இலங்கை கிரிக்கட் அணியானது ICC men Cricket World Cup 2023 இல் பங்குபற்றிய 9 போட்டிகளில் 2 இல் வெற்றி 7 போட்டிகளில் தோல்வியை சந்தித்தது. குறிப்பாக இந்தியாவுடனான போட்டியில் 55 ரண்களுக்கு ஆட்டமிழந்து இந்தியாவானது 302 ரண்கள் வித்தியாசத்தில் வெற்றியீட்டியது. இதன் எதிரொலியாக இலங்கை கிரிக்கட் ரசிகள் இலங்கை கிரிக்கட்சபை முன்பு ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டனர் இது நாடுமுழுவதும் பேசுபொருளானதை தொடர்ந்து, விளையாட்டுத்துறை அமைச்சர் ரொசான் ரணசிங்கே தற்போதைய Cricket board ஐ கலைத்து புதிதாக ஒரு Cricket board ஐ முன்னாள் உலக கோப்பை சாம்பியன் Arjuna Ranatunga தலைமையிலான புதிய குழு நியமிக்கப்பட்டது. இதனை எதிர்த்து முன்னாள் அணி தேர்வுக்குளு இந்த நடைமுறை செல்லுபடியாகாது என வழக்கு தொடுத்தனர் தற்போது அந்த வழக்கு நிலுவையிலுள்ளது.
10/11/2023 இலங்கை நாடாளுமன்றில் இலங்கை கிரிக்கட்சபையில் உள்ள ஊழல் மோசடிகள் பக்கச்சார்பான தெரிவுமுறைகள், இலங்கை கிரிக்கெட்சபை தலைவர்முதல் அதிகாரிகளை நீக்கம் செய்யவேண்டும் என விவாதம் இடம் பெற்றிருந்தது. இந்தவிதமான வாக்கெடுப்புமின்றி இந்த பிரேரணை நிறைவேறியது. இதன் மூலம் முழுகட்டமைப்பையும் மாற்றி புதியதொரு கிரிக்கட் தெரிவுகுழுவை உருவாக்குவதே இந்த தீர்மானத்தின் நோக்கம் அத்துடன் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொசான் ரணசிங்கே ஊழல் ஒன்றை நாடாளுமன்றில் வெளிப்படுத்தியுள்ளார் அதாவது 2 million Dollar பணம் இலங்கை கிரிக்கட் சபைக்கு உரித்தான பணத்தினை தனியார் வங்கிக்கணக்குகளுக்கு மாற்றும் நடவடிக்கை நடந்துள்ளதாக கருத்துதெரிவித்தார்.
ICC இன் சட்டதிட்டங்களின்படி கிரிக்கட்டினுள் அரசியலை தொடர்புபடுத்துவது தவறாகும் அதனால் இன்றைய தினம் ICC council ஓர் தற்காலிக இடைநீக்கத்தை இலங்கை கிரிக்கட் அணிமீது விதித்துள்ளது. மேலும் கிரிக்கட் சபையினுள் ஊழல் மோசடிகள் அதன் தலைவர் மற்றும் அதிகாரிகள் கண்ணியமாக பதவி விலகவேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் எவரும் பதவி விலகலுக்கு தயாராஇல்லை ஆம் " கருவாட்டு ருசி கண்ட பூனைகள் அல்லவா" அதுவும் இலங்கை மக்களின் வரிப்பணத்தை தண்ணீர்போல் செலவு செய்தும் ஊழல் செய்தும் கொழுத்துப்போன பூனைகள்.
இவ்வாறு ICC ஆல் கிரிக்கட்சபைகள் இடை நீக்கப்படுவது முதல்முறையல்ல அரசியல் தலையீடுகள் காரணமாக Zimbabwe மற்றும் அமெரிக்க அணிகள் இடைநீக்கப்பட்டது குறிப்பிடத்தக்க விடயமாகும். இலங்கையில் எங்கும் ஊழல் எதிலும் ஊழல் இங்கே ஊழல்வாதிகளும் அதே இனம் அதனால் பாதித்து கொந்தளிப்பதும் அதே இனம் உலகெங்கிலும் தேடினாலும் இதூ போன்ற கேவலங்கள் எந்த நாட்டிலும் கிடையாது இலங்கை ஆசியாவின் ஆச்சரியம் இனி உலகின் ஆச்சரியம் அவமானம் எதுவேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம்.
"ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா"
Comments
Post a Comment