இந்த பரபரப்பான இயந்தியமயமாகிப்போன வாழ்க்கையில் நாம் சரியான உணவு,நித்திரை, உடற்பயிற்சி என்பவற்றை தவிர்த்துவிடுகிறோம். இதனால் உடல்பருமன்,பல்வேறுபட்ட நோய்கள்,மனஅழத்தம் என்பவற்றுக்கு ஆளாகின்றோம்.நாம் எவ்வளவு ஆரோக்கியமான உணவு எடுத்துக்கொண்டு தேவையான அளவு நேரம் நித்திரை செய்தாலும் ஆரோக்கியத்தில் குறைபாடு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. உங்களில் எத்தனை பேர் தினமும் உடற்பயிற்ச்சி செய்கிறீர்கள்? நாம் எல்லாவற்றுக்கும் காரணம் ஒன்றை வைத்துள்ளோம் அதுதான் நேரம் இல்லை என்பது. தற்போது பலர் உடற்பயிற்ச்சி இன்மையால் பல துன்பங்களை அனுபவிக்கிறார்கள் ஒரு நாளில் 30 நிமிடங்களை ஒதுக்கி நடைபயிர்ச்சி செய்வது மிகவும் நல்லது.
இனி உடற்பயிற்ச்சி செய்வதால் எமக்கு கிடைக்கும் பலன்களை பார்ப்போம்
- உடல் எடையை கட்டுப்பாட்டினுள் வைத்திருக்க முடியும்
- மூளை சம்பந்தமான நோய்களிலிருந்து விலகியிருக்கலாம்
- தசைகள் என்புகளின்பலம் அதிகரிக்கும்
- உங்கள் நாளாந்த வேலைகளை செய்வதற்கான ஆற்றல் மற்றும் சுறுசுறுப்பு அதிகரிக்கும்
- உடலில் சக்கரையின் அளவை கட்டுப்படுத்தலாம்
- இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம்
- Cholesterol அளவு கட்டுக்குள் இருக்கும் இதயத்தின் ஆரோக்கியம் பேணப்படும்
- தினமும் நிம்மதியான நித்திரை
- உங்கள் உடல் கட்டுக்கோப்பாக இருக்கும்
- உணவு சமிபாடு சிறப்பாக அமையும்
- ஞாபகசக்தி மற்றும் கூர்ந்து கவனிக்கும் ஆற்றல் அதிகரிக்கும்
- பதட்டம் பயம் போன்றவற்றிலிருந்து விடுதலை
- மகிழ்ச்சி தன்னம்பிக்கை அதிகரிக்கும்
- நீண்ட ஆயுள் ஆரோக்கியமான வாழ்க்கை
Comments
Post a Comment