சிலவாரங்களாக சர்வதேசரீதியில் எலான் மஸ்க் பற்றிய பேச்சே இருந்தது டிவிட்டரை எலான் வாங்கப்போகிறார் என்பது சமூக வலைதளங்களில் தீயாக பேசப்பட்ட விடயமாகும். டிவிட்டரில் மக்களின் பேச்சு சுதந்திரம் மறுக்கப்படுகிறது, மக்கள் தங்கள் கருத்துகளை முன்வைக்க முடியாமலும் தனிப்பட்ட நாட்டிற்குசார்பான கருத்துகள் அளவுக்குஅதிகமாக ஊக்குவிக்கப்படுவதுடன்
தனிப்பட்டவர்களின் கருத்து சுதந்திரம் அடக்கப்பட்டுகிறதாக வெளிப்படையாக குற்றம் சாட்டினார். இந்நிலையில் டிவிட்டரில் போலி கணக்குகள் காணப்படுவதனால் அதன் விவரங்கள் நிலுவையில் இருப்பதால் ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்திவைக்கபபட்டுள்ளது என்று தனது டிவிட்டர்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
பிருத்தானியாவில் ஓர் நடன பாடசாலை வளகத்திலே 3 சிறுமிகள் கத்திக்குத்துக்கு இலக்காகி படுகொலைசெய்யப்பட்டதை தொடர்ந்து சந்தேக நபர் தொடர்பான அடையாளங்கள் தவறான முறையில் பகிரப்பட்டது.குறித்த கொலையாளி 17வயதுடையவன் அவன் இஸ்லாமியன் என தீவிர வலதுசாரிகளால் பரப்புரை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து பிரிட்டனில் பல பாகங்களில் வெறுப்பு போராட்டங்கள் வெடித்தன தொடர்ந்து கடைகள்,வீடுகள்,கார்கள் என்பன போராட்டக்காரர்களால் அழித்து சேதமாக்கப்பட்டது. இதுவரை 400 ற்கு மேற்பட்டவர்கள் நாடுமுழுவதிலிருந்தும் கைது செய்யப்பட்டுள்ளனர். இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதிகளை குறிவைத்து தாக்குதல்கள்நடத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றன.பிருத்தானியாவின் குடிவரவுக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையிலும் இந்த வன்முறைச்சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. சாலைகளில் தீவிர வலதுசாரிகள் கடைகள்,வணிகநிறுவனங்களை தாக்கி கொள்ளையிடுவதையும்,போலீசாரை பட்டாசுகள் வைத்து தாக்குவதும்,”Islam Out” போன்ற வாசங்களை உச்சரித்தபடியும் வன்முறையில் ஈடுபடுகின்றனர். அவர்கள் முன்னிற்கும் கோட்பாடாக “இங்கிலாந்து ஆங்கிலேயருக்கே” என்பதாகும்.மேலும் வன்முறைகள் மூளாமல் இருக்க பிரதமர...
Comments
Post a Comment