நாம் தினமும் பல விடயங்களால் மனம் சோர்ந்து போகிறோம் எமது தன்னம்பிக்கையைஇழக்கிறோம்.சிலநாட்கள் எந்தவிதமான ஆர்பாட்டங்களுமில்லாமல் இருக்கும். உங்களுக்குவரும்பிரச்சனைகளை மனது பிரித்தறிந்து அதன் தீவிரத்தன்மை பொறுத்து பதட்டமடையச்செய்கிறது. தியானத்தால்என்ன கிடைக்கும்? அதன் பயன்கள் என்ன? என்ன கிடைத்துவிடப்போகிறது என நம்பிக்கையற்றே தியானத்தில்அமர்ந்தேன் நாட்கள் செல்ல செல்ல பல அற்புதங்கள்நடந்தன.எனது அனுபவங்களை பகிரப்போகிறேன்நிட்சயம் அது உங்களுக்கு பயனுள்ளதாக அமையும்
"யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்"
மனித மனம் எப்படிப்பட்டது? அது ஒரு பௌதீகமான ஒன்றல்ல அது உணர்வுகளையும், எண்ணப்பதிவுகளையும்கொண்டது. இலகுவில் ஈர்பினால் விரும்புவதையும்,ஞாபகப்பதிவுகளை மீட்டிபார்க்க கூடியதாகவும், பதட்டம்,அழுகை,கோபம்,விரக்தி போன்றவற்றின் பிறப்பிடம். அந்த மனம் நிகழ்ந்த விடயங்களின் சாட்சி சிலஇதை கூறி கேட்டிருப்பீர்கள் உனக்கு மனசாட்சி இல்லையா? என்று மனம் குரங்கு போன்றது அது பலதைசிந்திக்கும் இந்த குரங்குக்கு கயிற்றால் கட்டு போடுவதே தியானம்.
ஒரு பிரச்சனையை எடுத்துக்கொள்வோம் அதை நீங்கள் மீண்டும் மீண்டும் மீட்டிப்பார்க்கும் போது மனதில்அதுசம்பந்தமான சாட்சி பதிவுகள் தோன்றும் அவை உங்களைபயமுறுத்தும்,அழவைக்கும்,பதட்டமடையவைக்கும். என்னால் பிரச்சனையை நினைக்காமல் இருக்கமுடியவில்லை என்று நினைக்கிறீர்களா?
முதலில் அந்த பிரச்சனையின் தீவிரத்தன்மையை ஆராயுங்கள் மிகப்பெரியதா இல்லை சிறு பிரச்சனையா?உடனே தீர்கவேண்டியதா? அல்லது தேவையான காலம் எடுத்துக்கொள்ளலாமா? அப்பிரச்சனையை நீங்களேதீர்துக்கொள்ளமுடியுமா? அல்லது சிலரின் உதவி தேவையா? அந்த பிரச்சனையை சிறுதுண்டுகளாக்குங்கள்என்னால் இதை வெல்லமுடியும் என்ற தன்னம்பிக்கையை வழர்த்துக்கொள்ளுங்கள். தீர்வுகாணமுடியாதபிரச்சனை என்றுதனிமனிதவாழ்வில் அரிதாகவே நிகழும். வயதில் பெரியவர்களை அணுகுங்கள் அவர்கள்சிலவேளை இதே பிரச்சனையைகடந்துவந்திருக்கலாம் அவர்கள் வார்த்தைகள் உங்களுக்கு பெரிதும் உதவும்.
பிரச்சனைகளுக்கு தியானம் மூலமும் தீர்வுகாணலாம் அது எப்படி? நீங்கள் பதட்டமாக இருந்தால்பிரச்சனைகளுக்கான தீர்வுகள் தோன்றாது அவ்வாறு தோன்றினால் அவை தவறானதாக இருக்கும். நீங்கள் ஒருஇடத்தை முதலில் தேர்வு செய்யவேண்டும் அந்த இடம் தூய்மையானதாகவும் அமைதியானதாகவும் இருக்கவேண்டும் ஒரு தரைவிரிப்பொன்றை அதில் இட்டுக்கொள்ளுங்கள். தியானம் தொடங்க முதல் சற்று தூரம்நடவுங்கள் வீட்டினுள் அல்லது வீட்டின் வெளியில் பின்னர் ஒரு சிறிதழவு நீர்பருகினால் நல்லது. இறுக்கமில்லாதஆடை அணிந்திருப்பது சிறந்ததது. தியானத்துக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் ஒளிரும் விழக்குஅல்லது மெழுகுதிரியை ஒழிரவிடுவது நல்லது. இலேசான நறுமணம் தரக்கூடிய அகரபத்தியைஎரியவிடுவதுநல்ல சூழலையும் மனதையும் அமைதிபடுத்தும்.
உக்களுக்குசௌகரியமாக அமர்ந்து கொள்ளுங்கள் கால்களை மடக்கி அல்லது இடதுகாலின் மேல் இடதுகால். உக்கள் உடலை லேசானதாக ஆக்குங்கள். உக்களின் கைகளை புத்தரின் Dhyana mudra முத்திரைபோலவோ அல்லது உங்களுக்கு தெரிந்த ஒரு தியானமுத்திரையில் வைத்துக்கொள்ளுங்கள்.முதுகை நேராகவைத்திருந்துங்கள் மெதுவாக கண்களைமூடி உங்களுக்கு பிடித்த மந்திரத்தை மனதினுள் உச்சரியுங்கள்அல்லது எதுவம் செய்யாமல் உங்கள் மூச்சினை கவனியுங்கள் ஒரு பத்துநிமிடம் பின்னர் உங்கள்மனசு லேசாகிசந்தோசமான எண்ணஅலைகளை மீட்டிப்பார்க்கும் அதனுடன் செல்ல முயற்சிக்காதீர்கள். கவனம் சிதறும்போதெல்லாம் திரும்பவும் மந்திரம் அல்லது மூச்சை கவனியுங்கள்.
உங்கள கால்கள் மடிக்கப்பட்டுள்ளதால் இரத்தம் அதிகமாக மூளைக்கு பாய்ச்சப்படும்.நீங்கள் எதையும்சிந்திக்காத போது எல்லா எண்ணங்களும் சமநிலைபடுகிறது.இந்த இரத்த ஓட்டமும் அதனுடன் இணைந்தஉயிர்சக்தியான காற்றும் மூளைக்கு oxygen ஐ ஒரு நீர்பம்பி(motor) போல பாய்ச்சும். 20 நிமிடங்கள்ஆகியிருக்கும்இது போதுமானஅளவு நேரமாகும்
இப்போது மெதுவாக கண்களைதிறந்து கொள்ளுங்கள். சிலநிமிடங்கள் அமைதியாக அப்படியே இருங்கள்உங்கள் முன்னால் ஏற்றப்பட்ட ஒளியினை கவனியுங்கள். நன்றாக மூச்சை சில தடவைகள் உள் இழுத்துவெளிவிடுங்கள்.
இந்த தியானம் முடிந்த பின்னர் உடனே பரபரப்பாகாதீர்கள் அன்றாட வேலைகளை செய்யுங்கள் இதனைநீங்கள் அதிகாலை வேளைகளில் செய்வது மிகசிறப்பு. இரவு நித்திரை செல்ல முன்னர் அல்லது உக்களுக்குஏற்ற நேரத்திலும் செய்யலாம்.
நீங்கள் பஞ்ச பூத சக்திகளின் ஒன்றிணைவாக இதனை செய்கிறீர்கள் உங்கள் முன் எரியும் விளக்கு ஒளிமற்றும்,வெப்பம் உங்கள் மூச்சுகாற்று ஆகாயம் உங்கள் உடல்70% நீரால் ஆனது நீங்கள் தியானம் செய்யசெய்ய உடல் சூடாவதை உணரலாம். பஞ்ச பூதசக்திகளுடன் மனம் ஒன்றிக்கும் போது அதியங்கள்நடக்கின்றன. இதனை நீங்கள் செய்துபார்க்கலாம் அடுத்த பதிவில் சந்திக்கலாம்
Well noted 👍
ReplyDeleteNice one ❤️ while reading I felt like this wrote for me
ReplyDeleteThank you 🙏🏽