கனடாவில் வீட்டுவாடகை தொடர்ச்சியாக அதிகரித்துவருகிறது. சராரசரியாக ஒரு வாடகை குடியிருப்பாளர் 2117 $ சராசரியாக செலுத்த வேண்டியுள்ளது. கனடாவின் பிரபல rentals தளமான Rentals.ca ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பீடு செய்யும் போது இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தின் சராசரி வாடகை தொகையானது சுமார் 9.6 வீதத்தினால் அதிகரித்துள்ளது.
கடந்த மே மாதம் முதல் சராசரியாக வீட்டு வாடகை தொகையானது சுமார் நூறு டாலர்களினால் மாதாந்தம் அதிகரித்துச் செல்லும் போக்கு பதிவாகியுள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் வாடகை தொகை அதிகரித்துள்ளதுடன் புதிதாக கட்டப்படும் வீடுகள் எண்ணிக்கைகள் மிக குறைவாக உள்ள நிலையில் நாட்டினுள் புதிய குடியிருப்பாளர்கள் மற்றும் பெருந்தொகை மாணவர்கள் வருகை தருவதனால் வாடகை வீடுகளுக்கான கேள்வி மிக அதிகளவாக அதிகரித்துள்ளது.
Comments
Post a Comment