கடந்தபதிவில் உலகப்பொருளாதாரம் கடும் சரிவை எதிர்நோக்கும் என IMF எச்சரிக்கைவிடுத்ததினை நீங்கள் வாசித்திரூப்பீர்கள்.
இதனால் பல நாடுகள் பாதிப்படைய உள்ளன அதில் முக்கியமாக ஐரோப்பிய யூனியன் மற்றும் ஐரோப்பா கண்டத்தினை சார்ந்த நாடுகளே ஆகும்.ஏற்கனவே பிரான்ஸ்சில் எரிபொருளுக்கான வரிசை Germany யில் வேலையில்லா பிரச்சினை,மின்கட்டணம் பலமடங்காக உயர்ந்துள்ளது.ஏனைய சிறு நாடுகளான மால்டோவா,லித்துவேனியா,ஹங்கேரி,குரோசியா,ஸ்லோவாக்கியா போன்றன ஏற்கனவே பொருளாதாரத்தில் நலிந்து நாடே திவாலாகும் நிலையை எட்டியுள்ளது. உதாரணமாக இலங்கையில் நடந்ததைப்போல இதனால் மேற்கத்தேயநாடுகளான அமெரிக்கா,கனடா பாதிப்புக்குள்ளாகும் என எதிர்பார்க்கப்பபடுகிறது.அதன்படி கனடாவின் ரோயல் வங்கியின் பொருளாதார நிபுணர்கள் சில அதிர்சியூட்டும் விடயங்களை தெரிவித்துள்ளனர்.
2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நாடு பொருளாதார மந்தநிலைக்குள் நுழையும் என்று கனடாவின் ராயல் வங்கியின் பொருளாதார நிபுணர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
கனடாவில் கடந்த நான்கு மாதங்களில் மட்டும் வேலை வாய்ப்பு 92,000 குறைந்துள்ளது. மத்திய வங்கி வட்டி விகிதங்களை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் ராயல் வங்கியின் பொருளாதார நிபுணர்கள் நாதன் ஜான்சன் மற்றும் கிளாரி ஃபேன் ஆகியோர் முக்கிய தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
இதுவரை, கனடா மிதமான பொருளாதார மந்தநிலையை எதிர்கொள்ளும் என கூறி வந்துள்ள இவர்கள், தற்போது வட்டி விகிதங்கள் கனடாவில் நான்கு சதவீதமாகவும், அமெரிக்காவில் 4.5 முதல் 4.75 சதவீதமாகவும் உயரும் என எதிர்பார்க்கப்படுவதால், கனடாவில் முதல் காலாண்டிலேயே பொருளாதார மந்தநிலை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம் என சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதனால், முதலில் உற்பத்தி துறை பாதிக்கப்படும் எனவும், தொடர்ந்து சுற்றுலாத்துறை சரிவை எதிர்கொள்ளும் என தெரிவித்துள்ளனர். மட்டுமின்றி, விலைவாசி உயர்வு, அதிக வட்டி விகிதங்கள் காரணமாக மக்களின் சராசரி வாங்கும் திறன் 3,000 டொலர் என குறையும் எனவும் எச்சரிக்கின்றனர்.
பிருத்தானியாவில் ஓர் நடன பாடசாலை வளகத்திலே 3 சிறுமிகள் கத்திக்குத்துக்கு இலக்காகி படுகொலைசெய்யப்பட்டதை தொடர்ந்து சந்தேக நபர் தொடர்பான அடையாளங்கள் தவறான முறையில் பகிரப்பட்டது.குறித்த கொலையாளி 17வயதுடையவன் அவன் இஸ்லாமியன் என தீவிர வலதுசாரிகளால் பரப்புரை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து பிரிட்டனில் பல பாகங்களில் வெறுப்பு போராட்டங்கள் வெடித்தன தொடர்ந்து கடைகள்,வீடுகள்,கார்கள் என்பன போராட்டக்காரர்களால் அழித்து சேதமாக்கப்பட்டது. இதுவரை 400 ற்கு மேற்பட்டவர்கள் நாடுமுழுவதிலிருந்தும் கைது செய்யப்பட்டுள்ளனர். இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதிகளை குறிவைத்து தாக்குதல்கள்நடத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றன.பிருத்தானியாவின் குடிவரவுக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையிலும் இந்த வன்முறைச்சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. சாலைகளில் தீவிர வலதுசாரிகள் கடைகள்,வணிகநிறுவனங்களை தாக்கி கொள்ளையிடுவதையும்,போலீசாரை பட்டாசுகள் வைத்து தாக்குவதும்,”Islam Out” போன்ற வாசங்களை உச்சரித்தபடியும் வன்முறையில் ஈடுபடுகின்றனர். அவர்கள் முன்னிற்கும் கோட்பாடாக “இங்கிலாந்து ஆங்கிலேயருக்கே” என்பதாகும்.மேலும் வன்முறைகள் மூளாமல் இருக்க பிரதமர...
Comments
Post a Comment