைகொள்வனவு செய்வதன் மூலமோ அல்லது பணத்தை முதலீட்டுவதன் மூலம் காலப்போக்கில் நீங்கள் முதலிட்ட பணத்தினை விட அதிகபணத்தை பெறுதல்/ கொள்வனவு செய்த பொருட்களை விற்பனை அல்லது பரிமாற்றம் மூலம் லாபம் பெறுதல் உதாரணமாக தங்கத்தினை கூறமுடியும். நீங்கள் இன்று ஓர் குறிப்பிட்ட தொகைக்கு தங்கத்தை கொள்வனவு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம் நிட்சயமாக அடுத்துவருடங்களின் அந்த தங்கத்தின் பெறுமதி நிட்சயம் அதிகரிக்கும் இதுபோலவே மக்கள் பங்குச்சந்தை(Stock market),Indexfund, Real Estate, bonds,ETF, Gold ETF, போன்று பலவகையான முதலீடுகள் உள்ளன. இதில் சில முதலீடுகளில் ஆபத்துக்களும் உள்ளன இருந்த போதிலும் மக்கள் உலகெங்கிலும் முதலீடுகளை செய்து கொண்டே உள்ளனர்.
நீங்கள் ஏன் முதலீடு செய்யவேண்டும்?
நீங்கள் வேலை செய்வதன்மூலமாகவோ அல்லது வணிகம் ஒன்றைநடாத்துவதன் மூலம் பணத்தை ஈட்டமுடியும். இங்கே காலத்துடன் நீங்கள் சம்பாதிக்கும் பணம் பெறுமதியிழக்குமென்பதை மறவாதீர்கள்.இப்போது 100$ நீங்கள் வாங்கும் பொருட்களை அடுத்த 20 வருடங்கள் கழித்து அதே 100$ வாங்கமுடியாது.காலத்துடன் பணம் பெறுமதியிழக்கும் பணத்தை வங்கியில் வைப்பிலிட்டு வைப்பது எந்த விதத்திலும் நீண்டகாலத்திற்கு பயனளிக்காது. உங்களிடமிருக்கும் பணம் மதிப்பிழக்காமல் இருக்கவேண்டுமாயின் 100$ களை 20 வருடங்களில் 1000$ மாற்றமுடியுமானால் நீங்கள் சிறந்தவர். நீங்கள் உங்கள் பணத்தை பெருக்குகிறீர்கள் பலர தங்கள் பிள்ளைகளின் கல்விக்காக, தங்கள் ஓய்வுக்காலத்தைகழிக்கவும் முதலீடுகளை செய்கிறார்கள்.
சிறுதுளி பெருவெள்ளம்
நீங்கள் உங்கள் மாதாந்த வருமானத்தை சிறிது சிறிதாக ஒரு விடயத்தில் நீங்கள் முதலிட்டால் வருடம் செல்ல செல்ல அந்தமுதலீடு பலமடங்கை எட்டுவதை நீங்கள் உணரலாம். உதாரணமாக நீங்கள் தங்கத்தை நீங்கள் சேர்த்த பணத்தில் கொள்வனவு செய்துவருகிறீர்கள் என்றால் ஓர் 5வருடத்தில் நீங்கள் குறிப்பிட்ட அளவு பெறுமதியான தங்கத்தை சேமித்திருப்பீர்கள். இப்போது உங்களுக்கு உடனடி பணத்தேவை ஏற்படின் இந்த தங்கம் உங்களுக்கு உதவியாக இருக்கும்காரணம் அதே தங்கத்திற்கு அளவான பணத்தை நீங்கள் வங்கியிலிட்டிருந்தால் ( இலங்கை தவிர்ந்த மேற்கத்தேய நாடுகளில்) அதன் பெறுமதி கூடியிருக்காது ஆனால் நீங்கள் 5 ஆண்டுகளாக சேர்த்த தங்கம் உங்களுக்கு உதவும். தங்கம் என்பது ஒரு உதாரணத்துக்காககுறிப்பிட்டேன் இதே போல Index fund போன்ற முதலீடுகள்உங்கள் எதிர்காலத்துக்கு பெரும் உதவியாகஇருக்கும்.இதற்கு உங்களுக்கு பொறுமையும் தூரநோக்கான சிந்தனையும்தேவை.
முதலீடு பற்றி ஒருபதிவில் குறிப்பிட்டுவிடமுடியாது.இந்த பதிவின் மூலம் முதலீட்டின் முக்கியத்துவத்தை தெரிந்திருப்பீர்கள். Investment சார்ந்த புத்தகங்களை நீங்கள் தேடி படியுங்கள்,தேடல்கள் தான் உங்களை மேலும் மெருகேற்றும் எனவே நிறையவே தேடுங்கள் உங்களால் சிறந்த முதலீட்டுவழிகளை கண்டறிந்து உங்கள் பணத்தை பெருக்கலாம் அதே சமயம் ஓர் வருவாயையும் ஈட்டிக்கொள்ளமுடியும். பணம் என்பது நிலையான ஒன்றல்ல என்பதனை மறக்கவேண்டாம்.
Comments
Post a Comment