அமெரிக்காவின் பெரிய மற்றும் பழமையான பல்கலைகழகம் University of Michigan ஆகும். இங்கு 30,000 கல்வி மற்றும் நிர்வாகம் சார்ந்த ஊழியர்களும்,ஏறக்குறைய 51,000 மாணவர்கள் கல்விகற்று வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஞாயிறு அன்று நிகழ்நிலை சேவைகள், Google,Canvas,Wolverine Access மற்றும் E-mail என்பன பாதிப்புக்குள்ளாகின என அதன் இணையத்தள செய்தி குறிப்பிடுகிறது.
பாதுகாப்பு கருதி Network shutdown செய்யப்பட்டது.மாணவர்கள் தற்காலிகமாக வெளியக வலைப்பின்னல் (Outside Network) மூலம் Zoom,Adobe cloud,Dropbox,Slack,Google,Canvas,போன்ற சேவைகளை அணுகமுடியும்.இந்த சைபர்தாக்குதல் புதிய கல்விஆண்டு தொடங்குவதற்கு முதல்நாள் நடாத்தப்பட்டுள்ளது. பல்கலைகழக நிர்வாக தரப்பில் cybersecurity experts மூலம் நிலமையை சீர்செய்து கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளது.
Comments
Post a Comment