Skip to main content

Posts

Showing posts from November, 2023

இன்று என்பது ஓர் பரிசு

தற்போது 2023 ம் ஆண்டின் இறுதிப்பகுதியில் உள்ளோம் இன்று கார்த்திகை 27. இந்த வருடம் பல எதிர்பார்ப்புக்களுடன் ஆரம்பமானது காரணம் 3 வருட Covid-19 கெடுபிடிகளின் பின்னர் சுததந்திர பறவைகளாக மக்கள் சிறகடித்து வீதிகளிலும் தடைகளின்றி விமானப்பயணங்கள் மேற்கொள்ள தொடங்கினார்கள்.கனடாவை பொறுத்தவரை கனடா Covid-19 ன் பாதிப்பிலிருந்து கனடிய நிறுவனங்கள் மீண்டுவர முடியவில்லை இருந்த போதிலும் பரபரப்பாகவே நாடு இயங்கியது எனலாம். உலகளாவிய ரீதியில் குறிப்பாக மேற்கத்தேய நாடுகளில் நிலவிய பொருளாதார மந்தநிலைகாரணமாக வேலையிழப்பு,வேலையின்மை,அத்தியாவசியப்பொருட்களின் வரலாறுகாணாத விலையேற்றம், வீடுகளின் மாதப்பணம் முதல் கார்கள், தங்குமிடங்கள் என விலையேற்றம் காணாத விடயங்களே இல்லை எனலாம். புதிதாக கனடாவருகை தந்தவர்களுக்கோ அதிர்ச்சிமேல் அதிர்ச்சி இன்னொரு பக்கம் அகதி அந்தஸ்து கோரி பெரும் கூட்டம், கடந்த ஆண்டு அரசு கொண்டுவந்த ஒரு சட்டத்தின் தளர்வால் மாணவர்கள் பலர் வேலையற்று திண்டாடினார்கள் அந்த நிலமை தொடர்கிறது இவ்வாறு ஏற்றம் இல்லாமல் அதளபாதாளத்துக்கு சென்றுவிட்டது.அத்துடன் அதிர்ச்சியளிக்கும் விடயமாக கனடா வந்த பல வெளிநாட்டு குடியுரி...

இனி 20h/week மட்டுமே வேலை வழமைக்கு திரும்பும் சட்டம்!!!

  கனடாவில் நீங்கள் ஒரு International Student (IS) ஆக இருந்தால் நீங்கள் வாரம் 20 மணிநேரம் மாத்திரமே வேலைசெய்யமுடியும். இந்த நடைமுறை கடந்தவருட இறுதியில் International student வாரம் ஒன்றுக்கு 20 மணிநேரத்துக்கு மேல் வேலைசெய்யமுடியுமெனவும் இந்த நடைமுறை 2023 December வரை நடைமுறையில் இருக்கும் வகையில் சட்டம் கொண்டுவரப்பட்டது. இதனால் பல மாணவர்கள் முழுநேரவேலைகளை செய்யதொடங்கினார்கள் அதன் விளைவாக பல இலட்சம் மாணவர்கள் வேலை இல்லாமல் ஆக்கப்பட்டதுடன் புதிதாக கனடா வரும் மாணவர்கள் ஒருவேலையை பெற்றுக்கொள்ள பலமாதங்கள் இன்னல்களுக்கு முகம் கொடுக்கவேண்டிவந்தது. மாணவர்கள் தஙகள் கல்விக்கான பணத்தை செலுத்துவதற்காக அதிக நேரம் (Over time) வேலைகளை செய்யத்தொடங்கினர் இதனால் அடுத்த வேலை நேரம்(next shift ) பார்ப்பதற்கு ஊழியர்கள் தேவைப்படவில்லை சுருக்கமாக சொல்லப்போனால் ஒரு மாணவர் 3 நபர்களின் வேலையை பறித்துவிட்டார் என்பதே கணக்கு. எவ்வளவு கொடுமையான விடயம் என்பதை நீங்களே எண்ணிப்பாருங்கள் நீங்கள் எங்கு வேலை தேடினாலும் வேலை எடுப்பவர்கள் மிகவும் குறைவு அத்துடன் அவர்களுக்கு குறைந்த ஊழியர் எண்ணிக்கையில் அதிகநேரம் வேலைசெய்ய ...

"கனடாவில் இனி International Students படித்துவிட்டு நாடு திரும்பவேண்டியது தான்" கனடா எதிர்கட்சி தலைவர் Pierre Poilievre கருத்து!!!

  கனடாவில் குடியேறவேண்டுமென்பது பல இலட்சக்கணக்கானவர்களின் கனவு அதில் பலவழிகளை  பின்பற்றி அந்த கனவை மக்கள் பூர்த்திசெய்து கொள்கின்றனர். இதில் வேலைதேடி கனடாவருபவர்கள் மற்றும் உயர்கல்விவேண்டி கனடா வருபவர்கள் மிக அதிகம், இவ்வாறு கனடாவினுள்வருபவர்களால் கனடா அரசுக்கு பல நன்மைகள் கிடைப்பதுடன் சில பிரச்சனைகளும் ஏற்படுகின்றன. அதில் குறிப்பிடத்தக்க வகையில் international students ஐ ஆண்டுக்கு அதிகமாக உள்வாங்குகின்றது இந்த எண்ணிக்கை வருடாவருடம் மிகஅதிகமாக உயர்ந்துவருகிறது. இதனால் இங்கு கல்விக்காக வரும் மாணவர்கள் தங்குமிடங்களுக்கான கேள்வியை அதிகரிக்கின்றனர் இதனால் கனடா மக்களும் மாணவர்களும் பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர்.  வேறு எந்த உலகநாடுகளையும் ஒப்பிடும்போது  கனடாவினுள் மாணவராக நுளைந்து நிரந்தர குடியுரிமையை இலகுவாக பெறமுடியும் அதனால் உலகளவில் பலர் மாணவர்களாக கனடாவருவதற்கு எத்தனிக்கின்றனர். இதனை பயன்படுத்தி பல மோசடிக்காரர்கள் மாணவர்களை ஏமாற்றி பணம் பறிக்கும் செயற்பாட்டிலும் ஈடுபட்டுவருகின்றனர். சரி இதற்கும் தலைப்பிற்கும் என்ன சம்பந்தம் என நீங்கள் நினைக்கக்கூடும், காரணம் இருக்கிறது...

இலங்கையின் கிரிக்கட் சபை ICC ஆல் தற்காலிக நீக்கம்

  இலங்கை கிரிக்கட் அணியானது ICC men Cricket World Cup 2023 இல் பங்குபற்றிய 9 போட்டிகளில் 2 இல் வெற்றி 7 போட்டிகளில் தோல்வியை சந்தித்தது. குறிப்பாக இந்தியாவுடனான போட்டியில் 55 ரண்களுக்கு ஆட்டமிழந்து இந்தியாவானது 302 ரண்கள் வித்தியாசத்தில் வெற்றியீட்டியது. இதன் எதிரொலியாக இலங்கை கிரிக்கட் ரசிகள் இலங்கை கிரிக்கட்சபை முன்பு ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டனர் இது நாடுமுழுவதும் பேசுபொருளானதை தொடர்ந்து, விளையாட்டுத்துறை அமைச்சர் ரொசான் ரணசிங்கே தற்போதைய Cricket board ஐ கலைத்து புதிதாக ஒரு Cricket board ஐ முன்னாள் உலக கோப்பை சாம்பியன் Arjuna Ranatunga தலைமையிலான புதிய குழு நியமிக்கப்பட்டது. இதனை எதிர்த்து முன்னாள் அணி தேர்வுக்குளு இந்த நடைமுறை செல்லுபடியாகாது என வழக்கு தொடுத்தனர் தற்போது அந்த வழக்கு நிலுவையிலுள்ளது.  10/11/2023 இலங்கை நாடாளுமன்றில் இலங்கை கிரிக்கட்சபையில் உள்ள ஊழல் மோசடிகள் பக்கச்சார்பான தெரிவுமுறைகள், இலங்கை கிரிக்கெட்சபை தலைவர்முதல் அதிகாரிகளை நீக்கம் செய்யவேண்டும் என விவாதம் இடம் பெற்றிருந்தது. இந்தவிதமான வாக்கெடுப்புமின்றி இந்த பிரேரணை நிறைவேறியது. இதன் மூலம் முழுகட்டமை...

Whats app இல் புதிய Update !!!

  பிரபலமான சமூகஊடகத்தளமான Whats app இல் அதிக நாட்களாக பயனர்களால் எதிர்பார்க்கப்பட்டுவந்த ஒரு Update ஐ meta நிறுவனத்தின் CEO வும் WhatsApp ன் தலைவருமான Mark Zuckerberg தனது Face book தளத்தில்இட்ட பதிவில் இனி பயனர்கள் ஒரே Whats app ல் 2  கணக்குகளை பயன்படுத்தமுடியும் மெனவும் அடுத்துவரும் Update இனை செயற்படுத்துவதன் மூலம் இந்த சேவையை பெற்றுக்கொள்ளமுடியுமெனவும், முதற்கட்டமாக Android தளங்களில் இந்த சேவை கிடைக்கப்பெறும் தொடர்ந்து ஏனைய தளங்களுக்கு கிடைக்கும் என தெரிவிந்துள்ளார்.