சுதந்திரம் பெற்றகாலத்திலிருந்தே பௌத்தமத ஆதிக்கமும் அதன் இனவாத கருத்தியல்களின் வெளிப்பாடாகவே இலங்கை அரசியல் இருந்து வருகிறது ஆனால் இன்றையகாலகட்டத்தில் நிலைமை மாற்றமடைந்துள்ளதை காணக்கூடியதாக உள்ளது. நாட்டில் இடம்பெறும் போராட்டங்கள் இளையசமுதாயத்தை சிந்திக்கவைத்துள்ளதுடன் போராடும் மநோநிலையும் தூண்டியுள்ளது என்றால் மிகையாகாது.
இவ்வளவு காலமும் பௌத்தபேரினவாதத்தில் மூள்கியிருந்த மக்கள் தங்கள் பொருளாதாரம் கேள்விக்குறியாக்கப்பட்டு எதிர்காலம் பற்றிய பயத்தை தோற்றுவித்ததையடுத்து தங்களை சுயபரிசோதனை செய்துகொண்டதன் விளைவு பெரும்பான்மையானோர் பௌத்த பேரினவாதம் பயனற்ற மற்றும் ஆபத்தான ஒன்று என்பதை உணர்ந்துள்ளனர். இந்த தெளிவு எதிர்கால நாட்டின் வளர்ச்சிக்கும் சிறுபான்மை மக்களின் குரல்களுக்கு வலுச்சேர்பதாக அமையும் எனலாம்.
சிங்களவர்கள் தற்காலத்தில் எதிர்கொள்ளும் நெருக்கடிகளை என்றும் சந்தித்ததில்லை அவர்கள் பொறுமை எல்லைமீறும் போது அதன் வெளிப்பாடு பல கேள்விகளை எழுப்பியது? நாட்டின் இந்நிலைக்கு யார்காரணம்? ஆட்சி அதிகாரங்கள் எவ்வாறு ஒரு குடும்பத்தின்கீழ் சர்வாதிகாரமாக செயற்படுகிறது? ஊழல் குற்றச்சாட்டுகள் அம்பலமாகின்றன,அதீத வெளிநாட்டுகடன்கள், இவ்வாறு மக்கள் கேள்விகளை எழுப்பி அதற்கான உண்மையான பதில்களை அறிந்துகொள்ளும்போது அவர்கள் ஏமாற்றப்படுவதை உணர்கிறார்கள் கொதித்தெழுந்து போராட்டங்களை மேற்கொள்கிறார்கள். அதீத கோபம் மற்றும் ஏமாற்றத்தின் வெளிப்பாடே கட்டற்ற வன்முறைகள்.
நாட்டில் மலிந்துபோயுள்ள ஊழல் மற்றும்எதேச்சி அதிகாரங்களை களையெடுக்க காலியில் கூடிய கூட்டமே அதற்கு சாட்சி மக்கள் இனவாதத்திலிருந்து விலகி அரசியல் என்றால் என்னவென உணர்வது பௌத்த இனவாத பிக்குகளுக்கு,அரசியல்வாதிகளுக்கு பயத்தினை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் இனவாதத்தை தவிர வேறு அரசியல் இல்லை இதைவைத்தே பிக்குகளின் பிளைப்பும் ஊழல் அரசியல் வாதிகளின் வாழ்வும் செல்கிறது இதனால் சிங்கள மக்கள் அரசியல் ரீதியில் விழிப்படை விரும்பாமல் கடந்த 9 ம் திகதி நீர்கொழும்பில் ஆளும் கட்சியினர் வீடுகள் , கடைகளை எரித்துஅதனை முஸ்லீம்கள் செய்ததாக பழிபோட போட்ட திட்டம் அம்பலமானது. இதிலிருந்து இனவாதிகள் மக்களின் மாற்றத்தை பார்த்து கலக்கத்தில் உள்ளனர் என்பது புலனாகிறது.
சிங்களவர்கள் இனவாதத்திலிருந்து நீங்கி அரசியல் என்றால் என்ன ஐனநாயகம், சமத்துவம், உரிமை போன்றவற்றை உணர்வார்கள் அப்போது தான் சிறுபான்மை மக்களின் தேவைகள் பற்றி புரிந்து கொள்வார்கள். இலங்கையில் அரசியல்,பொருளாதார ரீதியில் பல மாற்றங்கள் நிகழ்ந்தவண்ணம் உள்ளனர் மாற்றங்கள் நன்மையான விடயங்களை தோற்றுவிக்கும் என நம்புவோம். எவற்றுக்கும் குறிப்பிட்ட காலம்தேவை காலம் பதில் சொல்லும் அடுத்த பதிவில் சந்திப்போம்.
பிருத்தானியாவில் ஓர் நடன பாடசாலை வளகத்திலே 3 சிறுமிகள் கத்திக்குத்துக்கு இலக்காகி படுகொலைசெய்யப்பட்டதை தொடர்ந்து சந்தேக நபர் தொடர்பான அடையாளங்கள் தவறான முறையில் பகிரப்பட்டது.குறித்த கொலையாளி 17வயதுடையவன் அவன் இஸ்லாமியன் என தீவிர வலதுசாரிகளால் பரப்புரை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து பிரிட்டனில் பல பாகங்களில் வெறுப்பு போராட்டங்கள் வெடித்தன தொடர்ந்து கடைகள்,வீடுகள்,கார்கள் என்பன போராட்டக்காரர்களால் அழித்து சேதமாக்கப்பட்டது. இதுவரை 400 ற்கு மேற்பட்டவர்கள் நாடுமுழுவதிலிருந்தும் கைது செய்யப்பட்டுள்ளனர். இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதிகளை குறிவைத்து தாக்குதல்கள்நடத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றன.பிருத்தானியாவின் குடிவரவுக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையிலும் இந்த வன்முறைச்சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. சாலைகளில் தீவிர வலதுசாரிகள் கடைகள்,வணிகநிறுவனங்களை தாக்கி கொள்ளையிடுவதையும்,போலீசாரை பட்டாசுகள் வைத்து தாக்குவதும்,”Islam Out” போன்ற வாசங்களை உச்சரித்தபடியும் வன்முறையில் ஈடுபடுகின்றனர். அவர்கள் முன்னிற்கும் கோட்பாடாக “இங்கிலாந்து ஆங்கிலேயருக்கே” என்பதாகும்.மேலும் வன்முறைகள் மூளாமல் இருக்க பிரதமர...
Comments
Post a Comment