"கனடாவில் இனி International Students படித்துவிட்டு நாடு திரும்பவேண்டியது தான்" கனடா எதிர்கட்சி தலைவர் Pierre Poilievre கருத்து!!!
கனடாவில் குடியேறவேண்டுமென்பது பல இலட்சக்கணக்கானவர்களின் கனவு அதில் பலவழிகளை பின்பற்றி அந்த கனவை மக்கள் பூர்த்திசெய்து கொள்கின்றனர். இதில் வேலைதேடி கனடாவருபவர்கள் மற்றும் உயர்கல்விவேண்டி கனடா வருபவர்கள் மிக அதிகம், இவ்வாறு கனடாவினுள்வருபவர்களால் கனடா அரசுக்கு பல நன்மைகள் கிடைப்பதுடன் சில பிரச்சனைகளும் ஏற்படுகின்றன. அதில் குறிப்பிடத்தக்க வகையில் international students ஐ ஆண்டுக்கு அதிகமாக உள்வாங்குகின்றது இந்த எண்ணிக்கை வருடாவருடம் மிகஅதிகமாக உயர்ந்துவருகிறது. இதனால் இங்கு கல்விக்காக வரும் மாணவர்கள் தங்குமிடங்களுக்கான கேள்வியை அதிகரிக்கின்றனர் இதனால் கனடா மக்களும் மாணவர்களும் பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர்.
வேறு எந்த உலகநாடுகளையும் ஒப்பிடும்போது கனடாவினுள் மாணவராக நுளைந்து நிரந்தர குடியுரிமையை இலகுவாக பெறமுடியும் அதனால் உலகளவில் பலர் மாணவர்களாக கனடாவருவதற்கு எத்தனிக்கின்றனர். இதனை பயன்படுத்தி பல மோசடிக்காரர்கள் மாணவர்களை ஏமாற்றி பணம் பறிக்கும் செயற்பாட்டிலும் ஈடுபட்டுவருகின்றனர். சரி இதற்கும் தலைப்பிற்கும் என்ன சம்பந்தம் என நீங்கள் நினைக்கக்கூடும், காரணம் இருக்கிறது தற்போதைய கனடாவின் எதிர்க்கட்சி தலைவர் Pierre Poilievre ஒரு மக்கள் சந்திப்பில் அவர் அளித்த தேர்தல் வாக்குறுதி பலாயிரம் international Students ஐ கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளதுடன் கனடா மக்கள் இந்த வாக்குறுதியை பெரிதும் வரவேற்கின்றனர்.
அவர் குறிப்பிட்டதாவது " international students களை குறிவைத்து நடக்கும் மோசடிகளை முடிவுக்கு கொண்டுவரும் வகையிலும் இனி வரும் காலத்தில் international student படித்து முடித்துவிட்டு தங்கள் நாட்டிற்கே திரும்பி செல்லவேண்டும் இங்கே அவர்கள் தங்கள் வாழ்க்கையை தொடரமுடியாது மற்றும் international students களால் வீடு/ தங்குமிடங்களின் வாடைகைகள்மிக உயர்வடைந்துள்ளது இதனால் கனடிய மக்கள் பெரும் துன்பத்தை அனுபவிக்கிறார்கள் அதனை கருத்தில் கொண்டு இனி தேர்தலில் வெற்றிபெற்றால் நான் இதனை நிறைவேற்றுவேன் என குறிப்பிட்டார்"
இதனை கனடிய மக்கள் வரவேற்றுள்ளனர் அத்துடன் அடுத்த பிரதமராக இவர் வருவதற்கு சாத்தியக்கூறுகள் மிக மிக அதிகம் என்பதால் தற்போதுள்ள மாணவர்கள் கவலையடைந்துள்ளனர். காரணம் அவர்கள் நினைத்தபடி இனி படித்துமுடித்துவிட்டு வேலை ஒன்றை பெற்று நிரந்தர குடியுரிமையை பெறுவது சாத்தியமற்றது அதனால் அவர்கள் திரும்பி தங்கள் தாய்நாட்டிற்கு செல்ல அதிக வாய்ப்புக்கள் உள்ளன.
Comments
Post a Comment