இது சதாரணமான வியாழக்கிழமையாக முடிவடைந்திருக்கலாம் ஆனால் ஏன் இவ்வளவு குழப்பங்கள் இதில்சிக்கி தவிக்கிறேன் மனஅமைதி பல தூரம் தொலைவில் சென்றுவிட்டதோ என்னமோ. சரி படுக்கைக்கு சென்றுநல்ல நித்திரை செய்வோம் என்றால் முடியவில்லையே அந்த குழப்பங்கள் கண்முன்னே சதிராடுகின்றன. இந்தநாளை முடிக்க மனம் தவியாய் தவிக்கிறது. Headphones ஐ அணிந்து பாடல்களை கேட்டபடி என்விரல்கள்இதை தட்டச்சு செய்கிறது ஆனால் என்னமோ பிடிப்பில்லை ஏதாவது பயனுள்ள விடயங்களை பதிவிடலாம்மனம் அந்த பிரச்சனைக்குள் சிக்கி சிந்தனைகள் பலஆயிரம் துண்டுகளாக சிதறி தலையில் ஏதோ பாரம். அந்தபிரச்சனை எனக்கு சம்பந்தமில்லாதது ஆனால் அது என்னை உள்இழுத்து என்னை பாடாய் படுத்துகிறது. அந்தஅமைதியான சாருஐன் ஐ காணவில்லை. இதை சலிப்புடன் பெருமூச்சுவிட்டபடி எழுதும் இவன் எனக்கு புதுசுஇவன் இவ்வாறு எப்போதும் இருந்ததில்லை தன்னை சாதாரணமாக வைத்துக்கொள்ள அவன் எழும்எண்ணங்களை கட்டுப்படுத்த முயற்சிஎடுத்து தோற்று போகிறான் ஆம் பெருமூச்சுடன் ஒவ்வொருகணமும் அவன்ஒன்றும் அறியாதவன் கடந்த காலம் முதல் இன்றுவரை மற்றவர்கள் செய்யும் தவறுகளால் பாதிக்கப்படுகிறான்அவன் தண்டிக்கப்படுகிறான். இது நியாயமே இல்லை
நீண்ட ஒரு பெருமூச்சு.......
பாடல் முடிவடைந்துவிட்டது பெரும் நிசப்தம் எனை சூழ என் முன் இருக்கும் மடிக்கணணியை வெறித்துபார்க்கிறேன் சலிப்பாக உணர்கிறேன் அடுத்த பாடலை click செய்யவேண்டும். வாழ்க்கையில் இந்த நாட்களைநான் அகற்றவிரும்புகிறேன் என் நிம்மதியை தீயிட்டு அழித்த நாட்கள். ஓர் அந்நிய மொழி பாடல் மனதுக்கு சற்றுஅமைதி கிடைக்கிறது. இதை ஏன் நான் இவ்வளவு குறிப்பாக பதிவுசெய்கிறேன் என்று தெரியவில்லை இதுவும்கடந்து போகும். நான் இதை வென்று வருவேன் நான் கடந்துவந்த பாதைகள் எனக்கு கற்றுத்தந்தவை காலம்என் ஆசான் அந்த காலத்தின் சிறந்த மாணவன். ஏதோ ஒரு விடயத்தை கற்றுத்தர காலம் முனைகிறது ஆனால்நான் வகுப்பறையில் இல்லை. நான் சிறந்தவன் நான் மனவலிமை பொருந்தியவன் எனக்கு மிகப்பெரியஇலட்சியங்கள் உண்டு எனது பயணம் இங்கு நின்றுவிடப்போவதில்லை எழுந்துவிட்டேன் நடக்கிறேன் ஆம்என்னை எதுவும் தடுக்கபோவதில்லை நான் போயாகவேண்டிய தூரம் உள்ளது ஆனால் அது வெகுதொலைவும்இல்லை கண்எட்டும் தொலைவில் என்வாழ்க்கையை மாற்றும் அந்த இடம் இருக்கிறது. உடைந்து அழுகிறேன்பலமுடை சுக்குநூறாய் உடைந்து பின் எழுந்தவன் தான் நான் அதிகபலத்தோடுஎழுந்தவன் தான் நான். நான்பயணிக்கிறேன் முன்னோக்கி அதிகபலத்துடன் இறுதியாக ஒரு பெருத்த பெருமூச்சு........
அவன் பயணிக்கிறான் அவன் அசாதாரணமானவன் அவனைப்பார்த்து எப்போதும் வியந்திருக்கிறேன் மரியாதைஅவன் மீது எப்போதும் உண்டு அவன் உங்கள் கற்பனைக்கு அப்பாற்பட்டவன்.
Comments
Post a Comment