கனடா Visitor visa ஏன் நிராகரிக்கப்படுகிறது?
முதல் எப்போதும் இல்லாத அளவு Visitor Visa Rejections அதிகரித்து வருகின்றது இது பற்றி 20 விடயங்களை உள்ளடக்கிய YouTube காணொளி ஒன்று எனது Sarujan Views YouTube channel ல் இன்னும் சில நாட்களில் வெளிவரும்.
கனடா விசிட்டர் விசா ஏன் இவ்வளவு அதிகமாக அதுவும் இலகுவாக பலருக்கும் வழங்கப்பட்டது என்று நீங்கள் சிந்தித்தது உண்டா? கனடா வினுள் ஒரு நபர் விசிட்டர் விசாவில் வந்தால் அவர் கனடிய வங்கியொன்றில் வைப்பிலிட்டு அவர் கனடாவில் தங்கி நிற்கும் வரை அதனை செலவு செய்வதனால் கனடிய பொருளாதாரத்துக்கு பலம் சேர்கிறார். இதுமட்டுமல்லாது தற்போது கனடாவில் நிலவிவரும் Labour shortage ஊழியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவும் February 28 2025 வரை Visitor. visa வில் வருபவர்கள் ஒரு வேலையை பெற்றுக்கொண்டால் அதாவது Work offer Letter ஐ பெற்றால் அதனை கொண்டு அவரது visitor visa வை work visa வாக Convert செய்து கொள்ளமுடியும்.
சரி, எந்தெந்த காரணங்களால் Visitor Visa Reject ஆகுது?
1.Proof of financial - நீங்கள் கனடாவில் தங்கிநிற்கும் காலத்தில் உங்கள் வாழ்க்கை செலவீனங்களை நடாத்துவதற்கு போதியளவு பணம் வைப்பிலிட்டு காண்பிக்க வேண்டும். நீங்கள் தங்கி நிற்கும் காலம் வரை CAD $150/ day வீதம் நீங்கள் வைப்பிலிடுவது சிறந்தது.
2.The source of Funds - நீங்கள் வைப்பிலிடும் பணத்தின் மூலத்தினை IRCC பரிசீலிப்பார்கள் நீங்கள் பணம் வைப்பிலிட்ட ஆவணங்களின் ஆதாரங்கள்.
3. Current Employment Situation - நீங்கள் தற்போது ஒரு வேலையில் இருப்பதை உறுதி செய்து அதன்மூலம் சம்பாதித்த பணத்தை வைப்பிலிட்டுள்ளேன் என்பதை காண்பிப்பது சிறந்தது. நீங்கள் உங்கள் தாய்நாட்டில் வேலை, இருப்பிடம், வாழ்க்கை மிக முக்கியமான ஒன்று நான் திரும்பி எனது நாட்டிற்கு செல்வேன் என்பதை நிறூபிக்க தவறக்கூடாது.
4. Lack of employment prospects in your home country - நீங்கள் வாழும் நாட்டில் பொருளாதார பிரச்சனையோ அல்லது Unemployment rate அதிகமாக இருந்தால் விசா நிராகரிக்கப்பட வாய்ப்புக்கள் அதிகம். காரணம் நீங்கள் நல்ல வேலைவாய்ப்பை தேடி கனடாவருகிறீர்கள் என அரசு நினைக்கும்.
5. Not submitting adequate and accurate supporting papers- நீங்கள் உங்கள்நாட்டிற்கே திரும்பி போய்விடுவேன் என்ற உத்தரவாதத்தை அளிக்க உறுதிப்படுத்துவதற்கான காணி மற்றும் சில ஆவணங்களை சமர்ப்பிக்கதவறுதல்.
6. Purpose of Visit (Travel)- நீங்கள் என்ன நோக்கத்திற்காக கனடா வருகிறீர்கள் குடும்ப விழாக்களுக்கா அல்லது கனடாவை சுற்றி பார்க்கவா அல்லது நண்பர்களை பார்க்கவா உங்கள் வருகைக்கான காரணம் மிக ஆணித்தனமானதாக இருக்காவிட்டால் Reject ஆக வாய்ப்புள்ளது.
7. Travel History - உதாரணமாக நீங்கள் முதன் முதலாக உங்கள் நாட்டைவிட்டு வெளியேறுபவராகவோ அல்லது புதிதாக கடவுச்சீட்டு எடுத்து உங்கள் முதல் பயணம் கனடாவாக இருந்தால் விசா மறுக்கப்படும் காரணம் ஒரு நபரின் பயண தகவல்களின் படி ஒரு சில நாடுகள் பயணித்தவரானால் கனடிய அரசு அவரை நம்பகத்தன்மை உடையவராக கருதும்.
8. Family Ties - கனடாவிலும் சரி உங்கள் தாய்நாட்டிலும் சரி குடும்ப உறவுகள் எவ்வாறு உள்ளது. இங்கே கனடாவில் உங்களுக்கான உறவுமுறை நபர்களையும் உங்கள் தாய்நாட்டில் அவர்களின் சொந்தங்கள் உள்ளனரா என்பதும் குடும்ப வைபவங்களை காரணம் காட்டுபவர்கள் கவனமாக கவனிக்கவும்.
9. Other Ties To Home Country - உங்களது தாய்நாட்டில் உங்களுக்கு இவ்வளவு உறவினர்கள்இருக்கிறார்கள் உங்கள் வாழ்க்கை மற்றும் உறவுமுறைகள் உங்கள் தாய்நாட்டில் அதிகம் இருப்பதால் நீங்கள்திரும்பி செல்வீர்கள் என்பதை IRCC ற்கு நம்பவைக்க தவறுதல்.
10. Length of Stay- நீங்கள் தங்கிநிற்பதற்கான கால அளவு 6 மாதங்களுக்கு மேலதிகமாக வேண்டும் என விண்ணப்பித்தல் தவறு.
11. Misrepresentation - உங்கள் ஆவணங்களில் சில தகவல்களை வேண்டுமென்றே நீக்குதல் அல்லது சேர்த்தல் தவறு, போலியான ஆவணங்கள்.
12. Documents that Do not appear authentic- விண்ணப்பமானது மிகச்சரியானதாகவும் , முழுமையாக பூர்த்தி செய்யாமை
13. Overstaying Status in Canada or any other country- நீங்கள் முன்பே வேறு நாட்டில் விசாகாலப்பகுதிக்கு மேலதிக காலம் தங்கியிருப்பின் அது காரணமாகலாம்.
14. Illegal Status in the Country of your residence - நீங்கள் தற்போது வசிக்கும் நாட்டில் சட்டத்திற்கு புறம்பாக தங்கியிருத்தல்
15- Not meeting international security standards- உலக பாதுகாப்பு நியமங்களுக்கு ஆபத்தாக இருத்தல் அதாவது உலகளவில் தேடப்படும் குற்றவாளி
16- Your invitation letter - உங்களது Invitation letter மிக விளக்கமாக குறிப்பிடவேண்டும் அப்படி இல்லாவிடில்
17 -Human Rights Violations- உங்கள் நாட்டில்ராணுவத்தில் நீங்கள் போர்குற்றங்களில் சம்பத்தப்பட்டிருந்தால்.
18-Program of Study (Student Visa Refusal)- Student Visa மறுக்கப்பட்டிருத்தல்
19- Not being able to perform the work (In case of a worker)- கனடாவில் வேலை நடை முறை செய்யாமை
20- Failure to satisfy health standards- Travel Insurance இல்லாமை
Comments
Post a Comment