சிலவருடங்களா உலகம் முழுவதும் இந்த Frugal lifestyle என்பது பிரபலமாகிவருகிறது. அனைவருக்கும் விளங்கக்கூடிய வகையில் சொல்லவேண்டுமாயின் செலவை குறைத்து வாழ்வது என்று எடுத்துக்கொள்ளலாம்.புது பொருட்கள்,உபகரணங்கள்,இலத்திரனியல் பொருட்கள் போன்றவற்றை கொள்வனவு செய்யவேண்டுமென்பது பலரினதும் விருப்பம் ஆனால் இவ்வாறு அதீக கொள்வனவால் எம்மையறியாமலேயே நாம் அதிகளவு பணம் செலவு செய்கிறோம். இந்த வாழ்க்கை முறையிலிருந்து விலகி அல்லது தனது செலவுகளை கட்டுப்படுத்த உலக மக்கள் ஏற்படுத்திக்கொண்ட வாழ்க்கை முறையே இதுவாகும். இந்த வாழ்க்கை முறை வளரந்த பொருளாதாரம் கொண்ட எந்த நாடுகளிலும் வாழும் மக்களுக்கும் பெரிதும் உதவியாக இருக்கும். இந்த வாழ்க்கை முறை தனிநபர்கள் அல்லது நண்பர்களின் கூட்டு முயற்சியால் நிகழ்வதாகும்.
உதாரணமாக நீங்கள் வீட்டிற்கு வெளியே உணவு அருந்துபவராக இருந்தால் அந்த உணவுக்கான ஒருமாத செலவை நீங்கள் கணக்கிட்டு பாருங்கள்.நீங்கள் வேலைக்கு,கல்வி சம்பந்தமாக வெளியில் செல்பவராயின் உங்கள் காலை/மதிய உணவை வீட்டில் தயார் செய்து கொண்டுபோவீர்களாயின் வெளியில் உணவருந்துவதற்கான செலவை குறைத்துக்கொள்வதுடன் உங்கள் ஆரோக்கியத்தை பாதுகாக்க முடியும். நீங்கள் புதிய Model இலத்தினியல் சாதனங்கள் வருடாவரும் கொள்வனவு செய்பவராயின் சுமார் 03-4 வருடங்கள் முன்னர் வெளியான அதே கம்பனி பொருளை குறைந்த விலையில் பெற்றுக்கொள்ளளலாம். புத்தம்புதிய இலத்திரனியல் பொருளும் அடுத்துவரும் வருடங்களில் வருடங்கள் கடந்ததாகவே இருக்குமே தவிர அதன் பயன்பாடு சிறப்பானதாகவே இருக்கும். அல்லது used பொருட்களை கொள்வனவு செய்வதால் அதன் உற்பத்தி விலையிலிருந்து பெருமளவு பணத்தினை சேமிக்க முடியும்.
சிலர் புதிய பொருட்களை வாங்கினால் அது காலம் செல்ல பெறுமதிஇழக்கும் என்பதை சிந்திப்பதில்லை ஒரு புதிய கார் ஒன்றை மாததந்தோறும் பணம் செலுத்தி வைத்திருப்பதை விட அதே நிறுவனத்தில் சுமார் 10 வரும் முந்த model கார்ஐ முழுப்பணம் செலுத்தி பெறுவதால் மாதாந்த செலவு இல்லை மேலும் நல்ல ஒரு காரை குறைந்த விலையில் பெற்றுக்கொள்ளலாம். இந்த வாழ்க்கை முறை நடுத்த மக்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.
சிறுகார் மற்றும் சிறு/நடுத்தரமான வீட்டினை கொள்வனவு செய்தல் சிலர் வீட்டினை கொள்வனவு செய்யாமல் வாடைகைக்கு இருத்தல், online shopping ஐ தவிர்த்தல், பக்கத்திலிருக்கும் கடைகளுக்கு நடந்து செல்லுதல், ஒரமாதத்திற்கு தேவையான வீட்டுப்பொருட்களை பட்டியலிட்டு வாங்குதல், புகைப்பிடித்தல்,மது போன்ற விடயங்களை கைவிடுதல், உடற்பயிற்சி செய்தல், அரோக்கியமான உணவை எடுத்துக்கொள்ளுதல், செலவை நண்பர்களுடன் பகிரந்து கொள்ளுதல், குறைந்தளவு உடைகளை கொள்வனவு செய்தல் இன்னும்பல நீங்கள் வாழும் இடம் உங்கள் வருமானம் மற்றும் உங்கள் வாழ்க்கை செலவுக்கு ஏற்ப நீங்கள் பல விடயங்களை உங்களுக்கு ஏற்றார்போல் மாற்றிக்கொள்ளலாம்.
இந்த வாழ்க்கை முறை செலவை கட்டுப்படுத்த முனைபவர்களுக்கும், எளிமையான மகிழச்சியான ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ நினைப்பவர்களுக்கமே பொருந்தும். இந்த வாழ்க்கை முறையை விரும்பி ஏற்பவர்களுக்கே
Comments
Post a Comment