ஆம் பல மாதங்கள் ஆகிவிட்டன எண்ணிப்பார்த்தால் பாதி வருடங்களுக்கு மேலக அந்த வெளிச்சம் படவில்லைமிகவும் கடுமையான இருள் சூழ்ந்திருந்தது. நம்பிக்கை வாடிவிட்டது,கேள்விகள் எதிர்பார்ப்பை சிதைத்துபயத்தை ஊட்டியது. அது அவ்வாறு இருக்கும் என எதிர்பார்கவில்லை.
அதே பேரூந்தில் ஏறிப்பயணிக்கிறேன் முன் எப்போதும் போல் ரசிக்கும் படியான பயணம் இல்லைசலித்துவிட்டது. அதில் முன்னர் போல் எந்த பிடிப்பும் கிடையாது. சேரும் இடம் வரும் போது அது மிகசாதரணமாக இருந்தது எந்த ஆர்பாட்டமும் இல்லை. வீதிச்சமிக்ஞை சிவப்பில் இருந்து பச்சை நிறமாகிறதுஅந்த பேருந்து எனைகடந்து செல்கிறது சில விநாடிகளில் கண்ணிலிருந்து மறைகிறது. நான் சாலையைகடக்க காத்திருக்கிறேன் சலிப்புடன்.
அவனுக்கு அந்த நீலவானத்தின் மீது தவழும் வெண்மேகங்கள் பிடிக்கும் அதில் பறக்கும் விமானங்களைவெறித்துப்பார்த்துக்கொண்டிருப்பான் உதட்டில் ஒரு சிறு புன்னகையுடன்.
காலாற நடப்பான் தரையோடு கதைபேசி
காதோரம் பட்டுச்செல்லும் நேர்த்தியற்ற காற்றின் ஓசையை கூர்ந்து கவனிப்பான் ஆம் அவன் ரசனைஉள்ளவன்.
மழை நேரத்தில் காற்றில் ஆடும் மரங்கள் அவனை குழந்தை ஆக்கும்.
அவன் அதிகம் காதலிப்பது மழையை நனைந்து ரசிப்பது.
மழைத்துளி அவனை நனைக்கிறது புதுப்பிறவி எடுத்தது போல் பூரிப்படைகிறான்.
மீண்டும் பழையவனாக மாறுவதற்கு சந்தர்ப்பம் வந்துள்ளது.நிறையவே புது மனிதர்கள் அவனுக்கு நம்பிக்கைஊட்ட முன் எப்போதும் இல்லாத தைரியத்துடன் அவன் புதிய வெளிச்சத்தில் பயணத்தை தொடங்கிவிட்டான்.
பல மூட்டைகளில் கனத்த நினைவுகளுடன் கூடிய அனுபவம் அவனுக்கு எப்போதும் அவன் சலித்துவிடாதவிநோதமானவன். இந்த புதுவெளிச்சத்தில் பயணம் வேகமாகவும் நேரத்தியானதாகவும் மிகவும்மகிழ்ச்சி,நம்பிக்கையுடன் கூடியதான பயணமாக இருக்கிறது. இதை இவன் ஒரு காலத்தில் மீட்டிப்பார்க்கும்போது உள்ளம் நெகிழ்வான் நினைவுகள் பதிவுகளாக....
Comments
Post a Comment