Skip to main content

இலங்கை பொருளாதார வீழ்ச்சி ! தற்சார்பு வாழ்க்கை முறையும் புதிய வாழ்க்கை முறைக்கான தொடக்கம்.

அனைருக்கும் எனது வணக்கங்கள் இந்த கட்டுரை இலங்கை வாசகர்களுக்கு பெரிதும் பனுள்ளதாக அமையும் என நம்புகிறேன். கடந்த வருடம் October மாதம் எனது கட்டுரையில் எப்படியான பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ளது என்பதனை குறிப்பிட்டிருந்தேன் அதன் படி தற்போது இலங்கை பாரிய பொருளாதார சிக்கலில் சிக்குண்டு உள்ளது நிர்சனமான விடயம். இப்போது அதன் தொர்ச்சியாக நாட்டில் தற்போதைய நிலையையும் எவ்வாறான திட்டமிடல்களை மேற்கொண்டால் இலங்கை மீண்டும் பழைய நிலைக்கு திரும்பக்கூடிய சாத்திக்கூறுகள் உள்ளது என்பதனையும்,ஓர் இங்கையராக நீங்கள் எதை செய்யும் பட்சத்தில் உங்களை நீங்கள் தற்காத்து கொள்ளலாம் என்பதனையும் பார்ப்போம்.இக்கட்டுரையை வேறுநாடுகளிலிருந்து வாசிப்பர்களுக்கு இங்கையின் தற்போதைய நிலைபற்றிய தெளிவு கிடைக்கும் என்பதில் எந்தவிதமான ஜயமுமில்லை ஆகவே இக்கட்டுரை இறுதிக்கட்டுரையின் தொடர்ச்சியாக எழுதப்பட்டுள்ளது.பழைய கட்டுரைக்கான இணைப்பை இங்கு வழங்குகிறேன். இதனை வாசித்தபின் இக்கட்டுரையை தொடர்வது மிகச்சிறந்தது. நாம் அனைவரும் 2022ம் ஆண்டில் கால்பதித்துள்ளோம் இலங்கை மட்டுமல்ல உலகில் உள்ள பல நாடுகள் ப பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளன பொருளாதார சுணக்கநிலை, Covid-19 ன் தொற்றுப்பரல்,காலநிலைமாற்ற பிரச்சினைகள்,தடுப்பூசிக்களுக்கு எதிரான போராட்டங்கள் இன்னும் பல ஆனால் இதில் இலங்கை தனித்து தெரிவதற்கான காரணம் இலங்கையிடம் டொலர்கள் கையிருப்பு தீர்ந்து வருவதும் இலங்கை திவாலாகும் நிலையை அண்மித்துதத்தளித்து வருகிறது. சரி இலங்கைக்கு ஏன் இந்த நிலைமை சரியான திட்டமிடல்கள் இல்லாமை மற்றும் எதிர்கால இலக்குகளை தவறாக கணித்தமையுமே ஆகும்.இலங்கை இந்த திவாலாகும் நிலையை எப்போதோ தவிர்த்திருக்கலாம் உதாரணமாக IMF (The International Monetary Fund) அமைப்பிடம் உதவியை நாடியிருக்கலாம். இந்த IMF அமைப்பு உலக நாடுகளின் பொருளாதாரம்,GDP,கடன் போன்றவற்றை கண்காணிக்கும் ஒரு சர்வதேச அமைப்பாகும். இலங்கை மோசமான டொலர் பற்றாக்குறையின் போது IMF ன் உதவியை பெற்றிருந்தால் அந்நிறுவனம் இலங்கை மத்திய வங்கியினை பொறுப்பில் எடுத்து நிதியினை கையாள்வதற்கான வழிகாட்டல்களையும் அறிவுரைகளையும் வழங்கியிருக்கும் ஆனால் இலங்கை அதை இன்றுவரை செய்யவில்லை.
இதற்கான காரணம் ஆளும் தரப்பு தம்மை தோல்வியடைந்தவர்களாக இலங்கையர்களுக்கும் உலகத்திற்கும் காட்டிக்கொள்ளக்கூடாது என்பதற்காக IMF ன் உதவியை நாடவில்லை. எவ்வாறான தேவைகளுக்கு டொலர்களை செலவுசெய்ய வேண்டும் என்ற திட்டமிடல் இலங்கையிடம் காணப்படவில்லை. அரச அதிகாரிகளின் மாற்றம் ஓய்வு பெற்ற அரச வேலைகளில் அனுபவம் இல்லாத இராணுவத்தினரை பதவிகளில் அமர்த்தியதன் மூலம் அரச நிர்வாக கட்டமைப்பே நிர்மூலமாகிப்போனது. எப்போதுமே தமது அரசின் தோல்விகளை மக்களிடம் வெளிக்காட்டாமல் தவறுகள் மேல் தவறுகளையும் பயனற்ற திட்டங்களாலும் நாட்டையும் நாட்டுமக்களையும் சிக்கலில் தள்ளியுள்ளனர். மக்களுக்கு அரச ஆதரவு ஊடகங்கள் மூலம் போலிச்செய்திகள் பரப்பப்பட்டன. அரசை விமர்சிப்பவர்கள் 2019/2020 ஜ காட்டிலும் இப்போது அதன் எண்ணிக்கையில் பாரிய ஏற்றம் உள்ளது.அத்தியாவசியப் பொருட்களிட்கள் மற்றும்வாகனங்கள் இறக்குமதி செய்யப்படாமை மக்களுக்கு மேலும் விரக்தியையே ஏற்படுத்தியுள்ளது.முன்னர் எப்போதும் இல்லாத அளவிற்க்கு காய்கறிகள் அத்தியாசியப்பொருட்கள் விலை 2 முதல் 3 மடங்கு விலையேற்றம் கண்டுள்ளது. இது இந்த ஆட்சியின் படுதோல்வியை கண்முன்னே காட்டுகிறது. பெரும்பான்மை மக்களின் பலத்துடன் வந்த அரசு ஒட்டு மொத்த மக்களின் நம்பிக்கையை இழந்துள்ளது. இதே நிலை நீடித்தால் மக்கள் இந்த அரசை வாழ்நாளில் மன்னிக்க மாட்டார்கள் என்பதே நிதர்சனம். தற்போது இந்நிலை மேலும் மோசமாகிக்கொண்டே செல்கிறது. இதிலிருந்து இலங்கை அரசு தன்னை காப்பாற்றிக்கொள்ள உடனடியாக சிறந்த திட்டமிடல்களுடன் கையிலிருக்கும் டொலர்களை பயன்படுத்த வேண்டும். மேலும் கடன்களை பெற்றுக்கொள்வதை நிறுத்த வேண்டும்.உள்நாட்டு உள்பத்திகள் முழுவீச்சில் முடுக்கிவிட வேண்டும்.மக்களை தற்சார்புவாழ்க்கை முறைக்கு மக்களை விழுப்புணர்வு ஊட்ட வேண்டும்.
இலங்கை அரசு நான் மேல் குறிப்பிட்டவற்றை நிட்சயம் நிறைவேற்றமாட்டார்கள்.மேலும் சிக்கலில் இலங்கையர்களை கொண்டு செல்வதற்கே எத்தணிக்கிறார்கள்.இலங்கை ரூபாவின் பெறுமதி உலகஅளவில் வீழ்ச்சியில் உள்ளது. மின்னிநிலையங்களையும் அதற்கான இயந்திரங்களை இயக்குவதற்கான எரிபொருள்இல்லாமலும் இயந்திரங்களுக்கான உராய்வு நீக்கல் திரவம் கையிருப்பில் குறைந்துவருவதும் இதனால் நுரைச்சோலை மின்னிநிலையத்தில் இயந்திர செயழிழப்பு அண்மையில் ஏற்பட்டது குறிப்பிடதக்கது. தற்போது இந்தியாவிடமிருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக பெற்றுள்ளனர். இவ் பணத்தை எவ்வளவு வினைத்திறனாக பயன்படுத்துகிறார்கள் என்பதை, சாதாரண மனிதர்கள் அறியாத பல நாசகார வேலைகள் திரைமறைவில் இடம் பெற்றுவருகின்றன இதனை செய்தி ஊடகங்கள் மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டுவதில்லை அதிகார சக்திகளுக்கு அடிபணிந்து வெளியிடுவதில்லை. இதனை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும் உண்மை ஒன்றே. உங்களுக்கு தெரியுமா? தற்போது ஒவ்வொரு இலங்கைரும் தலா 400,000 ரூபா கடனில் இருக்கிறார்கள் என்பது!! ஆம்,உங்களை மட்டுமல்ல உங்கள் எதிர்கால சந்ததியினரையும் பெரும் ஆபத்தில் சிக்க வைத்துள்னர்.உங்களை சூழ்ந்துள்ள ஆபத்தை உணருங்கள் விழித்துக்கொள்ளுங்கள்.இலங்கையின் வளங்களை போட்டி போட்டுக்கொண்டுக்கொண்டு வல்லரசுகளுக்கு விற்பனை ஆகிக்கொண்டிருக்கின்றன.திருகோணமலை துறைமுகத்தில் உள்ள 60 மேற்பட்ட எண்ணைத்தாங்கிகள் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுவிட்டன.கொழும்பு துறைமுகம் பகுதிகளாக இந்தியா மற்றும் சீனாவுக்கு வழங்கப்பட்டுவிட்டன. இந்த செயல்கள் இலங்கையின் எதிர்கால சந்ததியிரின் வாழ்க்கை பற்றி கேள்வியை ஏற்படுத்தியுள்ளன. வளர்ச்சியடைந்த நாடுகளின் வளவேட்டைக்காடாக இலங்கை மாறியுள்ளது.அவர்களின் சுயநலத்துக்காக இயற்கை எழில் கொஞ்சும் இந்த நாட்டின் வளங்கள் சூரையாடப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இதை நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டியது மிகமிக அவசியம்.
இப்போது பொருளாதாரம் மிக சரிவடைந்துள்ளநிலையில் பணத்தேவை ஆதிகரித்துள்ளது. உங்கள் அன்றாட தேவைகளை சரிவர பூர்த்திசெய்வது மிக கஷ்டமாகவே உள்ளது."தற்சார்பு வாழ்க்கை"என்ற வார்த்தையை அறிந்துள்ளீர்களா? தற்சார்பு எமது சூழலுடன் சார்ந்த தன்நிறைவான வாழ்க்கைமுறையாகும். இவ்வாழ்க்கைமுறையையே நமது பாட்டி, தாத்தா வாழ்ந்தார்கள் அவர்கள் வாழ்ந்த காலப்பகுதியில் பணம் அவ்வளவாக தேவைப்படவில்லை.காரணம் தற்சார்பு வாழ்க்கை முறையே காரணம் இதனையே தற்போதைய இலங்கையர்கள் மேற்கொள்ளவேண்டும் என எதிர்பார்க்கிறேன்.இந்த தற்சார்புவாழ்க்கைமுறை பிரதேசங்கள் கடந்தும் மாகாணங்கள் கடந்து நடைமுறையாகும் பொழுது அது தற்சார்பு பொருளாதாரமாக மாற்றமடையும் உங்களை நீங்களே பலப்படுத்திக்கொளும் வழியாகும். சரி,எந்தவிதமான தற்சார்பு முறைகளை பின்பாற்றலாம் என்பதைப்பார்ப்போம்.உங்கள் வீட்டில் இடவசதி இருக்குமாயின் சிறுதோட்டம் மூலம் பயிற்ச்செய்கையை மேற்கொள்வதன் மூலம் உங்கள் வீட்டின் காய்கறித்தேவையை பூர்த்திசெய்யலாம். இதனை சற்று பரந்தளவில் செய்யும்பொழுது அதனை விற்பனை செய்வதன் மூலம் அல்லது அயலாரிடம் வேறு காய்கறிகளாக பண்ட மாற்று செய்யலாம். நிட்சயம் இது வொரு சிறந்ததற்சார்பு வாழ்கைமுறையாகும்.அத்துடன் ஆடு,மாடு,கோழி வளர்ப்பின் மூலம் பாற்ப்பொருட்கள்,முட்டை விற்பனை செய்யலாம் அல்லது காய்கறிகளுக்கு பண்ட மாற்றாக செய்யலாம். கிடைக்கப்பெறும் இயற்கை எருவை காய்கறி தோட்டங்கள் செய்யும் அயலாருக்கு விற்பனை செய்யலாம் மேலும் கூட்டெரு, இயற்கைவாயு தயாரிப்பும் செய்யலாம். உங்களால் உங்கள் அன்றாட போசனைத்தேவையை தற்சார்ப்பு பொருளாதாரத்தை நீங்களும் உங்கள் சமுதாயமும் ஆர்வமாக செய்யும் பொளுது ஒவ்வொருவரும் மற்றவர்களை பொருளாதார ரீதியில் பலப்படுத்துகிறீர்கள். இதனால் மறைமுக பொருளாதார தன்னிறைவு விளைவாககிடைக்கப்பெறுகிறது. வீட்டில் வீட்டுத்தோட்டம்,ஆடு,மாடு வளர்ப்பினை மேற்கொள்ள முடியாதவர்கள்கைவினைப்போருட்கள், பெண்களுக்கான கைப்பை, ஆபரணங்களை சுய தொழிலாக மேற்கொள்ளலாம் சமூக ஊடக தளங்கள் மூலம் உங்கள் பொருட்களை விற்பனை செய்து கொள்ள முடியும். ஆழகு கலையில் திறமையுள்ளவர்கள் உங்கள் விற்பனைப்பொருட்களை இணையம் மூலம் ஒருங்கிணைக்கலாம்.
மேல் குறிப்பிட்டவை நிட்சயமாக உங்களுக்கு பயனுள்ளதாக அமையும் என நம்புகிறேன். Online மூலம் நீங்கள் சம்பாதிக்க வழிகள் தற்போது உள்ளன உங்களுக்கு கணணி சார்ந்தஅறிவு காணப்பாடின் Freelancer,Fiver,Upwork, போன்ற தளங்களில் Microsoft Office word, Excel போன்ற மென்பொருள்கள் சார்ந்தவேலைகள் உள்ளன. இவற்றில் நீங்கள் USD அமெரிக்க டொலர்களில் ஊதியம் பெறமுடியும். உங்களால் முடிந்த வாய்ப்புக்களைப்பயன்படுத்தி பணத்தை சம்பாதித்துக்கொள்ளுங்கள்.நாட்டில் புழக்கத்தில் உள்ள பணத்தினை விட அதிகமான பணம் அச்சிடப்பட்டுள்ளன எதிவரும் காலத்தில் நாட்டில் பண வீக்கத்தினை எதிர்பார்க்கலாம்.
உங்களால் முடிந்த வழிகளைப் பயன்படுத்தி பணத்தை நீங்கள் சம்பாதிக்க இன்றே தயாராகுங்கள் நாட்டில் கையிருப்பில் இருந்த தக்கத்தில் பாதிக்குமேல் வர்த்தக பயன் பாட்டிற்கு பயன்படுத்தி விட்டனர்.தற்போது நாட்டில் தங்கத்தின் இருப்பும் குறைந்துள்ளது. நாட்டினை சகஜமான நிலைக்கு கொண்டு செல்வதாற்கான அநேகமான சாத்தியக்கூறுகளையும் இல்லாமல் செய்துள்ளது தற்போதைய அரசு. எதிர்கட்சியிரால் பல விடயங்கள் விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டு விமர்சனங்களை முன்வந்தாலும்பிரச்சனைகளுக்கான தீர்வு எட்டாக்கனியாகவே உள்ளது. நடைமுறைசிக்கல்களை சரிசெய்து மீண்டும் ஆரோக்கியமான பொருளாதார நிலையை எட்டுவதற்க்கு சிறந்த தலைமைத்துவம்,திட்டமிடல்,தூரநோக்கு கொண்ட ஆட்ச்சி தேவைப்படுகிறது அதனை தற்போதைய ஆட்சி நிட்சயம் வழங்காது அதனை எதிர்பார்ப்பது கள எதார்த்தத்திற்கு அப்பாற்பட்டது. தற்போதைய எதிர்கட்சியினர் ஆட்சியை பொறுப்பேற்றாலும்நாட்டை மீட்பது கடினம். அமைச்சர் பந்துல குணவர்த்தன கடந்த வாரம் வெளிப்படையாக பொருளாதார தோல்வியை ஏற்றுக்கொண்டுள்ளார் நாட்டில் உணவுப்பஞ்சம் ஏற்பட வாய்ப்புள்ளது என குறிப்பிட்டுள்ளார். அவர் குறிப்பிட்டதாவது "எதிர்கட்சியினர் ஆட்சியை கையிலெடுத்தாலும் நாட்டை பழைய நிலைக்கு கொண்டுவர 2029 ஆகும்" இலங்கை எவ்வாறான பாரதூரமான சிக்கலில் இருக்கின்றது என்பதனை அறிந்து கொள்ளுங்கள்.
இவ்வாறான பிரச்சனைகளில் இருந்து உங்களையும் உங்கள்சமுதாயத்தையும் பாதுகாத்துக்கொள்ள தற்காப்பு நடவடிக்கைகளில் இப்போதே நீங்கள் ஈடுபடவேண்டும்.இனிவரும் காலங்கள் மிககடினமானதாகவும்,மன சோர்வையும் எதிர்காலம் பற்றிய பயத்தை உங்களுக்கு ஏற்படுத்தலாம் மனம் தளராமல் பயணியுங்கள். நீங்கள் அனைவரும் Covid-19,2020,2021 ஆண்டுகளை கடந்து 2021 ல் கால்பதித்துள்ளீர்கள் இக்காலத்தில் பலவிதமான அனுபவங்களை பெற்றிருப்பீர்கள் அதனை அடித்தளமாக கொண்டு உங்கள் 2022 பயணத்தை நம்பிக்கையுடன் தொடங்குங்கள். நீங்கள் உங்களுக்கு நம்பிக்கையளிக்கும் என எதிர்பார்க்கும் அனைத்து சாத்தியக்கூறுகளையும் பயன்படுத்துங்கள். ஒரு புதிய வாழ்க்கை முறைக்கான தொடக்கம். இந்த சொல்லாடலே சிறந்தது நீங்கள் உங்களை பலப்படுத்திக்கொள்ளுங்கள் இந்த கடுமையான சூழ்நிலைகள் விரைவில் மாறும் என நம்புவோம். என்னிடம் பல எழுத்துவடிவிலான ஆவணங்கள் மற்றும் கோப்புகள் உள்ளன அவை சீனா இலங்கைமற்றும் ஆசிய ஆப்பிரிக்க நாடுகளை தங்கள் வலையில் சிக்கவைக்கின்றனர் என்பதை பற்றியதாகும்.இலங்கையை மட்டுமில்லாமல் மாலைதீவுகளையும் தன்னுடைய கட்டுப்பாட்டினுள் கொண்டுவருவதற்கான வேலைகளை முழுவீச்சில் செய்து வருகிறது இந்து மகா சமுத்திரத்தின் அழிக்கமுடியாத சக்தியாக உருவாவதே சீனாவின் இலக்கு.
இத்திட்டத்தில் பலியாகிக்கொண்டிருக்கும் நாடுகளில் இலங்கையும் ஒன்றும் மேலதிக தகவலாக ஆப்பிரிக்காவில் உகாண்டாஎனும் நாடு சீனாவிடமிருந்து பெற்ற கடனை திருப்பி செலுத்த முடியாமல் அதன் ஒரே சர்வதேச விமானநிலையத்தினை சீனாவுக்கு சமீபத்தில் வழங்கியுள்ளது. அடுத்து இலங்கையா???? இலங்கையை கூறுபோட இந்தியா, சீனா போட்டிபோட்டுக்கொண்டுள்ளன இந்தபோட்டியில் இந்தியாவுக்கு சார்பாக அமெரிக்காபின் நிற்கின்றது.நாளை இந்துமகா சமுத்திரத்தை மையமகாக கொண்டு ஒரு போர் மூளுமாயின் இலங்கை சீனாவால் அல்லது இந்தியாவால் படைகளை குவிக்கும் இடமாக பயன்படுத்தப்படுமாயின் இலங்கை தீவு நிட்சயம் அழித்தொழிக்கப்படும்.
உங்களுக்கு தெரியுமா? சீனாவால் தனது படைகளை ஹம்பாந்தோட்டையிலும் இந்தியாவால் தம் படைகளை திருகோணமலையிலும் குவிக்கமுடியுமென்று ஆம் நிட்சயம் முடியும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை பாதுகாக்க தன் படைகளை சீனா குவிக்கமுழு உரிமை உள்ளது அதுபோல திருகோணமலை எண்ணைத்தாங்கிகளின் பாதுகாப்புக்களுக்காக தன் படைகளை குவிக்க முடியும் இலங்கை எதுவும் கூறமுடியாது. நீர்மூழ்கிக்கப்பல்கள், போர்க்கப்பல்கள் இலங்கையை அண்மித்து போர் வியூகம் சூழும் நாள் வரும். இந்நாடு சிறுக சிறுக துண்டாடப்பட்டுதற்ப்போது மொத்தநாடும் அந்நியநாடுகளின் பிடியில் சென்றுவிட்டது. இலங்கையர்களாக உங்கள் நிலங்களைஉரிமை கோரமுடியாத உங்கள் பிள்ளைகள் பேரப்பிள்ளைகளுக்கு எதிர்காலம் என்ற ஒன்றை நினைத்து பார்க்க முடியாத சுடுகாடாக மாற்றப்படும் அடுத்த தொடரில் மேலும் நாட்டில் நடைபெறும் விடயங்களைப்பார்ப்போம். நன்றி

Comments

Popular posts from this blog

UK Civil WAR பற்றி எரியும் பிரிட்டன்!!!

  பிருத்தானியாவில் ஓர் நடன பாடசாலை வளகத்திலே 3 சிறுமிகள் கத்திக்குத்துக்கு இலக்காகி படுகொலைசெய்யப்பட்டதை தொடர்ந்து சந்தேக நபர் தொடர்பான அடையாளங்கள் தவறான முறையில் பகிரப்பட்டது.குறித்த கொலையாளி 17வயதுடையவன் அவன் இஸ்லாமியன் என தீவிர வலதுசாரிகளால் பரப்புரை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து பிரிட்டனில் பல பாகங்களில் வெறுப்பு போராட்டங்கள் வெடித்தன தொடர்ந்து கடைகள்,வீடுகள்,கார்கள் என்பன போராட்டக்காரர்களால் அழித்து சேதமாக்கப்பட்டது. இதுவரை 400 ற்கு மேற்பட்டவர்கள் நாடுமுழுவதிலிருந்தும் கைது செய்யப்பட்டுள்ளனர். இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதிகளை குறிவைத்து தாக்குதல்கள்நடத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றன.பிருத்தானியாவின் குடிவரவுக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையிலும் இந்த வன்முறைச்சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. சாலைகளில் தீவிர வலதுசாரிகள் கடைகள்,வணிகநிறுவனங்களை தாக்கி கொள்ளையிடுவதையும்,போலீசாரை பட்டாசுகள் வைத்து தாக்குவதும்,”Islam Out” போன்ற வாசங்களை உச்சரித்தபடியும் வன்முறையில் ஈடுபடுகின்றனர். அவர்கள் முன்னிற்கும் கோட்பாடாக “இங்கிலாந்து ஆங்கிலேயருக்கே” என்பதாகும்.மேலும் வன்முறைகள் மூளாமல் இருக்க பிரதமர...

St. Paul இடைத்தேர்தலில் Don Stewart வெற்றி 30 வருட Liberals கோட்டை தகர்ப்பு

    கனடா மக்கள் அதிகம் எதிர்பார்த்த விடயங்களில் இந்த இடைத்தேர்தல் மிக முக்கியமானதாக அமைந்திருந்தது. கடந்த 30 வருடங்களாக liberal கட்சியின் பலம் பொருந்திய கோட்டையாக St. Paul இருந்துவந்தது. கனடா முழுவதும் தற்போதைய அரசாங்கத்துக்கு எதிரான அதிருப்தி நிலை இருந்துவரும் நிலையில் குறிப்பாக liberals ன் ஆதிக்கம் நிறைந்த பகுதியில் மக்களின் மனநிலை எவ்வாறு உள்ளது என்பதை இந்த தேர்தல் முடிவுகள் காட்டிநிற்கும் என எதிர்பார்க்கப்பட்டது அது போலவே மக்கள் மாற்றத்தை விரும்பி Conservative கட்சியை தெரிவு செய்துள்ளனர். இந்த முடிவானது எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலின் முடிவுகளை எதிரொலிப்பதாக உள்ளது. கடந்த பதிவில் தேர்தல் கருத்துக்கணிப்புக்கள் கனடா மாற்றத்தை விரும்புகிறது எனபதை குறிப்பிட்டிருந்தேன்."ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்" என்பது போல் liberal கட்சியானது அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் குறிப்பாக Ontario மாகாணத்தில் Toronto போன்ற பகுதிகளில் மிகப்பெரும் தோல்விகளை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.  லிபரல் கட்சியின் சார்பில் போட்டியிட்ட Leslie church ஐ காட்டிலும் 590 வாக்குகள் அதிகம் பெற்று co...

ஐரோப்பாவிலிருந்து பற்றிய வலதுசாரிகள் எனும் தீ வீழ்சியடையும் liberals

  கனடாவானது மிகப்பெரிய பொருளாதார மற்றும் அரசியல் சிக்கலில் சிக்கியுள்ளது.கணிசமான கனடிய மக்கள் கனடாவைவிட்டு வெளியேறிக்கொண்டிருப்பது சமூக வலைதளங்களில் பேசுபடுபொருளாக உள்ளது.கனடாவின் பிரதமருக்கான தேர்த்தல் கருத்துக்கணிப்புகள் வெளியாகி தற்போதுள்ள அரசாங்கத்தின் உண்மைநிலையை வெளிக்காட்டியுள்ளது.வீட்டுவாடகை,அத்தியாவசிய பொருட்களின் விலைஏற்றம்,அதிகரித்த குடிவரவு,வாழ்க்கை தரமானது வீழ்ச்சியடைந்துள்ளமை,மருத்துவமனைகள் மக்களின் வரிசை,அதிகரித்த வரி என கடந்த 3 ஆண்டுகளாக மக்கள் தற்போதைய அரசாங்கத்தின் மீது கடும் வெறுப்பில் உள்ளனர் அதனையே கருத்துக்கணிப்புகள் சுட்டிக்காட்டுகின்றது. 16 june 2024 அன்று வெளியான அடுத்த பாராளுமன்ற தேர்தலுக்கான கருத்துக்கணிப்பின் படி தற்போது ஆளும் கட்சியான Liberal கட்சி 4 ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இதன்படி  Conservative கட்சியானது 223 ஆசனங்களை பெறும் என கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது.கனடாவின் பாராளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை 338 ஆகும் இதில் 170 ஆசங்களை பெறும் கட்சியானது ஆட்சியமைக்கமுடியும். 2025 ல் தேர்தல் நடைபெறுவதற்கு 15 மாதங்கள் இருக்கும் நிலையில் இவ்வாறான கருத...