நம் வாழ்வில் நாம் செய்யும் செயல்களில் வெற்றியளித்தவைகள் மற்றும் தோல்வியடைந்த விடயங்கள் உள்ளனஇதற்கான விகிதாசாரம் ஒவ்வொரு மனிதருக்கும் இடையே வேறுபடும்.சிலர் எறும்பு போல வேலைசெய்வார்கள்கடின உழைப்பாழிகளாக திகழ்வர்,சிலர் ஆமை வேகத்தில் வேலைசெய்வர் மெதுவாகவும் இவர்கள்வேலைத்திறன் மிகநீண்ட காலம் எடுக்கும். ஆனால் இவர்களில் ஒற்றுமைகள் மற்றும் வேற்றுமைகள் உள்ளனஇருந்தும் இவர்கள் தங்கள் தங்கள் வாழ்க்கையைவாழ்கிறார்கள்.
இதிலிருந்தெல்லாம் வேறுபட்ட பிறகுபார்த்துக்கொள்ளலாம் என வேலையை தூக்கி தூரப்போட்டுவிட்டுஉல்லாசமாக பொழுதைகழிப்பவர்களும் உண்டு இங்கு எவ்வாறு காலம் தாழ்த்துதல் நம்வாழ்க்கையையும்எதிர்காலத்தையும் பாதிக்கிறது என்று பார்ப்போம். இதை வாசிக்கும் வாசகர்களாகிய நீங்கள் ஒரு கற்பனையைஉங்களுக்குள் இப்போது உருவாக்கியிருப்பீர்கள் நான் எப்போதும் எந்த விடயத்தையும் காலம் தாழ்த்தாதவன்என்று ஆனால் அது உண்மையல்ல நானும் என்னை மாற்றிக்கொண்டுவருகிறேன் நீங்களும் இந்த பயணத்தில்பங்குபற்றி உங்களை வழப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதே என் அவா.
நம்மில் பலர் ஒரு வேலையை நாம் கச்சிதமாக முடிக்கும் திறமைஉடையவர்களாக இருப்பது இல்லை ஆனால்அதனை முடிக்கும் திறன் மட்டும் நம்மிடம் உள்ளது. நீங்கள் கவனித்திருக்கிறீர்களா ஒரு சிலர் வேலைகளைகச்சிதமாக முடிக்கும் திறமையை கொண்டிருப்பார்கள். அதெப்படி அவர்களால் ஒரு வேலையைவினைத்திறனானதாக செய்து முடிக்கமுடிகிறது.
ஒரு எடுத்துக்காட்டுக்காக பாடசாலை நாட்களில் என்னை அறியாமல் நான் செய்த சில வினைத்திறனானவிடயங்களை பகிர்கிறேன்.
எனக்கு பாடசாலைகளில் வீட்டுப்பாடம் தருவார்கள் அது ஒரு பாடத்தில்
மட்டும் இருக்காதுகணிதம்,தமிழ்,சமயம்,விஞ்ஞானம்,ஆங்கிலம் என வரிசை நீளும் அத்துடன் ஒப்படைகள் எனப்படும் ஒன்றும்இருக்கும் இப்போது Assignment என்று எடுத்துக்கொள்வோம்.
எமக்கு அவ்வப்போது சில பாட ஆசிரியர்கள் வராவிட்டால் free Period ல் மாணவர்கள் Hand cricket,Pen fight,paperball cricket விளையாடுவார்கள் நானும் விளையாடியிருக்கிறேன். நிறைய வீட்டுவேலைகள் வரும்நாட்களில் சில இலகுவான பாடங்களை பள்ளியில் வைத்து முடித்துவிடுவேன் சிலசமயம் 5வீட்டு வேலைகள்என்றால் அதில் இரண்டுஅல்லது 3 பள்ளி வகுப்பறையில் முடிந்துவிடும். மற்றைய மாணவர்கள் அந்த இலவசமாககிடைத்த நேரத்தை விளையாட்டு,அரட்டை அடித்து கழிக்க ஏன் நான் மட்டும் இவ்வாறு செய்தேன் என்றுஎனக்கு தெரியாது. ஒரு விடயம் மனதில் உதிக்கும் இலகுவான பாடங்களை இப்போது நீ செய் கடினமானபாடங்களை பிறகு வீட்டில் பார்ததுக்கொள்ளலாம் என்று. அதனால் நான் நிறைய பயன் பெற்றேன் காரணம்பாடசாலை முடிந்தால் மாணவர்கள் வீடு சென்று தனியார் கல்வி நிலையங்களில் படிப்பது வடக்கில்வாடிக்கையான விசயம் தான் சுமார் 6:00 போல் பெரும்பான்மையானோர் வீடுதிரும்புவர் வெகுசிலர்ஆங்கிலம்,கணிதம்,விஞ்ஞானம் என வகுப்பு செல்வார்கள் இவர்கள் வீடு சேர 8/9 மணி ஆகிவிடும். இவர்கள்வீடுவந்த பின் நாள் முழுவதும் படித்த களைப்பில் இருப்பார்கள் 5/6 வீட்டுவேலை இருக்கும் அதைசெய்யவேண்டும் அவர்கள் என்ன செய்வார்கள் நேரம் தான் இல்லையே சலித்துக்கொண்டு 2/3 வீட்டுவேலையைமுடித்துவிடுவார்கள் மற்றதை பாடசாலை போய் Copypaste செய்வோம் என்று நித்திரைக்கு சென்றுவிடுவார்கள். காலையில் பாடசாலையில் இது நடக்கும் இத நான் பெருமைக்காக சொல்லல( அஸ்வின் குமார்உங்கள் நினைவுக்கு வந்தால் நான் என்ன சொல்ல) அவ்வாறு வந்தவர்கள் என் கொப்பியை கேட்பார்கள் நான்கொடுப்பேன் அவர்கள் copy paste விரைவாக செய்வார்கள். அவர்கள் busy life நன்கு தெரிந்ததால்எழுதிக்கொள்ளுங்கள் என்று விட்டுவிடுவேன்.
சரி பாடசாலை முடிய நான் என்ன செய்கிறேன் என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக இருப்பீர்கள்பாடசாலையில் இருந்து என் துவிச்சக்கரவண்டி யை (வாமா மின்னலு) மின்னல் வேகத்தில் பாடசாலை வாசலில்இருந்து வதிரி ஊடாக மாலுசந்தி ரோட் எடுத்து கார்பெட் ரோட்டுதான மிதிப்பலகையில் சராமாரி உதைகள்கொடுக்க பட்டுபோன்ற கார்பெட் சாலையில் (எடுத்த நாள்முதல் இந்த நாள்வரை வண்டியை விடவில்லை) வடிவேலு போல பாடி பயணித்து வீட்டை அடைவேன்.
உடனே தனியார் கல்விநிலயம் வெளிக்கிட வேண்டியது தான். சுமார் மதியம் 3:30 க்கு ஆரம்பித்து 5:30 முடிவடைய 6:00 க்கு வீட்டு வாசலில் வந்தடைவேன் சூரியன் மேற்கேமறைய தொடங்கி மேற்கு வானம்சிவந்திருக்கும் நாள் முற்றாக முடியவில்லை உயிர்ப்பாக இருக்கும் சூழலில் சூடு சற்றே தணிந்திருக்கும் கைகால் முகம் கழுவிய பின்னர் நீங்கள் நினைப்பது போல படிக்கல்லாம் மாட்டேன். எனக்கு அன்றைய நாள்முடிவடைந்திருக்கும் ஆனால் மற்றவர்களுக்கு அப்படியில்லை பலர் மற்றைய Tuition க்கு மிதிவண்டியைமிதித்து கொண்டிருப்பார்கள் சிலர் இரவு Tuition ல் படிக்க தொடங்கியிருப்பார்கள்,என்னை போன்ற 6:00 மணியுடன் Tuition முடிப்பவர்கள் வீடு செல்லாமல் cricket, பேணிப்பந்து விளையாடுவார்கள். இவ்வாறு இருக்கநான் தொலைக்காட்சி முன் அமர்ந்து discovery channel மற்றைய TV channels மாற்றி மாற்றி பார்ப்பேன். உங்களுக்கு ஒரு சந்தேகம் வரலாம்
இவன் என்ன மற்றைய பிள்ளைகளை போல படிக்கவும் இல்லை அல்லது cricket விளையாடவும் இல்லைஇவ்வாறு TV பார்பதை விட விளையாட்டு உடம்புக்கு புத்துணர்சி தருவது அதை ஏன் செய்யவில்லை என்று. நான் தினமும் பாடசாலை,tuition என்று 8km மிதிவண்டி மிதிக்கும் எனக்கு அது ஒரு சிறந்த உடற்பயிற்ச்சி. ஆக நாள்முளுக்க பாடசாலை,tuition என அலைந்த எனக்கு உடம்பு களைப்பு நிட்சயமாக இருக்கும் நான் TV பார்பதன் மூலம் ஒரு மனப்புத்துணர்ச்சியை ஏற்படுத்திக்கொள்வேன் இவை எல்லாம் நான் திட்டமிட்டுசெய்யவேண்டும் என செய்யவில்லை.என் எண்ணங்கள் இதனை ஒரு இயல்பான விடயங்களாக செய்யவைத்தது.
சரி 7:30 வரை தொலைக்காட்சி பார்த்தாச்சு அடுத்து என்ன வீட்டு பாடம் செய்யவேண்டும் என்ற Task இருக்குஎன்னிடம் நேரம் இருக்கிறதா ஆம் தாராளமாக இருக்கிறது புத்தகப்பையை திறப்பேன் 5 வீட்டுப்பாடக்கொப்பிகளை தனியே வைத்து ஒவ்வொன்றாக திறப்பேன் அப்போது என்மனதில் எதுவும்இருக்காது வெற்றிடமாகவும் அமைதியாகவும் இருக்கும். சமயக்கொப்பியை எடுத்து பக்கங்களை புரட்டுவேன்வகுப்பறையில் அந்த வீட்டுவேலையை ஏற்கனவே முடித்து விட்டேன் என்பதை உணர்வேன் உடனே உள்ளத்தில்பூரிப்பு அடுத்து தமிழ் பாட கொப்பி அதுவும் முடிந்திருக்கும். அடுத்து விஞ்ஞானம் பாதிமுடித்த நிலையில்இருக்கும் அதை தனியே வைப்பேன் அடுத்து கணிதம் ஆம் நான் இதை முடிக்கவில்லை அடுத்து ஆங்கிலம் சரி2 வீட்டுவேலை முடிந்தது விஞ்ஞானம் சொட்டுதான் கிடக்கு அடுத்து கணிதமும்,ஆங்கிலமும்தான சரி என்று ஒருஉத்வேகத்துடன் 15-20 நிமிடங்களில் விஞ்ஞானம் முடிந்துவிடும் இப்போது 3 வீட்டுவேலை முச்சாச்சு ஒருதிருப்தி அதே போல கணிதம் அடுத்து ஆங்கிலம் என 9:00 க்கு எல்லாம் முடிஞ்சுடும். இந்நேரம் என்வகுப்புமாணவர்கள் இரவு வகுப்பை முடித்திருப்பார்கள்.
பாருங்கள் நான் வீட்டுவேலை முடித்துவிட்டேன் அவர்கள் இனித்தான் தொடங்க போகிறார்கள்.
தொடரும்......
Comments
Post a Comment