இந்த உலகில் பேரரசுகள் பல உருவாகி அவைகுறிப்பிட்ட காலப்பகுதியில் வீழ்ச்சியை சந்தித்தன. ரோமப்பேரரசு,ஒட்டோமன் பேரரசு,பிருத்தானிய பேரரசுகளை கூறலாம்.வீழ்த்தமுடியாத பேரரசு என்று ஒன்று இல்லை என்பதே வரலாறு நமக்கு கற்பிக்கிறது. அமெரிக்க பேரரசை யார் வீழ்த்தப்போகிறார்கள்? சீனாவா இந்தியா,ரஸ்சியா,அல்லது அரபுலகமா? ஆம் இவைகளும் தான் இவைகளுடன் அமெரிக்காவின் உள்ளக பிரச்சனைகள் எப்படி பேரரசின் வீழ்ச்சிக்கு நேரடியாக செல்வாக்குச்செலுத்துகின்றன என்பதை இந்த பகுதியில் பார்ப்போம்.
கடந்த நூற்றாண்டில் உலகில் வல்லரசுநாடாகவும்,தீர்மானிக்கும் சக்தியாகவும் இருகிக்கிறது அதன் இராணுவபலத்தால் பலவிடயங்களை சாதித்துள்ளது.இவ்உலகில் அசைக்கமுடியாத இடத்தை பெற்றுள்ளது அமெரிக்க பேரரசு உண்மையிலேயே தனது பலத்தினால் இன்றுவரை மேலோங்கியுள்ளதா? அல்லது அதன் பேரரசு பதவியில் இருந்து பதவிஇறக்க அதனை சூழ்ந்துள்ள ஆபத்துகள் என்னென்ன? இதனை வாசிப்பதன் மூலம் பூகோளஅரசியல் பற்றிய விரிவான தெளிவு உங்களுக்கு கிடைக்கும் என நம்புகிறேன்.
சரி எதிலிருந்து தொடங்குவோம்?உண்மையிலேயே இந்த அமெரிக்க பேரரசு வலிமையுடன் உள்ளதா? அல்லது அது வலிமையாக இருப்பது போன்ற தோற்றப்பாடு தென்படுகிறதா? இதனை நீங்கள் விளங்கிக்கொள்ள அமெரிக்கராக இருக்க வேண்டியதில்லை.இந்த பகுதியில் அமெரிக்க பேரரசு எவ்வாறு வீழ்ச்சிபாதையில் உள்ளது என்பதை குறிப்பிடவிரும்புகிறேன்.அமெரிக்கா சக்திவாய்ந்த நாடாக இருந்தாலும் பின்வரும் உள்ளக பிரச்சனைகளால் பாதிபடைந்துவருகிறது.இவைகள் அமெரிக்க அரசை பலவீனப்படுத்தும் பிரச்சனைகளாகும்.பொருளாதார ரீதியான பாகுபாடு,நிறவெறி,கட்டுக்குள்அடங்காத துப்பாக்கி கலாச்சாரம்,சமூகங்களுக்குள் முரண்பாடு,பலவீனமான குடும்ப கட்டமைப்பு மற்றும் அதிகரித்த விவாகரத்து, அதீத போதைப்பொருள்பாவனை அதன்விளைவான குற்றங்கள்,சூழலியல் இடர்கள்,பலவீனமான தனியார் மருத்துவ கட்டமைப்பு மேலும் பல இவ்வாறான பிரச்சனைகள் அமெரிக்க சமுதாயத்தை பெரும் சவாலுக்குள் தள்ளியுள்ளது இவை எனக்குள் பல கேள்விகளை ஏற்படுத்தியது.
உண்மையிலேயே அமெரிக்கா மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கு உகந்த நாடா? மாணவர்கள் பாடசாலைகளில் பாதுகாப்பாகஉணர்கிறார்களா? சமுதாயத்தில் வரம்பு மீறிய போதைப்பொருள்பாவனை அதனால் ஏற்படும் துப்பாக்கி சூடுகள் மற்றும் குற்றங்கள், திருமணம் செய்யாமல் வாழும் வாழ்க்கைமுறை, சாதரணமான விவாகரத்துக்கள் மற்றும் கருக்கலைப்புகள், வேலையின் போது அதீத மனஅழுத்தத்தால் நிகழும் தற்கொலைகள் இன்னும் ஏராளம்.
நான் முதலாஙதாக அமெரிக்காவில் நடைபெறும் துப்பாக்கி வன்முறைகளையும் அதன் விளைவுகளையும் எடுத்து நோக்கினேன்
உலகநாடுகளை ஒப்பிடுகையில் 100,000 நபர்களுக்கு 120.5 துப்பாக்கிகள் என்ற விகிதத்தில் உலகின் முதன் நிலையில் அமெரிக்கா உள்ளது. இரண்டாவதாக யேமன் உள்ளது 100,000 நபர்களுக்கு 52.8 துப்பாக்கிகள் என்ற விகிதத்தில் உள்ளது. அதிக துப்பாக்கிகளை உருவாக்கும் நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.நீங்கள் அமெரிக்காவில் வாழும் நபராக இருந்தால் துப்பாக்கி ஒன்றை கொள்வனவு செய்வது மிக சுலபம் நீங்கள் துப்பாக்கி ஒன்றை கொள்வனவு செய்ய உரிமம் தேவையில்லை. அதிகமான மாநிலங்களில் நீங்கள் துப்பாக்கியை வைத்திருப்பதற்கு நீங்கள் அதன் உரிமையாளராக இருக்க வேண்டிய அவசியமில்லை. அமெரிக்காவில் தான் பாடசாலைகளில் துப்பாக்கிசூடுகள் அதிகம் இடம்பெறுகின்றன.356,000 பாடசாலை மாணவர்கள் அமெரிக்காவில் துப்பாக்கி சூட்டு சம்பவங்களை எதிர்நோக்கினர்.1999 இல் இருந்து தற்போதுவரை 386 பாடசாலை துப்பாக்கிசூட்டுசம்பவங்கள் பதிவாகியுள்ளன.மிகமுக்கியமாக 2022 இல் 46 பாடசாலை துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் பதிவாகியிருந்தது.இது வாஷிங்டன் போஸ்ட் நாழிதளில் வெளியான செய்தியாகும்.இந்த துப்பாக்கி சூடுகளை மேற்கொள்பவர்கள் 19 அல்லது அதனை விட குறைவான வயதினைக்கொண்டவர்களே 68% துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் துப்பாக்கிதாரியின் வீட்டிலிருந்து அல்லது நண்பணின் அல்லது உறவினர்களிடமிருந்து பெறப்பட்ட துப்பாக்கிகளாகும்.
இந்த இளம்சமுதாயத்தை இவ்வாறு துப்பாக்கிவன்முறையினுள் தள்ளியது வீட்டில் குடும்பவன்முறை அல்லது விவாகரத்து,சமுதாயச்சூழல் துப்பாக்கி ஒன்றை ஒரு பதின்மவயது நபர் இலகுவில் கைகளில் பெற்றுக்கொள்ள கூடியவகையில் அமெரிக்க சமுதாயம் உள்ளது. யார் தான் இந்த நாட்டில் தமது பிள்ளைகளை நிம்மதியாக பாடசாலைகளுக்கு அனுப்பிவைக்க முடியும்? எப்படி மாணவர்கள் பாடசாலைகளில் பாதுகாப்பாக உணரமுடியும்? இது ஒரு செயலிழந்த நாட்டின் கட்டமைப்புக்கு ஒரு எடுத்துக்காட்டு.
அடுத்ததாக அமெரிக்க குடும்பகட்டமைப்பை எடுத்துக்கொண்டால் குடும்பங்களில் விவாகரத்தும் அதன் பாதிப்பு குழந்தைகளை மனநலம் ரீதியாக பாதிக்கிறது.16 வயதுக்கு மேலே பிள்ளைகள் வீட்டைவிட்டு வெளியேறி சுயமாக வாழ்கிறார்கள் பெற்றோர்களின் நேரடியான கண்காணிப்பில் இல்லை இந்த போதைப்பொருள் மற்றும் துப்பாக்கிகள் நிறைந்த சமூகத்தில் அவர்கள் இலகுவில் தங்களை ஈடுபடுத்திக்கொள்கிறார்கள். இவ்வாறான பலவீனமான குடும்பகட்டமைப்பும் ஆபத்தான சமுதாயமும் இளம்தலைமுறையினரை தவறான பாதைக்கு இட்டுச்செல்கிறது.
உலகில் அதிகசெலவு கூடிய மருத்துவத்துறையை கொண்டது அமெரிக்கா ஆகும். ஒருமருத்துவரை நீங்கள் சந்திக்கவேண்டுமெனில் நீங்கள் நியமனம்(Appointment) எடுத்திருக்கவேண்டும் ஆனால்நீங்கள் அந்த நியமனதினை உடனடியாக அல்லது நீங்கள் நினைத்தநேரத்தில் செய்யமுடியாது.மருத்துவர்களின் நேரம் கிடைக்கவேண்டும் சிலது நாட்களாகும் அல்லது வாரங்களாகும் சில வேளைகளில் நீங்கள் ஒரு மருத்துவரை சந்திக்க மாதங்கள் கூட ஆகலாம்.
அறுவைசிகிச்சைகளில் தாமதம் மற்றும் மருத்துவ ஊழியர் தட்டுப்பாடும் பணியில் ஊழியர்கள் தற்கொலைகள் அதிகம் கொண்ட நாடு அமெரிக்கா ஆகும். மக்களின் முக்கிய தேவைகளின் ஒன்றான மருத்துவத்துறை தனியார் மயமுள்ளது அத்துடன் அதன் செலவுகள் மிக மிக அதிகம். உலகின் தலைசிறந்த நாட்டில் மருத்துவத்துறை மிக பலவீனமாக உள்ளது என்பதே நிதர்சனம்.
பூகோளரீதியில் அமெரிக்கா புயல்,வெள்ளப்பெருக்கு,காட்டுத்தீபோன்ற இயற்கை இடர்களை எதிர்கொள்கிறது இதனால் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க அளவு பாதிப்பை செலுத்துகிறது.
அமெரிக்காவில்நிறவெறி என்பதுஇன்றுவரை இடம்பெற்றுவருகிறது.கறுப்பு இனத்தவருக்கு எதிரான நிறவெறி மற்றும் வேற்று இனங்களுக்கு எதிரானநிறவெறி அதிகம் உள்ளது.ஆசியாவை சேர்ந்தவர்களை அவர்களது உருவத்தை வைத்தும் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாகவும் சித்தரிப்பது மற்றும் வெறுப்பு பிரச்சாரங்கள், Black Lives Matter போராட்டங்கள் அமெரிக்காவைமட்டுமல்ல உலகநாடுகளையும் கவனம் ஈர்க்க செய்தது.
சமூகங்களுக்கு இடையேயான இந்த வெறுப்புணர்வு அமெரிக்க மக்களை சமுதாய கட்டமைப்பு ரீதியில் பலவீனப்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில்அதிக தலாவீதவருமானம் பெறுவர்கள் இந்தியர்களே அதன் பின்னர் ஆசிய நாடுகளை சேர்ந்தவர்களே இருக்கிறார்கள்.அமெரிக்க குடும்பங்கள் பெரும்பாலும் நடுத்தர வாழ்க்கையையே வாழ்கின்றனர்.அமெரிக்காவில் கல்லூரி கல்விக்கான செலவுஅதிகம் அத்துடன் அன்றாட வாழ்க்கை செலவுகளுக்காகவும் அமெரிக்கர்கள் கடுமையாக உழைக்கின்றார்கள் ஆனாலும் அமெரிக்காவில் காலியாக உள்ள பணியிடங்களுக்கும் வேலைவாய்புக்களையும் அமெரிக்காவிற்கு வெளியிலிருந்துவருபவர்கள் நிரப்புகிறார்கள் இந்த எண்ணிக்கை சடுதியாக உயர்ந்துள்ளது. அமெரிக்கர்கள் தற்போது இவர்களுடன் போட்டி போடும் நிலை ஏற்பட்டுள்ளதடன் வேலையின்மையும் மிக அதிகம்.
சமீபகாலமாக அமெரிக்க வங்கிகள் வங்குரோத்துநிலை அடைந்துவருகின்றன அதில் Silicon Valley Bank, Signature Bank, First Republic Bank என்பனவாகும் மேலும் வங்கிகள் வங்குரோத்துஆகும் எனஎதிர்பார்க்கப்படுகிறது. Covid-19 ஐ சரியாக கையாளாமல் தற்போது பொருளாதார ரீதியில் பின்னடைவை சந்தீத்துள்ளது.இந்நிலை மேலும் மேலும் அதிகரித்து டொலரினை வீழ்ச்சியடையவைக்கும். அமெரிக்க அரசு மக்களின் வரிப்பணத்தில் போர் ஆயுதங்களை தயாரித்து மத்தியகிழக்குநாடுகளில் போரில் ஈடுபடுவதால் நாட்டினுள் நடைபெறும் சிக்கல்களை தீர்க்க நேரமில்லை.தனியார் கம்பனிகளால் நிரம்பியுள்ள அமெரிக்க தேசம் சிறிதுசிறிதாக அதன் உள்ளக காரணிகளால் வலிமைஇழந்துவருகிறது.
இன்னும் பலநூறுவிதமான பலவீனங்கள் இருக்கின்றன ஒரு நாட்டின் அடிப்படை கட்டமைப்பானகுடும்பத்தில் தொடங்கி அரசுவரை பரவீனமாக உள்ளது. வெளித்தோற்றத்திற்கு பலம் வாய்ந்த நாடாக தோன்றினாலும் இது சரிந்துவிழ காத்திருக்கும் மரமாகும். அமெரிக்காவிற்கு வெளியே பல பிரச்சனைகள் இந்த பேரரசை சிறுக சிறுக சிதைத்துவருகிறது. அதனைபற்றிஅடுத்த பகுதியில் பார்ப்போம்.அமெரிக்கா பற்றிய உங்கள் கருத்தை பதிவிடுங்கள்.நீங்கள் அமெரிக்க பேரரசு வீழும்என்று நினைக்கிறீர்களா?
Comments
Post a Comment