சீனாவின் Build and Road Initiative இலங்கையானது இணைந்துள்ளது. பொருளாதாரம் உட்கட்டமைப்பு மற்றும் உலகளாவிய வர்த்தகத்தில் இலங்கையின் பங்கை அதிகரிக்கும் நோக்கிலும் இணைந்துள்ளது. சீனாவிற்கு விஐயம் மேற்கொண்டுள்ள ஐனாதிபதி Oct 15-19 வரை சீனபயணம் அமைந்துள்ளது. ஏற்கனவே கடன் மீளச்செலுத்துவது தொடர்பான பேச்சுவார்தைகள் நீடித்தாலும் மீளச்செலுத்துவதற்கான காலவரையறையை அதிகரிக்கவே இந்த பயணத்தின் முக்கிய நோக்கமாகும். இலங்கையானது இந்துசமுத்திரத்தின் மத்தியில் மிகமுக்கிய கேந்திய நிலையமாகும் இதனால் சீனாவின் பெருவிருப்பம் தனது புதிய பட்டுப்பாதை திட்டத்தில் இலங்கையை இணைப்பதாக இருந்தது அதற்கு தற்போது இலங்கை இணக்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இதனை சிலர் வரவேற்றாலும் இலங்கைக்கு வேறுவழியில்லை என்பதே நிதர்சனமான உண்மையாகும். இந்த சீன நட்புறவு இந்தியாவுக்கு கடும் அதிப்ருத்தை ஏற்படுத்தினாலும் இந்தியாவினது வெளியுறவு கொள்கைகளோ அல்லது இலங்கைக்கான பணஉதவிகளோ கைகொடுக்கவில்லை ராஐதந்திர ரீதியில் பல தசாப்தங்களால் இந்தியா படுதோல்விகளை சந்தித்ததை உணரவில்லை. நாளை கண்ணெட்டும் தூரத்தில் சீன போர்கப்பல்கள் வியூகம் அணிவகுத்து நிற்கும் போது கவலைப்பட்டு பயனில்லை. இந்தியாவிற்கு இலங்கை செய்த இந்த செயல் அதிர்ச்சியை கொடுத்தாலும் நாம் எதை விதைக்கிறோமோ அதையேதான் அறுவடைசெய்ய முடியும். வல்லரசாக முயற்சிப்பதுவேறு கனவு காண்பது வேறு கற்பனை உலகிலிருந்து வெளியில் வந்தால் தெரியும் அனைத்தும் உண்மையே. இலங்கையை மையப்படுத்திய இந்த இந்தியா Vs சீனா போட்டியில் சீனா Points களை பெற்றவண்ணமே உள்ளது. இந்தியா தோல்விகளை சரிசெய்ய தவறிவருவதும் நிதர்சனம்.
Comments
Post a Comment