கடந்த வாரங்களாக கனடாவில் குடியேறுவதற்கான விசா வழங்குவதாக மோசடிகள் அம்பலமாகியுள்ளது. கனடாஅரசு கனடியர்கள்&வெளிநாட்டினர்களுக்கு இதுபற்றி எச்சரித்துள்ளனர்.தங்களை சட்டத்தரணி,அரசஅதிகாரி,நிறுவனஅதிபர் என அறிமுகப்படுத்திக்கொள்ளும் இவர்கள் மக்களை whats app மூலமாக மக்களை அணுகின்றனர் போலி விளம்பரங்கள் மூலமாக கனடாவில் குடியேற அரியவாய்ப்பு எனும் மக்களை கவரும் தலைப்புக்களில் whats app ல் பலரால் பகிரப்பட்டு அதிக நபர்களை இவர்கள் அணுகி ஏமாற்றியுள்ளனர் இதனை Tech Transparency Project (TTP) வெளியிட்டுள்ளனர்.
இந்திய மாணவர்கள் இலக்குவைத்து ஏமாற்றப்பட்டுள்ளனர் உங்களுக்கு பகிரப்படும் WhatsApp செய்திகளின் உண்மைத்தன்மை பற்றி கவனமாக இருங்கள் அவர்ள் மின்னஞ்சல் மூலமாகவும் உங்களை அணுகி ஏமாற்றக்கூடும் நிறுவனங்களினை அணுகும்போது அவர்களின் பதிவு மற்றும் அவர்களின் நம்பகத்தன்மையை சரிபாருங்கள்.
பிருத்தானியாவில் ஓர் நடன பாடசாலை வளகத்திலே 3 சிறுமிகள் கத்திக்குத்துக்கு இலக்காகி படுகொலைசெய்யப்பட்டதை தொடர்ந்து சந்தேக நபர் தொடர்பான அடையாளங்கள் தவறான முறையில் பகிரப்பட்டது.குறித்த கொலையாளி 17வயதுடையவன் அவன் இஸ்லாமியன் என தீவிர வலதுசாரிகளால் பரப்புரை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து பிரிட்டனில் பல பாகங்களில் வெறுப்பு போராட்டங்கள் வெடித்தன தொடர்ந்து கடைகள்,வீடுகள்,கார்கள் என்பன போராட்டக்காரர்களால் அழித்து சேதமாக்கப்பட்டது. இதுவரை 400 ற்கு மேற்பட்டவர்கள் நாடுமுழுவதிலிருந்தும் கைது செய்யப்பட்டுள்ளனர். இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதிகளை குறிவைத்து தாக்குதல்கள்நடத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றன.பிருத்தானியாவின் குடிவரவுக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையிலும் இந்த வன்முறைச்சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. சாலைகளில் தீவிர வலதுசாரிகள் கடைகள்,வணிகநிறுவனங்களை தாக்கி கொள்ளையிடுவதையும்,போலீசாரை பட்டாசுகள் வைத்து தாக்குவதும்,”Islam Out” போன்ற வாசங்களை உச்சரித்தபடியும் வன்முறையில் ஈடுபடுகின்றனர். அவர்கள் முன்னிற்கும் கோட்பாடாக “இங்கிலாந்து ஆங்கிலேயருக்கே” என்பதாகும்.மேலும் வன்முறைகள் மூளாமல் இருக்க பிரதமர...
Comments
Post a Comment