கனடாவிற்கு வருவதற்கும்/குடியேறுவதற்கும் பலரால் பயன்படுத்தப்படும் ஓரு வழி Student Visa முறையாகும் இதன் மூலம் பல இலட்சம் மக்கள் உலகெங்கிலுமிருந்து வருடாவருடம்கனடாவிற்கு வருகைதந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் பலகாலமாக இலகுவாக இருந்த இந்த முறமை இனி Student visa வில் கனடாவினுள் நுளையவே முடியாததாக மாறிவிட்டுள்ளது.கடந்த 22 ம் திகதி Immigration minister Mr.Marc Miller அவர்கள் முக்கியமான அறிவுப்புக்களை வெளியிட்டுள்ளார் அதில் இனிவரும் 2வருடங்களுக்கு கனடாவிற்கு வருகை தரும் மாணவர்கள் அளவை 36% ஆக குறைக்கப்போவதாகவும் 2023 ஐ ஒப்பிடும் போது 36% வீசாக்களை 2024 ல் குறைக்கப்போவதாகவும் குறிப்பாக Ontario மாகாணத்தில் 50% Student Visa வை குறைக்கப்போவதாகவும் அறிக்கையை வெளியிட்டுள்ளார். இந்த வீசா குறைப்பு Masters & Doctorate மாணவர்களுக்கு பொருந்தாது.
அடுத்ததாக student visaவில் கனடாவருபவரின்துணை ஆண்/பெண் இனி வேலைசெய்யமுடியாது இதுவரை இருந்துவந்த Open Work permit முறை Masters & Doctorate படிக்க வரும் மாணவர்களின் துணை ஆண்/ பெண் வேலை செய்யமுடியும். 1 Year Diploma அல்லது 2 Year Diploma படிக்கவருபவர்கள் கனடாவில் இனி வேலைசெய்யமுடியாது. தொடர்ந்து கனடா முழுவதுமாக மாகாணம் வாரியாக எவ்வளவு மாணவர்கள் எந்த கல்லூரிகளில் என்பதை மத்திய அரசாங்கத்தின் வழிகாட்டலின் படி மாகாணங்கள் மேற்கொள்ளும்.
கனடாவில் அதிகப்படியான மாணவர்களின் வருகையால் வாடகை வீடுகளுக்கான கேள்வி அதிகரித்துள்ளதுடன் வாடகைகள் பெருமளவு அதிகரித்துள்ளது. பல கல்வி நிறுவனங்கள் சர்வதேச மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலிப்பதுடன் அவர்களுடைய கல்லூரிகள் ஒரு சிறிய கட்டடம் ஒன்றிலே இயங்குகிறது கனடாவின் சட்டங்களுக்கு முரணாக செயற்படுவதாகவும் அவ்வாறான கல்லூரிகளுக்கு படிக்க வரும் மாணவர்கள் உண்மையில் வகுப்புக்களில் கவனம் செலுத்தாது முழுநேர வேலைகளில் ஈடுபடுவதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன, food banks இலவச உணவு வழங்குமிடங்கள் பல சர்வதேச மாணவர்கள் தங்கியிருக்கின்றனர் இதனால் தேவையுள்ளவர்கள் உணவு கிடைக்காமல் குற்றம் சாட்டியிருந்தனர் இந்த பிரச்சனை கடந்த ஆண்டில் பெரும் பேசு பொருளாக அமைந்திருந்தது.
ஒரு சிலர் தமது வீடுகளில் 10-15 பேரை தங்கவைத்து ஒரு படுக்கைக்கு 500-800 வரை அறவிட்டு அதிக பணம் சம்பாதித்துவந்தனர் இது சட்டத்திற்கு புறம்பானது ஒரு வீட்டின் தளத்தில் ஒரு அறையில் ஒருவர் அல்லது இரண்டு பேரையே தங்கவைக்கமுடியும்.இவ்வாறாக சர்வதேசமாணவர்களை குறிவைத்து மோசடிகளும் இடம்பெற்றுள்ளன. கனடாவில் அடிப்படை வேலைகள் எல்லாவற்றிலும் இந்த international student களே வேலைசெய்துவந்தனர் இதனால் கனடாவில் கனடியர்கள் உட்பட பலர் வேலைகளை பெற்றுக்கொள்ள முடியாமல் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.அதீத எண்ணிக்கையில் மாணவர்களை உள்வாங்கியதால் Healthcare உட்பட பல துறைகளில் அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. மேற்குறிப்பிட்ட சம்பவங்களை கனடிய அரசு கவனத்தில் கொண்டு இவ்வாறான முடிவை எடுத்துள்ளது.
கடந்த December 08 Canada Student visa வில் GIC பணத்தை 10,000$ லிருந்து 20,635$ உயர்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்க ஓர் விடயமாகும். கனடா தற்போது பொருளாதார மந்த நிலையிலிருப்பதால் பல விடயங்களை கருத்தில் கொண்டே இந்த இரண்டு வருட தற்காலிக தடையை விதித்துள்ளது. இந்த தடையானது கனடியர்கள் மத்தியில் வரவேற்பைபெற்றுள்ளதுடன் கனடா வந்து தற்போது கல்விகற்றுக்கொண்டிருக்கும் கணிசமான சர்வதேச மாணவர்களிடையிலும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த இரண்டுவரட தடை போதாது 5 வருட தடை போடவேண்டும் அத்துடன் Refugee களுக்கும் தடை வேண்டும், Immigration ல் தற்காலிக தடைவேண்டும் என கனடியர்கள் கருத்துக்களை YouTube தளத்தில் பதிவிட்டுவருகின்றனர்.
இந்த அறிவிப்பு எதிர்பாரத்த ஒன்றுதான் கடந்தவருடமே இதனை பற்றிய பேச்சுக்கள் எழுந்தன இருந்த போதிலும் 2024 ல் தான் செயற்பாட்டுக்கு வரஉள்ளது. இந்த தடையால் கனடா வரவேண்டும் என்று நினைக்கும் மாணவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது ஒரு தொடக்கமாகவே உள்ளது அடுத்து வேறு விசாக்களில் கனடாவில் குடியேறுவதற்கான வழிகளில் தடைகளை எதிர்பார்க்க கூடியதாகவே உள்ளது.
Comments
Post a Comment