Skip to main content

Posts

Showing posts from December, 2023

கனடா வரும் International Students ற்கு ஏற்பட்டுள்ள சிக்கல்கள்!!!

  உலகலாவிய ரீதியில் உயர்கல்வியை தொடர்வதற்காக மாணவர்கள் தேர்வுசெய்யும் நாடுகளில் கனடாவிற்கு முக்கிய இடமுண்டு. இதுவரைகாலமும் பல இலட்சம் சர்வதேசமாணவர்களை கனடாவானது உள்வாங்கி அவர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்களை வழங்கிவருகிறது. ஐக்கிய இராச்சியம் , அமெரிக்கா , அவுஸ்திரேலியா, பிரான்ஸ் என பல நாடுகளில் சர்வதேச ரீதியில் மாணவர்கள் தங்கள் உயர்கல்வி கனவை பூர்த்திசெய்து கொள்ள பயணப்படுகின்றனர். இதில் பெரும்பான்மையான மாணவர்கள் அந்தந்த நாடுகளில் வேலைவாய்புகளை பெற்று அதே நாட்டில் தொடர்ந்து வாழ்ந்தும் வருகின்றனர். ஏனைய உலகநாடுகளை ஒப்பிடும் போது கனடாவானது புதிய மக்களை வரவேற்றும் நாடாகும் இதனால் படித்து முடித்த பின்னர் ஒரு வேலையை பெற்று கனடாகுடியுரிமை பெறுவது மற்றைய நாடுகளுடன் ஒப்பிடும் போது இலகுவானதாகவும் இருந்து வருகிறது. இதன் காரணமாக உலகெங்கிலுமிருந்து மாணவர்கள் Covid - 19 முடிவடைந்து நாடுகள் பழைய நிலைக்கு திரும்பும் போது படையெடுத்தனர். அவர்களின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவு அதிகமானதாகவே இருந்தது. கடந்த December 07 தற்போதைய குடிவரவு மற்றும் அகதிகள் தொடர்பான அமைச்சர் மிகமுக்க...

Ontario வில் திருடப்படும் கார்கள் எண்ணிக்கை அதிகரிப்பு.

  கனடாவின் Ontario மாகாணத்தில் கடந்த சிலவருடங்களாக கார்கள் திருட்டு அதிகரித்துவருகிறது. கடந்த 2022 ம் ஆண்டு 3500 வாகனங்கள் திருடப்பட்ட நிலையில் 2023 இல் 9,747 ஆக அதிகரித்துள்ளது. Honda CR-V , Lexus RX series, Doge RAM 1500 series, Toyota Highlander , Land Rover Range Rover , Ford 150 Series, Jeep Grand Cherokee, Jeep wrangler, Honda Civic, Acura RDX , போன்ற வாகனங்களாகும்.  மேல் குறிப்பிட்ட வாகனங்களை வைத்திருக்கும் உரிமையாளர்கள் மிகவும் கவனமாக செயல்படுவது மிகவும் நல்லது.

தினமும் 39 நபர்கள் கனடாவிலிருந்து நாடுகடத்தப்படுகிறார்கள் அதிர்ச்சி அறிக்கை!!!

  கனடாவானது பல தாசாப்தங்களாக பல இலட்சம் மக்களை கனடாவினுள் வரவேற்றுள்ளது. அத்துடன் கனடாவானது அகதிகளாக தஞ்சம் கோருபவர்களுக்கு அடைக்கலம் வழங்கும் நாடாக இருந்துவருகிறது. இந்நிலையில் 2023 ன் அரையாண்டில் 6 மாதகாலப்பகுதியில் 7032 மக்கள் கனடாவின் CBSA (Canada Border Services Agency) ஆல் நாடுகடத்தப்பட்டுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனை ஒரு நாளுக்கு 39 நபர்கள் என்ற வகையில் நாடுகடத்தப்பட்டுள்ளனர். Parkdale Community legal services ஐ சேர்ந்த Mary Gellatly கருத்து தெரிக்கும் போது 2021 சராசரியாக 21நபர்களும் 2022 ம் ஆண்டில் 23 நபர்களும் சராசரியாக நாடுகடத்தப்பட்டுள்ள எண்ணிக்கையாகும். கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது. எவ்வாறான காரணங்களால் மக்கள் நாடுகடத்தபடுகிறார்கள் என்று நாம் நோக்கினால் Criminality, health issues, Security issues, financial concer or misrepresentation  ns போன்ற காரணங்களுக்காக மக்கள் நாடுகடத்தப்படுவது இடம்பெறுகிறது.  பின்வரும் காரணங்களும் நபர் ஒருவர் கனடாவை விட்டு வாழ்நாள்முழுவதும் உள் நுளைய தடை செய்யப்படலாம். The following...

International students GIC money $20,635 ஆக உயர்வு

  கடந்த December 7 ம் திகதி குடிவரவு மற்றும் அகதிகள்அமைச்சர் Mark Miller அவர்கள் கனடா மாணவர் விசா தொடர்பிலான முக்கியமான அறிவிப்புக்களை வெளியிட்டார் அதன் அடிப்படையில் கனடாவிற்கு மாணவராக வருபவர்கள் GIC ( Guaranteed investment certificate) வங்கியில் வைப்பிலிட்டு காண்பிக்க வேண்டும். இதுவரை ஒரு மாணவருக்கு $10,000 ஆக இருந்தது. தற்போது கனடாவில் நிலவும் பொருளாதார மந்த நிலையால் மற்றும் High Cost-of-Living அதிகரிப்பாலும் $20,635 ஆக உயர்துவதாக அறிவித்துள்ளது. இந்த அறிவுப்பானது international students மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,