உலகில் சிறந்த EV கார்களை தயாரித்துவெளியிடும் நிறுவனமாக Tesla விளங்கிறது கடந்த ஒருமாதத்தில் Tesla வின் Market Value சந்தை மதிப்பானது 26% சரிந்துள்ளது இது 205 Billion Dollars ஆகும். இது அதன் மொத்த சந்தை மதிப்பில் பெரும் சரிவை கண்டுள்ளது. தற்போது EV வாகனங்களுக்கான சந்தை சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது, முன்னர் Tesla மட்டும் கோலோச்சிய காலங்கள் சென்று BYD,Honda,Toyota,BMW,Hyundai,GM,Rivian இன்னும் பல பல EV தயாரிப்பாளர்கள். இதில் குறிப்பிடும்படியாக சீனாவில் மட்டும் 91 EV Cars தயாரிப்பாளர்கள் தயாரிப்பில் உள்ளனர் இதனைவிட பலநூறு நிறுவனங்கள் இதுதொடர்பான ஆய்வில் முடிவு கட்டத்தை எட்டியுள்ளனர். தற்போது நாம் Elon Musk கூறிய கருத்து ஒன்றை எடுத்துக்கொள்ளவேண்டும்"எவ்வளவுதான் விற்பனை தடைகளை நீங்கள் சீன EV தயாரிப்புக்களுக்கு விதித்தாலும் சீன EV தயாரிப்புக்களால் மற்றைய நிறுவனங்களின் தயாரிப்புக்கள் அழிக்கப்படுவதை நிறுத்த முடியாது"
அவர் குறிப்பிட்டதாவது குறிப்பாக வட அமெரிக்கா மற்றைய மேற்குலக நாடுகளில் சீன தயாரிப்புக்களுக்கு தடைஉள்ளது அதற்கு அரசியல் காரணங்கள் இருந்தாலும், ஐரோப்பாவில் சீன தயாரிப்பான BYD கோலோச்சிவருகிறது. கடந்த ஆண்டு உலகின் முண்ணணி நிறுவனமான Tesla வை பின்தள்ளி விற்பனையில் ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளது. இதனாலேயே Elon musk அவர்கள் நீங்கள் தடைகளை விதித்தாலும் அவர்கள் விற்பனையில் ஏற்றம் மட்டுமே காணப்படும் என்பதே.
Tesla விற்கு என்னதான் ஆனது? அதிகரித்துவரும் போட்டியால் விற்பனை வீழ்ச்சியை சந்தித்தமை,வாடிக்கையாளர் சேவைகளில் குறைபாடு,இதுவரை அதிக விலைக்கு மட்டுமே Tesla தயாரிப்புக்கள் வெளிவந்தன சாதார மக்கள் கொள்வனவு செய்யும் அளவுக்கு தயாரிப்புகள் வெளியாகமல் இருந்தது அந்த நிலையை மாற்ற Model 3 ஒரு வழியாக இருந்தது ஆனால் Tesla விற்கு இன்னுமொரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் Tesla வானது 200,000 வாகனங்களை திரும்ப பெற உள்ளதாக அறிவித்துள்ளது. Camara Bug காரணமாக மற்றும் Software சாரந்த பிரச்சனைகளுக்காகவும் அத்துடன் கடந்த மாதத்தில் Tesla வானது 2 Million கார்களை Tesla's system to monitor drivers was defective காரணமாக திருப்பி அழைத்திருந்தது. இதுபோன்ற காரணங்களில் கடந்த சில மாதங்களாக Tesla வின் பெயரானது அடிவாங்க ஆரம்பித்து மிகப்பெரிய பங்குச்சந்தை சரிவில் முடிவடைந்துள்ளது.
இப்பொழுது சீன தயாரிப்பான BYD பற்றி நாம் எடுத்துக்கொண்டால் அதிகளவான கார்களை தயாரித்து அதனை மக்களால் கொள்வனவு செய்யக்கூடிய அளவு பணத்திற்கு சந்தைபடுத்துவதும்.விற்பனையின் பின்னரான சேவை,போன்றவற்றால் மக்களால் அதிகம் கொள்வனவு செய்யப்படுகிறது.BYD ஓர் Battery தயாரிப்பு நிறுவனமாகும் அதன் பின்னரே EV car கள் தயாரிப்பினுள் நுளைந்தது இன்னும் சிறிது காலத்தில் EV கார்கள் சந்தையில் Tesla வை பின்னுக்கு தள்ளி அசைக்கமுடியாத இடத்தை எட்டும் என்பதில் ஆச்சரியமில்லை. BYD பற்றி தனி ஒரு பதிவில் பார்ப்போம் Tesla வானது விற்பனை,விற்பனைக்கு பிந்திய சேவை, கார்தயாரிப்பில் குழறுபடிகள் என பல பிரச்சனைகள் இருப்பதாலும் முன்னாள் Tesla உரிமையாளர்களும் சமூக வலைதளங்களில் Car battery கள் charge செய்தால் முழுமையான வினைத்திறனை தருவதில்லை எனவும் குற்றம் சாட்டுகின்றனர் இதனால் Tesla ஒன்றை கொள்வனவு செய்ய திட்டமிடுபவர்களும் தங்கள் முடிவைமாற்றி வேறு EV தயாரிப்புக்கள் பக்கம் செல்கிறார்கள். இந்த சறுகல்களில் இருந்து Teslaமீண்டுவருமா என்று காத்திருந்து பார்ப்போம் இந்த சரிவுகள் சிக்கல்கள் மற்றைய EV தயாரிப்பாளர்களுக்கு ஓர் நல்ல படிப்பினையாக இருக்கும்.
Comments
Post a Comment