இலங்கை கடந்த 3 ஆண்டுகளாக கடும் நெருக்கடியினுள் சிக்கியுள்ளது நாம் அனைவரும் அறிந்ததே தற்போது VAT வரி 15% லிருந்து18% அதிகரித்துள்ளதுடன், 18 மேற்பட்டஅனைத்து இலங்கையர்களும் TIN (Tax Identification Number) வரி கட்டுபவரை அடையாளப்படுத்தும் இலக்க முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் நாம் கவனமாக சிந்திக்க வேண்டிய சில விடயங்கள் உள்ளன.
முதலில் ஏன் நாம் வரி செலுத்தவேண்டும் உதாரணமாக மேற்கத்தேய நாடுகளில் வரி முறைமை பல்நெடுங்காலமாக செயல் பாட்டிலிருந்துவருகிறது. முன்னேறிய நாடுகள் இதனால் தம் நாடுகளை அபிவிருத்தி செய்தும் பெறப்படும் வரிப்பணத்தின் மூலமும் கல்வி,போக்குவரத்து,மருத்துவம்,ஓய்வூதியம்,வீடு என்று தரமான வாழ்க்கை முறையை மக்களுக்கு வழங்கிவருகிறது. இந்த முறைமை இலங்கைக்கு பொருந்துமா என்று பார்ப்போமேயானால் நடைமுறைச்சிக்கல்கள் ஏராளம் உள்ளன. இலங்கை மக்கள் ஏற்கனவே அதீத பணவீக்கத்தால் அதிகளவு செலவீனங்களை எதிர்நோக்கி வாழ்க்கையை கொண்டுநடத்துவதற்கு சிரமமப்பட்டுக்கொண்டிக்கும் வேளையில் அவர்களிடமிருந்து வரி அறவிடுவது உண்மையில் ஏற்புடையாதா?
மக்களிடம் பணம் பற்றாக்குறையாக உள்ளது,வாழ்க்கை தரம் உயவில்லை,ஊதியமும் உயரவில்லை, இந்த தருணத்தில் IMF ன் கட்டளைக்கு இணங்கி இந்த வரி முறை இலங்கையில் நடைமுறைக்கு வருமேயானால் மக்கள் கொந்தளிப்படைய வாய்ப்புள்ளது. அரசாங்கள் இவ்வாறான IMF ன் நிபந்தனைகளை நிறைவேற்றினால் மட்டுமே கடன் பெற்றுக்கொள்ளமுடியும். இலங்கை போன்ற ஊழல் ஊறிப்போன நாட்டில் பணம் பெரிதும் கையாடலுக்கு உள்ளாகிறது. மேலும் பல இளைஞர் மற்றும் யுவதில் வேலைவாய்ப்பை தேடி நாட்டைவிட்டு பெருமளவு வெளியேறுகிறார்கள், பெரும் பணக்காரர்களும் துபாய்போன்ற நாடுகளுக்கு செல்கிறார்கள். இங்கு எல்லாம் பழைய நிலைக்கு திரும்பினாலும் வேலைசெய்ய திறமையான மனிதர்கள் இருக்க மாட்டார்கள் முதியவர்களின் எண்ணிக்கையே அதிகரித்து இருக்கும். சாதாரண மக்கள் வரி செலுத்தி இந்த நாட்டினுள் வாழந்துகொண்டிருப்பார்கள், சிறந்த மனிதவளம் நாட்டை விட்டு வெளியேறினால் நாடு எப்படி பொருளாதாரத்தில் முன்னேற முடியும்?
அடிப்படையில் இலங்கை பல தவறுகளை இழைத்துவிட்டது அவை சரி செய்யவே முடியாதவைகளாகவே உள்ளன. வரி செலுத்துவது என்பது வேறு கட்டாயத்தின் பேரில் வறுமையில் வாடும் மக்களிடம் பணம் பறிப்பதுஎன்பது வேறு. சரி தற்போதைக்கு கடன் பெற்றாலும் ஏற்கவே பெற்ற 86.6 பில்லியன் டொலர் கடனை அடுத்ததடுத்த இலங்கை தலைமுறையினரே சுமக்கவேண்டியுள்ளது. சரியாக கொள்கை,திட்டமிடல்கள்,இலக்கு, இல்லாமை , மாறாக இனங்களுக்கு இடையே முரண்பாடுகளை தோற்றுவித்தல், இனவெறுப்பு போன்ற கீழ்தனமான அரசியலால் இலங்கைஅடைந்தது மிகப்பெரிய பொருளாதார சரிவு. இலங்கை இந்த சரிவிலிருந்து தற்காலிகமாக மீண்டாலும் நீண்டகாலத்திற்கு கடினமான வாழ்க்கையே இருக்கும் காரணம் மீள் செலுத்தப்படாத சர்வதேச கடன்கள் மேலும் வாங்கப்படும் கடனகள், நாட்டின் வளங்களை மற்றைய நாடுகளுக்கு விற்பனை செய்தல், இனதுவேச அரசியல், அரசியல் தெளிவற்ற பெரும்பான்மை மக்கள், போதைப்பொருள், இலஞ்சம், அதிகார துஷ்பிரயோகம் என பல நூறு பிரச்சனைகள் உள்ளன இது எல்லாம் களையப்படாமல் இலங்கைக்கு விடிவு என்பது இல்லவே இல்லை. ஒருசில பில்லியன்களை கடனாக பெறுவதற்கே திண்டாடும் நாடுஎப்படி தூரநோக்குடன் செயற்பட்டுஇலங்கையை மீட்டெடுக்கும்?
Comments
Post a Comment