உலகலாவிய ரீதியில் உயர்கல்வியை தொடர்வதற்காக மாணவர்கள் தேர்வுசெய்யும் நாடுகளில் கனடாவிற்கு முக்கிய இடமுண்டு. இதுவரைகாலமும் பல இலட்சம் சர்வதேசமாணவர்களை கனடாவானது உள்வாங்கி அவர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்களை வழங்கிவருகிறது. ஐக்கிய இராச்சியம் , அமெரிக்கா , அவுஸ்திரேலியா, பிரான்ஸ் என பல நாடுகளில் சர்வதேச ரீதியில் மாணவர்கள் தங்கள் உயர்கல்வி கனவை பூர்த்திசெய்து கொள்ள பயணப்படுகின்றனர். இதில் பெரும்பான்மையான மாணவர்கள் அந்தந்த நாடுகளில் வேலைவாய்புகளை பெற்று அதே நாட்டில் தொடர்ந்து வாழ்ந்தும் வருகின்றனர். ஏனைய உலகநாடுகளை ஒப்பிடும் போது கனடாவானது புதிய மக்களை வரவேற்றும் நாடாகும் இதனால் படித்து முடித்த பின்னர் ஒரு வேலையை பெற்று கனடாகுடியுரிமை பெறுவது மற்றைய நாடுகளுடன் ஒப்பிடும் போது இலகுவானதாகவும் இருந்து வருகிறது. இதன் காரணமாக உலகெங்கிலுமிருந்து மாணவர்கள் Covid - 19 முடிவடைந்து நாடுகள் பழைய நிலைக்கு திரும்பும் போது படையெடுத்தனர். அவர்களின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவு அதிகமானதாகவே இருந்தது.
கடந்த December 07 தற்போதைய குடிவரவு மற்றும் அகதிகள் தொடர்பான அமைச்சர் மிகமுக்கியமான அறிவுப்புக்களை வெளியிட்டிருந்தார் அதில் குறிப்பிடும் படியாக மாணவர்கள் கனடாவினுள் கல்வியை தொடர்வதற்கு proof of fun அல்லது GIC ( Guaranteed investment Certificate ) என்னும் பணத்தை கனடா வங்கியில் வைப்பிலிட்டு காண்பிக்க வேண்டும் இதன் தொகை இதுவரை காலமும் $10,000 ஆக காணப்பட்டது. தற்போது கனடாவில் நிலவிவரும் பொருளாதார மந்தநிலை காரணமாக இதன் தொகையை அதிரடியாக $ 20,635 ஆக உயர்த்தியுள்ளனர். இந்த சடுதியான அதிகரிப்பு கனடாவிற்கு வருகை தர நினைக்கும் மாணவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கடந்த ஒருவருடமாக மாணவர்கள் வாரம் ஒன்றிற்கு 40 மணிநேரம் வேலை செய்ய வேண்டும் என்ற விதி நீற்கப்படும் என்ற நிலையில் அதனை 1 April 2024 வரை நீட்டித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. இருந்த போதிலும் 1 April 2024 பின்னர் மாணவர்கள் வாரம் ஒன்றிற்கு 20 மணிநேரம் மாத்திரமே வேலை செய்ய முடியும் என்ற சட்டம் வருவதற்கும் அதிக வாயப்புள்ளது.
கனடாவில் பயிலும் சர்வதேசமாணவர்களின் PGWP ( Post graduate work permit) ன் காலம் இனி நீட்டிக்கப்படாது என்று அறிவுப்பு வெளியாகியுள்ளது. அத்துடன் இனி Online வகுப்புக்கள் ஒரு நடைமுறைக்கு உட்படுத்தப்படுவதுடன் அதிகம் off line வகுப்புக்கள் இடம்பெறும். மாணவர்கள் கனடா வந்ததன் நோக்கம் கல்வி அதனை விடுத்து மாணவர்கள் அதிகம் வேலை செய்வதை குறைத்து கல்விச்செயற்பாட்டை அதிகரிக்கும் நடவடிக்கைகள் இடம்பெறும். இனிவரும் 2024 September மாதம் முதல் கனடாவரும் சர்வதேச மாணவர்களை மட்டுப்படுத்தப்போவதாகவும் திட்டம் வெளீயாகியுள்ளது. இதன் மூலம் கனடா ஏற்கனவே அளவுக்கு மீறிய மாணவர்களை உள்வாங்கிவிட்டது அதன் பிரதிபலன்களை நாடே அனுபவதித்துவரும் நிலையில் இவ்வாறான கடுமையான சட்டங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன.
இனி கனடாவிற்கு ஒருவர் மாணவராக வருவது மிகவும் சவாலான ஒருவிடயமாகும் அத்துடன் முன்னைய ஆண்டுகளை போல படித்து முடித்து வேலை ஒன்றை பெற்றுக்கொள்வதும் அல்லது நிரந்தர குடியுரிமை மேலும் கனடிய குடியுரிமை என்பன கேள்விக்குறியான விடயங்களாகவே உள்ளன. தற்போதைய ஆட்சி மாறி எதிர்கட்சி ஆட்சிக்கு வந்தால் காட்சி இதைவிட வேறாகவே இருக்கும். தற்போதைய சட்டதிட்டங்களினை ஒப்பிடுகையில் மேலும் கடினமான சட்டங்களை எதிர்பார்க்க முடியும்.
💬wonder full da
ReplyDelete