கடந்த சிலநாட்களாக உலகளவில் இஸ்ரேல் Vs பாலஸ்தீனப்போர் உக்கிரமாக நடந்துவருகிறது. ஊடகங்களில் பெரும்பேசுபொருளாக உள்ள தலைப்பு இதுவாகும். பாலஸ்தீன கிளரச்சியாளர்கள் திடீர் தாக்குதலை மேற்கொண்டனர் தரை, வான்வழியாகவும் நிலக்கீழ் சுரங்கம் வழியாகவும் உள்நுளைந்த Hamas போராளிகள் தாக்குதல்களை மேற்கொண்டனர். Gaza பிராந்தியத்திலிருந்து 20 நிமிடங்களில் இஸ்ரேலின் பல பகதிகளை இலக்குவைத்து சரமாரி ராக்கெட்தாக்குதல்களை மேற்கொண்டனர் இதனை இஸ்ரேல் தேசம் சிறிதும் எதிர்பார்க்கவில்லை.
இந்த முறை தாக்குதல்கள் Gaza பகுதிகளிலிருந்து மட்டும் இடம்பெறவில்லை தென் லெபானில் எறிகணைகள் வீசப்பட்டுள்ளன. தற்போது உலகளவில் சர்ச்சையை ஏற்படுத்திய விடயம் என்னவெனில் உலகின் Number one உளவு அமைப்பு என்று அழைக்கப்படும் Mossad ற்கு இந்த தாக்குதல் பற்றி முன்கூட்டியே தெரியவில்லையா அத்துடன் உள்நாட்டுஉளவுஅமைப்பான Shin bet(Shabak) ராணுவ புலனாய்வு பிரிவான Aman என்பனவும் இதை கணிக்க தவறிவிட்டதா? இது ஒரு புலனாய்வு தோல்வியாக உலகம் கருதுகிறது.
எனது தனிப்பட்ட கருத்தின்படி முன்னைய காலங்கள் போல ஹமாஸ் ன் நடவடிக்கைகளை கண்காணிக்க Mossad ஆனது Palestine னுள் தனது உளவாளிகளை அனுப்பியிருந்தது இதனை ஹமாஸ் அறிந்துவிட்டது தற்போது அவர்கள் நம்புவது தொழில்நுட்பத்தை ஆகும் ஆனால் அது எந்தளவுக்கு கைகொடுக்கும் என்பது கேள்விக்குறி? முன் எப்போதும் இல்லாதளவு ஹமாஸ் தங்கள் ராணுவ பலத்தை அதிகரித்துள்ளனர்.
இன்னொருவகையில் இதனை நோக்கினால் Mossad இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ள நினைத்திருக்கலாம். முதலில் பலஸ்தீன போராளிகளை தாக்குதலை நடத்தி இஸ்ரேல் பகுதிக்குள் நுளைய வைத்துவிட்டு பின்னர் அவர்களை ஒட்டுமொத்தமாக அழிப்பது அவர்கள் திட்டமாக இருக்கலாம். இதனை மொசாட்டின் தோல்வியாக உலகம் கருதினாலும்இதிலும் ஓர் ராணுவ தந்திரம் ஒளிந்திருக்கிறது. நாம் ஒன்றை நினைவில் கொள்ளவேண்டும் "இந்த உலகில் தலைசிறந்தவர்கள் என்று எவருமில்லை" வரலாற்றில் குறிப்பிட்ட காலம் முதலிடத்தில் இருப்பார்கள் அவர்கள் அந்த இடத்தை தொடர்ந்து தக்கவைக்க முடியாது அந்த இடத்தை பிடிக்க இன்னொருவர் வருவார் இதுதான் உலக வரலாறு. இந்த உலகில் மனிதநேயத்தைவிட சிறந்த விடயம் வேறு இல்லை வாழும் காலம் சிறியது இறந்தால் ஆறு அடி நிலமே சொந்தம். பொய் புராணக்கதைகளை நம்பி அதற்காக உயிரை பறிப்பதும் கொல்லுவதும் தவறு. கடவுளின் பிள்ளைகள் எல்லோரும் சமம் இதில் நான் சிறந்தவன் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்று யாருமில்லை அதை நம்புவபர்கள் மன நோயாளிகள். உடலின் நிறம்,மொழி,மதம்,இன வேறுபாடுஇன்றி நாம் எல்லோரும் மனிதர்கள் இங்கு சக மனிதர்களை ஆடு,மாடுகளாக நினைப்பவர்கள் மனநோயாளிகள் இந்த மனநோய்க்கு மருந்து மரணம் மட்டுமே. வாழும்வரை மற்றவர்களுக்கு துன்பம் விழைவிற்காமல் வாழ்வதே சிறந்த வாழ்வு
Comments
Post a Comment