ஈரானில் கடந்த சிலவாரங்களாக இந்த Hijab சர்சை உலகளாவிய ரீதியில் கவனம் பெற்றுள்ளது. அமெரிக்கா,ஐரோப்பா மற்றும் உலகம் முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது சரி இந்தப்பிரச்சினைஎங்கிருந்து தொடங்கியது என்று பார்ப்போம்.தெஹ்ரான் நகரில் ஹிஜாப் சரியாக அணியவில்லை என கூறிபொலிஸார் நடத்திய தாக்குதலில் கோமா நிலைக்கு சென்ற 22 வயதான மாஷா அமினி என்ற இளம்பெண்கடந்த September17ம் திகதி உயிரிழந்தார். இதனால் ஈரானில் போராட்டங்கள் வெடித்தது பெண்கள்வீதிக்கு வந்து தங்கள் Hijab ஐ நெருப்பு வைத்து எரித்தனர்,தலைமுடியைவெட்டியும்மொட்டையடித்தும் தங்கள்எதிர்ப்பை அரசுக்கு வெளிக்காட்டினர். இந்த போராட்டங்கள் சமூக ஊடகத்தளங்கள் மூலம் பரவிஉலகநாடுகளில் பலர் தங்கள் கண்டணங்களை வெளிப்படுத்தினர்.
இந்த நிலையில் 19 வயது சமூக வலைதள பிரபலம், மெஹர்ஷாத் ஷாஹிதி, கடந்த 26ம் திகதி பொலிஸ்காவலில் தனது உயிரை இழந்துள்ளார்.
ஐஆர்ஜிசி புலனாய்வு தடுப்பு மையத்தில் அடித்து கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
Kurdish மனித உரிமை செயற்பாட்டாளர் தெரிவிக்கையில் 16 வயது Kumar Daroftateh கொல்லப்பட்டு வடகிழக்கு ஈரானில் புதைக்கப்பட்டுள்ளார் என குறிப்பிட்டுள்ளார். Iran's Human Rights Activists News Agency (HRANA) வெளியிட்ட அறிக்கையில் போராட்டங்களில் 248 பேர் கொல்லப்பட்டதாகவும்அதில் 45 பேர் சிறுவர்கள்,
ஈரானின் ஜேமி ஆலிவர் என்றும் அழைக்கப்படும் பிரபல சமையல்காரரான ஷாஹிதி, இன்ஸ்டாகிராமில் 25,000 பின்தொடர்பவர்களைக் கொண்டிருந்தார் அவர் தனது 20 வது பிறந்தநாளுக்கு ஒரு நாள் முன்புகொல்லப்பட்டுள்ளார் என்பதே சோகம்.
இதனால் மீண்டும் ஆங்காங்கே போராட்டங்கள் வெடித்துள்ளன, இவரின் மரணத்திற்கு நீதிகோரிபோராட்டங்கள் தொடர்கிறது.
ஈரானில் இஸ்லாமிய சட்டங்கள் கடுமையாக பின்ப்பட்டு வருகின்றன இவ்இருமரணங்கள் இப்போதையஅரசுக்கு நெருக்கடியையும் சர்வதேசரீதியில் அழுத்தத்தையும் வழங்குகிறது.
Comments
Post a Comment