கடந்த 9 ம் திகதி அரசாங்கத்திற்க்கு சார்பானவர்களால் காலிமுத்திடலில் கட்டவிழ்க்கப்பட்ட வன்முறைகாரணமாக பல அரசியல் வாதிகள் மற்றும் அரச சொத்துக்கள் தீக்கிரையாக்கப்பட்டதுடன் அரச ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்கப்பட்டதனையும் காணக்கூடியதாக இருந்தது.
தற்போதைய நிலையில் பதவி விலகிய பிரதமர் தப்பியோடி ஒழிந்திருப்பதாக நம்பப்படுகின்ற திருகோணமலை திருமலை கடற்படைத்தளத்தை மையமாகக்கொண்டு செய்திகள் வெளியாவதனை நாம் காணக்கூடியதாக உள்ளது. நாட்டுதழுவிய ஊரடங்கு மற்றும் போலீஸ் ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பொது இடங்களில் கூடுவோர், தனியார் மற்றும் அரச சொத்துக்களை சேதப்படுத்தினால் துப்பாக்கி சூடு நடத்தப்படும் என ராணுவம் அறிவித்துள்ளது இதனை மக்கள் அவதானமாக நோக்கவேண்டும்.
நாடுதழுவிய ரீதியில் பெரும் கலவரத்துக்கு பிந்தியதான பதற்றம் நிலவுகிறது அது அடக்கியதாக தெரியவில்லை.தொடர்ந்தும் போராட்டக்காரர்கள் ஆளும் கட்சியினரின் சொத்துககளை தேடி தேடி அழித்துவரும் நிலையில் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்.
மக்கள் வீட்டில் இருப்பதே இந்நாட்களில் சிறந்தது ஏனெனில் ஊரடங்கு வாரங்கள் கடந்து நடைமுறைப்படுத்தப்படலாம், அரசுக்கு எதிரான எந்தவொரு நடவடிக்கையும் உங்களை சிறையில் தள்ளளலாம். இக்காலகட்டம் நிதானமாக செயற்பட வேண்டிய காலம். போலிச்செய்திகளை நம்பாதீர்மற்றவர்களுக்கு பரப்பாதீர்கள். மிக மோசமான காலம்ஆரம்பமாகிறது என்பதே கவலையான விடயம். உங்கள் முடிவுகளில் தெளிவாக இருங்கள் தேவையற்ற பிரயாணங்களைத்தவிருங்கள். அதீத உணர்சிகளின் வெளிப்பாடே கலவரங்களில் முடிகின்றன மனவெளிச்சிகளை கட்டுப்படுத்துங்கள். நரகமான நாட்களுக்கு உங்களை தயார்ப்படுத்திக்கொள்ளுங்கள்
அடுத்த பதிவில் சந்திப்போம்
பிருத்தானியாவில் ஓர் நடன பாடசாலை வளகத்திலே 3 சிறுமிகள் கத்திக்குத்துக்கு இலக்காகி படுகொலைசெய்யப்பட்டதை தொடர்ந்து சந்தேக நபர் தொடர்பான அடையாளங்கள் தவறான முறையில் பகிரப்பட்டது.குறித்த கொலையாளி 17வயதுடையவன் அவன் இஸ்லாமியன் என தீவிர வலதுசாரிகளால் பரப்புரை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து பிரிட்டனில் பல பாகங்களில் வெறுப்பு போராட்டங்கள் வெடித்தன தொடர்ந்து கடைகள்,வீடுகள்,கார்கள் என்பன போராட்டக்காரர்களால் அழித்து சேதமாக்கப்பட்டது. இதுவரை 400 ற்கு மேற்பட்டவர்கள் நாடுமுழுவதிலிருந்தும் கைது செய்யப்பட்டுள்ளனர். இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதிகளை குறிவைத்து தாக்குதல்கள்நடத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றன.பிருத்தானியாவின் குடிவரவுக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையிலும் இந்த வன்முறைச்சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. சாலைகளில் தீவிர வலதுசாரிகள் கடைகள்,வணிகநிறுவனங்களை தாக்கி கொள்ளையிடுவதையும்,போலீசாரை பட்டாசுகள் வைத்து தாக்குவதும்,”Islam Out” போன்ற வாசங்களை உச்சரித்தபடியும் வன்முறையில் ஈடுபடுகின்றனர். அவர்கள் முன்னிற்கும் கோட்பாடாக “இங்கிலாந்து ஆங்கிலேயருக்கே” என்பதாகும்.மேலும் வன்முறைகள் மூளாமல் இருக்க பிரதமர...
Comments
Post a Comment