கனடாவில் நீங்கள் ஒரு International Student (IS) ஆக இருந்தால் நீங்கள் வாரம் 20 மணிநேரம் மாத்திரமே வேலைசெய்யமுடியும். இந்த நடைமுறை கடந்தவருட இறுதியில் International student வாரம் ஒன்றுக்கு 20 மணிநேரத்துக்கு மேல் வேலைசெய்யமுடியுமெனவும் இந்த நடைமுறை 2023 December வரை நடைமுறையில் இருக்கும் வகையில் சட்டம் கொண்டுவரப்பட்டது.
இதனால் பல மாணவர்கள் முழுநேரவேலைகளை செய்யதொடங்கினார்கள் அதன் விளைவாக பல இலட்சம் மாணவர்கள் வேலை இல்லாமல் ஆக்கப்பட்டதுடன் புதிதாக கனடா வரும் மாணவர்கள் ஒருவேலையை பெற்றுக்கொள்ள பலமாதங்கள் இன்னல்களுக்கு முகம் கொடுக்கவேண்டிவந்தது. மாணவர்கள் தஙகள் கல்விக்கான பணத்தை செலுத்துவதற்காக அதிக நேரம் (Over time) வேலைகளை செய்யத்தொடங்கினர் இதனால் அடுத்த வேலை நேரம்(next shift ) பார்ப்பதற்கு ஊழியர்கள் தேவைப்படவில்லை சுருக்கமாக சொல்லப்போனால் ஒரு மாணவர் 3 நபர்களின் வேலையை பறித்துவிட்டார் என்பதே கணக்கு. எவ்வளவு கொடுமையான விடயம் என்பதை நீங்களே எண்ணிப்பாருங்கள் நீங்கள் எங்கு வேலை தேடினாலும் வேலை எடுப்பவர்கள் மிகவும் குறைவு அத்துடன் அவர்களுக்கு குறைந்த ஊழியர் எண்ணிக்கையில் அதிகநேரம் வேலைசெய்ய இந்த international students இருக்கும் போது புதிதாக ஆட்களை வேலைக்கு எடுக்கவில்லை.
மிகவும் முட்டாள்தனமான இந்த வேலைநேர அதிகரிப்பால் வேலை இல்லாமல் கடந்த ஓராண்டாக பல இலட்சம் மக்கள் துன்பப்பட்டுக்கொண்டுவருகிறார்கள். மீண்டும் வாரம் ஒன்றிற்கு 20 மணிநேரம் மட்டும் வேலைசெய்யும் பழையநடைமுறை December 2023 முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. ஒரு சட்டத்தை அரசு நடைமுறைப்படுத்த முன்னர் அதனால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை சற்றாவது சிந்திக்கவேண்டும் அதன் சாதகம் மற்றும் பாதகங்களை நோக்கவேண்டும்.எனது தனிப்பட்ட கருத்தின்படி இது போல சட்டங்களை நிறைவேற்றும் முன்னர் மக்களின் கருத்தை கேட்கவேண்டும் இல்லாவிட்டால் மக்களின் வெறுப்புக்கு ஆளாவதை தவிர வேறுவழியில்லை.
Comments
Post a Comment