நம்வாழ்க்கையில் நாள்தோறும் பல விடயங்களை எதிர்நோக்கிறோம் அவைநம்மை பாதிக்கின்றன.இந்தவாழ்க்கைக்கான ஒட்டத்தில் மகிழ்ச்சியாக வாழ என்னவழி ? கவலைகள் இல்லாமல் இருக்க என்ன வழி?
இந்த மாதிரியான கேள்விகள் உங்கள் மனதில் எழுந்திருக்கலாம். நாம் எம்மை சந்தோசப்படுத்தும் விடயங்களிலிருந்து என்றுமே விலகியிருந்ததில்லை துக்கப்படுத்தும் விடயங்களை வெறுக்கிறோம் அதிலிருந்து விலகியிருக்கிறோம். தருணங்களை நல்லதா கெட்டதா என்று பிரித்தறிவது மனமே.
நான் விரைவாக எதையும் தயார்படுத்தவில்லை வெளியில் செல்ல தயார் ஆனேன் காலநிலை அருமையாக இருந்தது எனது கால்கள் அருகில் இருக்கும் பூங்காவினை நோக்கி சென்றது அங்கு இடப்பட்டிருந்த இருக்கைகளில் ஒன்றில் அமர்ந்தேன். சில நிமிடங்கள் சென்றன ஒரு வித ஆழமான அமைதிதொற்றிக்கொண்டது.
ஆம் அது எனக்கு அப்போது தேவைப்பட்ட ஒன்றுதான்.கல்வி மற்றும் வேலைபழுவின் அழுத்தத்தில் இருந்து வெளிவருவதற்கு. அங்கு விளையாடிக்கொண்டிருக்கும் சிறு பிள்ளைகளை பார்த்துக்கொண்டும் அவர்கள்குரல்கள் மெட்டமைக்காத சங்கீதம் போல இருந்தது. நான் அந்த தருணங்களில் வாழ்ந்துகொண்டிருந்தேன்.
எனது அந்த நாளை பூங்கா சிறப்பித்தது என்றால் மிகையாகாது நான் ரசித்தபடி அந்த தருணங்களைஎனதாக்கிக்கொண்டேன்
இதுபோல நீங்களும் உங்கள் உளநலனை பாதுகாக்க தருணங்களை உங்களதாக்கிக்கொள்ளுங்கள்
"இன்றைய நாள் என்னுடையது இந்த நாளை நான் எனதாக்கிக்கொள்ளப்போகிறேன்" என்னால் முடிந்தளவுபுன்னகைக்கப்போகிறேன் சவால்களை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ளப்போகிறேன். அழகியதருணங்களை நான் உருவாக்கிக்கொள்ளப்போகிறேன்.கெட்ட விடயங்கள் என்னை பலவீனப்படுத்த நான் இடமளிக்க மாட்டேன்.இன்றையநாளை சிறப்பாக்க நான் முயற்ச்சிப்பேன்.
நீங்கள் அதிகம் சிந்தனை சிதறவிடுபவராகவோ அல்லது பதட்டம் பயம் உள்ளவராக இருந்தால் தினமும் உங்களுக்கு இந்த வார்த்தைகளை சொல்லிக்கொள்ளுங்கள்.
மகிழ்சியாக வாழ நாம் எம்மை சீர்படுத்தவேண்டும் தேவையில்லாத விடயங்களை நீங்கள் பற்றி அதிகம்சிந்திப்பதை விடுத்து உங்களை மகிழ்சியாக்கும் விடயங்களில் அதிகம் கவனம் செலுத்துங்கள்.
தியானம் செய்யுங்கள்,புத்தகம் படியுங்கள்,பிடித்தவர்களுடன் பேசுங்கள்.
உங்களால் உங்களை சந்தோசமாக வைத்துக்கொள்ளமுடியும்.
Comments
Post a Comment