கடந்த 29ம் திகதி Halloween கொண்டாடுவதற்காக பெரும்திரளான மக்கள் Itaewon என்ற குறுகிய ந்திக்குள் நுளையமுற்பட்டு கூட்ட நெரிசலில்சிக்கி மூச்சுத்திணறல்,காயம் காரணமாக 56 ஆண்கள் மற்றும் 97 பெண்கள் பலியாகிஉள்ளனர். இதில் 4 பேர்பதின்மவயதினர் 95 பேர் 20 வயது உடையவர்கள் மற்றும் 32 பேர் 30 வயது உடையவர்கள்.9 பேர் 40 வயதை உடையவர்கள்
13 நபர்களின் வயது இன்னும் அடையாளம் காணப்படவில்லை. இதில் ஒரு நோர்வே பிரசை மற்றும் ஒரு இலங்கை பிரசை,2 ஐப்பானிய பிரசைகள் மேலும் ஈரானியர்கள்,சீனர்கள்4 பேர்அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
Covid-19 கட்டுபாடுகள் தளர்த்தப்பட்டு நடைபெறும் ஒரு கேளிக்கை நிகழ்வு இதுவாகும். இந்த சனக்கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறிஉள்ளனர். தென்கொரிய அதிபர் யூன்சுக்-யோல் விசாரணைகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இச்சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய பாடம் அந்நிய கலாச்சாரம் நமக்கு பாதிப்பை ஏற்படுத்துவது மட்டுமில்லாது உயிரையே பறிக்கும் என்பது தெளிவாகிறது. தென்கொரியர்கள் Halloween என்ற அமெரிக்க கொண்டாட்டத்தை தங்கள்நாட்டில் கொண்டாடி பல உயிர்களை இழந்துள்ளனர். மக்கள் 2 வருடங்களுக்கு மேலான Covid-19 கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு ஒன்று கூடும் போது அவர்கள் உற்சாக மிகுதியால் ஏற்படும் விழைவுகளை அரசும்,காவல்துறையும் கணிக்க மறந்துவிட்டது. நாம் எந்த கலாச்சாரத்தில் இருக்கின்றோமோ அதையே பின்பற்றுவோம் இவ்வாறு சனக்கூட்டமான இடங்களில் சற்று எச்சரிக்கை தேவை.
பிருத்தானியாவில் ஓர் நடன பாடசாலை வளகத்திலே 3 சிறுமிகள் கத்திக்குத்துக்கு இலக்காகி படுகொலைசெய்யப்பட்டதை தொடர்ந்து சந்தேக நபர் தொடர்பான அடையாளங்கள் தவறான முறையில் பகிரப்பட்டது.குறித்த கொலையாளி 17வயதுடையவன் அவன் இஸ்லாமியன் என தீவிர வலதுசாரிகளால் பரப்புரை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து பிரிட்டனில் பல பாகங்களில் வெறுப்பு போராட்டங்கள் வெடித்தன தொடர்ந்து கடைகள்,வீடுகள்,கார்கள் என்பன போராட்டக்காரர்களால் அழித்து சேதமாக்கப்பட்டது. இதுவரை 400 ற்கு மேற்பட்டவர்கள் நாடுமுழுவதிலிருந்தும் கைது செய்யப்பட்டுள்ளனர். இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதிகளை குறிவைத்து தாக்குதல்கள்நடத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றன.பிருத்தானியாவின் குடிவரவுக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையிலும் இந்த வன்முறைச்சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. சாலைகளில் தீவிர வலதுசாரிகள் கடைகள்,வணிகநிறுவனங்களை தாக்கி கொள்ளையிடுவதையும்,போலீசாரை பட்டாசுகள் வைத்து தாக்குவதும்,”Islam Out” போன்ற வாசங்களை உச்சரித்தபடியும் வன்முறையில் ஈடுபடுகின்றனர். அவர்கள் முன்னிற்கும் கோட்பாடாக “இங்கிலாந்து ஆங்கிலேயருக்கே” என்பதாகும்.மேலும் வன்முறைகள் மூளாமல் இருக்க பிரதமர...
Comments
Post a Comment