இலங்கையில் கடந்த சில மாதங்களாக ஆர்பாட்டங்கள்,வன்முறைகள் என மக்கள் கொதிநிலையிலேஇருந்துவந்தனர் அதன் விளைவாக மக்கள் ஐனாதிபதிமாளிகையை முற்றுகையிட்டு தங்கள் பலத்தை காண்பித்தனர். பதில் ஐனாதிபதியாக பதவியேற்ற ரணில் தனது வாழ்நாள் ஆசைய ஐனாதிபதி பதவியை அடைந்தே தீரவேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தார். அவர் நினைத்ததை கச்சிதமாக அடைந்துவிட்டார் இது அவ்வளவு எளிதில் கைகூடவில்லை தனது அரசியல் ராஐதந்திரங்களை நாசூக்காக செயல்படுத்தி வெற்றிகண்டுள்ளார்.
இறுதிநேரத்தில் சயித் பிரேமதாச போட்டியில் இருந்து விலகி டலஸ் அழகபெருமவிற்கு வழங்கிஆதரவும் நாம் எண்ணிப்பார்க்காத விடயம்ஆம் ஆனால்நான் இதை எதிர்பார்திருந்தேன் அரசியலில் அதிகாரப்போட்டிகளில் பேரங்கள் பேசப்படுவது வழமை இதில்திரைக்குப்பின்னால் இழுபறிகள் மட்டும்நடந்தனவே தவிர எந்தவித கோரிக்கைகள் முன்வைத்து மக்கள் நலனுடன் எவரும் செயற்படவில்லை.
இங்குதான் ரணிலின் தந்திரங்கள் வேலை செய்தன எவரும்தனித்துஇல்லை ஒருகூட்டம் சயித்தின் கைஅசைவில் உள்ளன மற்றொன்று முதிர்ந்து தளர்ந்த சம்பந்தனின் கூட்டமைப்பு இங்குஅந்த தந்திரகார நரி கூட்டமைப்பின் தலைவரை தொலைபேசியில் அணுகி தன் விருப்பத்தை தெரிவித்து சில அடிகள் பின்வாங்கி நின்றது இதையேதான் அந்த நரி மலையக பாராளுமன்ற உறுப்பினரை அணுகி நான் தான் அடுத்த ஐனாதிபதி இனி சேர்ந்து பணியாற்றுவோம் இலங்கையை சரிவிலிருந்து மீட்போம் என்று இடியை இறக்க மலையக அணி கலக்கத்துடன் கூடிய குளப்பத்தில்மூள்க தன்னை இந்த தேர்தலில் பேசுபொருளாக காட்டாமல் ஒதுங்கி இருப்பது போல் காட்டிக்கொண்டு டலஸ் Vs ரணில் என்ற போலி பிம்பத்தை கட்டியமைத்து வென்றார்.
இதுபோன்ற ராஐதந்திரங்கள் ரணிலால் மட்டுமே சாத்தியமானது. போராட்டத்தில் சேதமான MP களுக்கு புதிய வீடு , ரஞ்சன் ராமயக்கவை பொதுமன்னிப்பில் விடுதலை என்று ஆளும் கட்சியினரையும் , பொதுமக்களையும் சற்று சிந்திக்கவைத்தார் அறிவிப்புக்கள் தினம் தினம் வநதன. இனி அவரது ஆட்சி எவ்வாறு இருக்கப்போகிறது என்பதனை கணிப்பது கடினம்.
பிருத்தானியாவில் ஓர் நடன பாடசாலை வளகத்திலே 3 சிறுமிகள் கத்திக்குத்துக்கு இலக்காகி படுகொலைசெய்யப்பட்டதை தொடர்ந்து சந்தேக நபர் தொடர்பான அடையாளங்கள் தவறான முறையில் பகிரப்பட்டது.குறித்த கொலையாளி 17வயதுடையவன் அவன் இஸ்லாமியன் என தீவிர வலதுசாரிகளால் பரப்புரை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து பிரிட்டனில் பல பாகங்களில் வெறுப்பு போராட்டங்கள் வெடித்தன தொடர்ந்து கடைகள்,வீடுகள்,கார்கள் என்பன போராட்டக்காரர்களால் அழித்து சேதமாக்கப்பட்டது. இதுவரை 400 ற்கு மேற்பட்டவர்கள் நாடுமுழுவதிலிருந்தும் கைது செய்யப்பட்டுள்ளனர். இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதிகளை குறிவைத்து தாக்குதல்கள்நடத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றன.பிருத்தானியாவின் குடிவரவுக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையிலும் இந்த வன்முறைச்சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. சாலைகளில் தீவிர வலதுசாரிகள் கடைகள்,வணிகநிறுவனங்களை தாக்கி கொள்ளையிடுவதையும்,போலீசாரை பட்டாசுகள் வைத்து தாக்குவதும்,”Islam Out” போன்ற வாசங்களை உச்சரித்தபடியும் வன்முறையில் ஈடுபடுகின்றனர். அவர்கள் முன்னிற்கும் கோட்பாடாக “இங்கிலாந்து ஆங்கிலேயருக்கே” என்பதாகும்.மேலும் வன்முறைகள் மூளாமல் இருக்க பிரதமர...
Comments
Post a Comment