நாட்டில் நிலவும் அரசியல்குழப்பங்களுக்கு மத்தியில் ஐனாதிபதி கோத்தபய ராஐபக்சவால் புதியபிரதமராக ரணில் விக்கிரமசிங்கே பதவிப்பிரமாணம் மேற்கொண்டுள்ளார்.
முன்னாள் பிரதமர் மகிந்த வாழ்த்துத்தெரிவுத்துள்ளார். கடந்த தேர்தலில் ரணில் விக்ரமசிங்கே தோற்கடிக்கப்பட்டார் தேசியப்பட்டியலின் மூலம் நாடாளுமன்றம் நுளைந்தார் இவர் தற்போது 6 வது தடவையாக பிரதமராக பதவியேற்றுள்ளார் உலகில் அதிகதடவைகள் பிரதமர் பதவி வகித்தவர் என்ற சாதனையைபடைத்துள்ளார்.
இவரின் பதவியேற்பிற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர். மக்கள் பழைய ஆட்சிஅதிகாரங்களின் மீது ஏமாற்றமும் வெறுப்பும் கொண்டுள்ளனர் மீண்டும் ரணில் பிரதமர் ஆவது ராஐபக்சாக்களை காப்பாற்றும் சதித்திட்டமாக கருதுகின்றனர்.
மக்கள் கோத்தாவை வீட்டுக்கு போகுமாறு போராடுகின்றனர் ஆனால் ஐனாதிபதியோ தன்னால் முடிந்த தந்திரங்களைச்செய்து ஆட்சியில் நீடிப்பதே அவரின் திட்டம்.இப்போது நாடாளுமன்றில் ரணில் தனது பெரும்பான்மையை நிரூபிக்கவேண்டும் அதில் சிக்கலும் உள்ளது எதிகட்சியினர் ஆதரவு அளிக்கமாட்டார்கள் 25 பேர் ஆதரவாக உள்ளனர் என ரணில் அணி கூறுகிறது. எதிர்க்கட்சியினருக்கும் ஐனாதிபதி பதவி விலகவேண்டும் என்ற நோக்கமே உள்ளது அவர்கள் ரணிலை ஏற்க்கமாட்டார்கள் மாறாக சயித் ஐனாதிபதியாக அல்லது பிரதமராக ஆக்கப்பட வேண்டும் என்பதே விருப்பம்.
இங்கு அரசியல் சதுரங்க ஆட்டத்தில் காய்கள் நகர்த்தப்பட்டுக்கொண்டிருக்கும் போது அதில் அரசியல் லாபம் தேடும் கூட்டம் தங்கள் கைவரிசையை காட்டுகிறார்கள். காலி முகத்திடல் போராட்டத்தை தணியச்செய்த புதிய பிரதமர் ரணிலின் நியமனம் வெற்றி அழித்ததா இல்லையா என்பதை வரும்சிலநாட்களில் பார்க்கலாம்.ஒரு விடயம் தெளிவாகத்தெரிகிறது மக்கள் தெளிவாக உள்ளனர் ரணிலை எதிர்ப்பவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் ரணில் ராஐபக்சாக்களை எதிர்க்காமல் அரசியல் செய்தால் அவரும் மகிந்த போல் விரட்டியடிக்கப்படுவார்.
மக்கள் அரசியலை பழக,கற்க ஆரம்பித்துவிட்டார்கள் வெற்று நாடகங்களுக்கு இனி இங்கு இடமில்லை
மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.
பிருத்தானியாவில் ஓர் நடன பாடசாலை வளகத்திலே 3 சிறுமிகள் கத்திக்குத்துக்கு இலக்காகி படுகொலைசெய்யப்பட்டதை தொடர்ந்து சந்தேக நபர் தொடர்பான அடையாளங்கள் தவறான முறையில் பகிரப்பட்டது.குறித்த கொலையாளி 17வயதுடையவன் அவன் இஸ்லாமியன் என தீவிர வலதுசாரிகளால் பரப்புரை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து பிரிட்டனில் பல பாகங்களில் வெறுப்பு போராட்டங்கள் வெடித்தன தொடர்ந்து கடைகள்,வீடுகள்,கார்கள் என்பன போராட்டக்காரர்களால் அழித்து சேதமாக்கப்பட்டது. இதுவரை 400 ற்கு மேற்பட்டவர்கள் நாடுமுழுவதிலிருந்தும் கைது செய்யப்பட்டுள்ளனர். இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதிகளை குறிவைத்து தாக்குதல்கள்நடத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றன.பிருத்தானியாவின் குடிவரவுக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையிலும் இந்த வன்முறைச்சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. சாலைகளில் தீவிர வலதுசாரிகள் கடைகள்,வணிகநிறுவனங்களை தாக்கி கொள்ளையிடுவதையும்,போலீசாரை பட்டாசுகள் வைத்து தாக்குவதும்,”Islam Out” போன்ற வாசங்களை உச்சரித்தபடியும் வன்முறையில் ஈடுபடுகின்றனர். அவர்கள் முன்னிற்கும் கோட்பாடாக “இங்கிலாந்து ஆங்கிலேயருக்கே” என்பதாகும்.மேலும் வன்முறைகள் மூளாமல் இருக்க பிரதமர...
Comments
Post a Comment