அமெரிக்காவின் Tech Industry பெரும் தலைகள் அடுத்த மாதம் அமெரிக்காவின் தலைநகரில் ஒன்றுகூட உள்ளனர்.இதில் குறிப்பிடத்தக்க விடயமாக சமகால எதிரிகளான Elon musk மற்றும் Zuckerberg ஒரே மேடையில் சந்திக்க உள்ளனர். மேலும் Microsoft's Satya Nadella,Alphabet's Sundar Pichai,OpenAI's Sam Altman ,NVIDIA's Jensen Huang போன்றவர்களும் வருகைதரவுள்ளனர். Elon musk அவர்கள் Space X, Tesla , மற்றும் Open AI ன் இணை நிறுவனருமாவார்.Zuckerberg அவர்கள் Meta வின் தலைமை செயலதிகாரி ஆவார். கடந்த சில மாதங்களாக இருவருக்கிடையயே சமூக வலைதளத்தில் கருத்து முரண்பாடு முற்றியுள்ளநிலையில் அடுத்தமாதம் இருவரும் ஒரே மேடையை பகிர்வது மக்களிடையே பரபரப்பையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஒருவரை ஒருவர் நாசுக்காக தாக்கி பேசியும் கேலிசெய்தும் வந்தநிலையில் இவர்கள் ஒரே மேடையில் என்ன பேசப்போகிறார்கள் என்ற ஆர்வம் பலரின் மத்தியில் அதிகரித்துள்ளது.
Articles, Day Today News, and more