கடந்த சில வாரங்களாக ஐரோப்பாவின் உக்ரைன் ரஸ்ய எல்லையில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. உக்ரைன் ரஸ்யா எல்லைப்பிரச்சினை சோவியத் ஒன்றியம் உடைந்த காலம் தொட்டே இருந்து வருகிறது ஆனால் சமீபகாலமாக மோதல் நிலை உக்கிரமடைந்துள்ளது. அமெரிக்காவின் நட்பு நாடுகளின் கூட்டணி என்றழைக்கப்படும் நேட்டோ வில் அமெரிக்காவின் உந்துததால் உக்கிரைனை சேர்க்க பார்க்கிறது இதனை ரஸ்யா துளியளவும் விரும்பாது அதற்கான காரணம் தனது எதிரி நாடான அமெரிக்காவின் கூட்டணியில் உக்ரைன் இணைந்தால் பாரிய பாதுகாப்புப்பிரச்சினைகளையும் அமெரிக்காதனது ராணுவத்தளபாடங்கள், ஏவுகணைகளை உக்ரைனில் நிறுவமுடியும் ஆதலால் உக்ரைனை போர்மூலம் வெல்ல எண்ணுகிறது.
ரஸ்யா உக்ரைனை தாக்கவேண்டிய கட்டாயத்தினுள் தள்ளும் காரணியாக உக்ரைன் நேட்டோவில் இணையும் முடிவு தங்கியுள்ளது.ரஸ்யாவின் விளாடிமிர் புடின் அவர்கள் உக்ரைனை எச்சரித்திருக்கிறார் மேலும் ரஸ்யா தனது முளுபலத்தைக்கொண்டு தாக்கினால் உக்ரைன் நிர்மூலமாகிப்போகும்.உக்ரைனில் வாழும் மக்கள் அத்தியாவசியப்பொருட்களை சேகரித்து வைத்துக்கொண்டுள்ளனர்.இவ் போர்ப்பதட்டம் முடிவின்றி செல்கிறது.
உக்ரைன் முன்னைய சோவியத்தொன்றியத்தின் பகுதியாகும் 2014 ல் கிரீமியா தீபகர்ப்பம் பொதுவாக்கெடுப்பின் மூலம் ரஸ்யாவுடன் இணைக்கப்பட்டது. ரஸ்ய மொழி பேசும் பலர் உக்ரைனில் வாழ்கிறார்கள் மேலும் பல மருத்துவர்களை உருவாக்கும் மருத்துவ மற்றும் தொழில்நுட்பத்தில் சிறந்த நாடு உக்ரைன்.நிலைமை மோசமாடைந்துள்ளதற்கான எடுத்துக்காட்டாக அமெரிக்கா தனது தூதரக அதிகாரிகளை நாட்டிற்க்கு திரும்ப அழைத்துள்ளது போர்க்கப்பல்கள் அத்திலாந்திக் சமுத்திரங்களை ஊடறுத்து உக்ரைனை நெருங்கிக்கொண்டிருக்கின்றது.விமானங்கள் ஊடாக பல ஏவுகணைகள் ஆயுதங்கள் உக்ரைனில் குவிக்கப்படுகின்றன. உக்ரைன் அதிபர் பெரும் போருக்கு நாட்டுமக்களை தயாராகுமாறு குறிப்பிட்டுள்ளார்.
இதுமட்டுமல்லாமல் ரஸ்யா 100,000 படைவீரர்களை உக்ரைன் எல்லையில் குவித்துள்ளது உலகளவில் பீதியை கிளப்பியுள்ளது. உக்ரைன் மீது ரஸ்யா போர் தொடுத்தால் அமெரிக்கா , பிரிட்டன் போன்ற நாடுகள் ரஸ்யாவை தாக்கும் ரஸ்யாவுக்கு ஆதரவாக சீனா,ஈரான் களம் இறங்கும் ஆகவே இதுவோர் உலகப்போராக பரிணமிக்கலாம் என உலக போரியல் வல்லூணர்களால் கணிக்கப்பட்டிருக்கிறது
ரஸ்யா உக்ரைனை தாக்கவேண்டிய கட்டாயத்தினுள் தள்ளும் காரணியாக உக்ரைன் நேட்டோவில் இணையும் முடிவு தங்கியுள்ளது.ரஸ்யாவின் விளாடிமிர் புடின் அவர்கள் உக்ரைனை எச்சரித்திருக்கிறார் மேலும் ரஸ்யா தனது முளுபலத்தைக்கொண்டு தாக்கினால் உக்ரைன் நிர்மூலமாகிப்போகும்.உக்ரைனில் வாழும் மக்கள் அத்தியாவசியப்பொருட்களை சேகரித்து வைத்துக்கொண்டுள்ளனர்.இவ் போர்ப்பதட்டம் முடிவின்றி செல்கிறது.
Comments
Post a Comment