2020 ன் ஆரம்பத்தில் பெரிதான ஆர்ப்பாட்டம் இல்லாமல் ஆரம்பித்து தற்பொழுது இலங்கை அரசு பொருளாதார அவசர நிலையினை எதிர்கொள்ளும் நிலைக்கு தள்ளிவிட்டுள்ளது.
இன்நிலைக்கு Covid-19 ன் மீது முற்றுமுழுதாக குற்றம் சொல்லிவிடமுடியாது இங்கு தீட்டப்பட்ட திட்டங்கள் தொடர்தோல்விகளை சந்திக்க அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சிக்கலும் ஒன்று சேர்ந்து நாட்டை முடக்கிவிட்டுள்ளது என்பதே உண்மை.
கடந்த சில மாதங்களாக அரசாங்கத்திடம் அரசாங்கத்திடமிருந்து வெளியாகும் அறிவிப்புகள் மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.எதைச்செய்தால் இப்பிரச்சினைகளில் இருந்து மீண்டு வரலாம் என்பதே இலங்கை வாழ் மக்களின் பரிதவிப்பு.
இந்த கள எதார்த்தம் ஓர் நிட்சயமற்ற குழப்பத்தையும் எதிர்காலம் குறித்த எச்சரிக்கை மணியை ஒலிக்கச்செய்துள்ளது.
இந்நிலைமை மேலும் மோசமடையாமல் இருப்பதற்கு இறைவனை பிரார்த்தித்துக்கொண்டு இந்நிலைமை எவ்வாறு பரிணமித்தது என்பதை அலசியாகவேண்டும்.
இதை வாசித்துக்கொண்டிருக்கும் யாராக இருந்தாலும் உலகின் எந்த இடத்தில் வசித்தாலும் நம் பிறப்பிடத்தின் தற்போதைய நிலையை அறிந்தே ஆக வேண்டும்.தவறுகள் மற்றும் ஓர் விம்பத்தை கட்டமைப்பதில் செலுத்தப்பட்ட சுய நல வேலைப்பாடுகள்.
2020 பங்குனி மாதம் தொடக்கம் Covid-19 ஐ பரவ விடாமல் குறைந்தளவு நோயாளர்களே தொற்றுக்குள்ளானார்கள் வருட இறுதிப்பகுதிகளில் Covid-19 ஜ கட்டுப்படுத்தி விட்டதாக மார்தட்டிக்கொண்டனர். 2021 ஆரம்பத்திலிருந்து நடைபெற்ற கதையே வேறு இங்கு நான் முன்வைக்கும் கருத்தை உள்வாங்கிக்கொண்டு இருவரும் ஒரு முடிவுக்கு வருவோம்.
2020 இல் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகள் மிகக்குறைவு அப்போழுது PCR பரிசோதனை கருவிகள் மற்றும் உபகரணங்கள் தட்டுப்பாடு நிறைந்த காலம் அக்காலத்தில் இனங்காணப்பட்ட நோயாளர்களின் எண்ணிக்கையும் மரண எண்ணிக்கையும் ஒற்றை எண்ணிக்கையிலேயே நிகழ்ந்தது.2021 இல் PCR பரிசோதனை கருவிகள் மற்றும் பொருட்கள் அதிகளவில் கொள்வனவு செய்யப்பட்டன மற்றும் நட்பு நாடுகளால் வழங்கப்பட்டன.
இதனால் எழுமாறான பரிசோதனைகள் அதிகளவில் மேற்கொள்ளப்பட சமூகத்திலிருந்து அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். இவையே இவ்வருடங்களுக்கான வித்தியாசம்."ஒரே தடவையில் இருபடகுகளில் கால் வைத்தாற் போல்" இது ஓர் பயனற்ற செயல் என்பது பொருள்
இதனையே ஆட்சிகட்டில் ஏறிய நாள்முதல் மொட்டுக்கட்சி செய்து வருகிறது. சில விடையங்கள் இலை மறை காய்போல செய்தித்தாள்களில் செய்திஆசிரியர்கள் குறிப்பிடுவார்கள் அதனை எல்லோரும் உள்வாங்கிக்கொள்ள முடியாது.சில விடையங்களை மக்களுக்குநேரடியாக தெளிவு படுத்துவதே எனது குறிக்கோள்.இதன்போது பலரின் சாயங்கள் வெளுக்கும் வெளுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.ஒவ்வொருவரையும் புதியகண்ணோட்டத்தில் நீங்கள் உணர்வீர்கள்.
பெரும்பான்மை மக்களின் பேராதரவோடு ஆட்சிக்கு வந்த மொட்டுக்கட்சியினர் "அபிவிருத்தி" "அபிவிருத்தி" என்று கொக்கரித்தனர். சிங்கள பேரினவாதம் வளர்த்தெடுத்த இந்த ராஜபக்ஷ சகோதரர்கள் முஸ்லீம்கள் மீது அடக்குமுறைகளை ஏவி பெரும்பான்மை மக்களை திருப்தி படுத்தினர் மறுபுறம் தமிழர்கள் மீதும் தொடர் அதிகாரபலத்தை ஏவினர். நீராவிடிப்பிள்ளையார் ஆலய விவகாரம், மாகாண சபை நீக்கம், காணி போலீஸ் அதிகாரம் நீக்கம் என பல இதன்மூலம் இன வாத பிக்குகள் சிங்கள மக்கள் மனங்களை குளிரவைக்க வேண்டிய தேவையை இவர்கள் செய்து வந்ததாலும் Covid-19 ன் காரணமாக ஏற்பட்ட பொருளாதார சுணக்க நிலையும் சேர்ந்து அடுத்த அடியை எடுத்து வைக்க முடியாமல் செய்து விட்டது.
ஓர் முறையான ஆட்சி அதிகாரத்தை கொண்டு நடாத்துவதற்க்கு எத்தணிக்காமல் ஓர் சர்வாதிகார ராணுவமயமான தன்னேர்சையாக நடாத்தி அதனால் அரச அதிகாரிகளின் கோபத்துக்குள்ளாகியும் தன்னுடைய நிலையில் பிடிவாதமாக நிற்கிறார் கௌரவ சனாதிபதி அவர்கள்.
அனைத்து துறைகளிலும் இராணுவம் மற்றும் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகளை நியமிக்கின்றார். அவர்களுக்கு அந்த பதவியின் நோக்கம் மற்றும் அனுபவம் இல்லாமல்இருப்பதன் காரணமாக "எங்கட ஊர் விதானை தொடங்கி கோட்டபாயவின் ஆலோசகர்கள் வரை" அதிகார மட்டங்களில் ராணுவத்தினர் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.இந்த குழப்பங்கள் காரணமாக அதிகாரமட்டங்கள் ஆட்டம் கட்டுவிட்டன.
இவ்வாறாக துடுப்பில்லாத படகாக நாட்கள் போகும் போக்கில் இந்த ஆட்சியும் போய்க்கொண்டிருக்கிறது.கடன் என்ற பூதமும் இவர்கள் கழுத்தை நெரித்துக்கொண்டிருக்கிறது.நேற்றுவரை முருங்கை மரத்தில் குறட்டை விட்டுநித்திரை கொண்ட பூதம் எப்படி கழுத்தை நெரிக்கும் என்று நீங்கள் நினைக்கலாம் அதற்கும் இந்த ராஜபக்ஷ சகோதரர்களேகாரணம்.கடந்த நல்லாட்சிஅரசாங்க காலகட்டாத்தில் மைத்திரிபால சிறீசேன இந்தியா மற்றும் அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகளுடன் நட்புடன் செயற்பட்டார் இதனால் பல பொருளாதார உதவிகள்கிடைத்தன.
ஆனால் ராஜபக்ஷாக்கள் சீனாவுடன் நெருங்கிய நட்பை ஏற்படுத்தி இந்தியாவுக்கு ஓர்பிராந்திய அச்சுறுத்தலை தோற்றுவித்தது மேலும் இந்தியா&ஐப்பான்இணைந்து கொழும்பு கிழக்கு கொள்முதல் முனையத்தை சீரமைக்கும்பணிக்கான ஒப்பந்தத்தை இரத்து செய்யது. இவைகளால் இந்தியா அதிருப்தி அடைந்தது உடனே வேட்டி மடித்து கட்டிக்கொண்டு கடனை திருப்பி செலுத்துமாறு இந்தியா கேட்டபோது என்னஆச்சரியம் இலங்கை 400 மில்லியனை திருப்பி செலுத்தியது. இச்செயல் இந்தியாவுக்கு ஆச்சரியமாகத்தான் இருந்திருக்கும் ஏனெனில் ஒரு வாரகாலத்தில்இவ்வளவு பெருந்தொகையை எவ்வாறு இலங்கையால் செலுத்தமுடிந்தது என்று.
ஒப்பந்தத்தை இரத்துசெய்ய வைத்ததும்சீனா தான்காரணம் இந்தியாவின் கடன் தொகையை செலுத்துவதற்கும் சீனாவின் தலையீடு இருந்துள்ளது இல்லாவிட்டால் இலங்கையால் பெருந்தொகையான பணத்தை திருப்பி செலுத்த முடியாது. ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சீனா எதிரி நாடு கொழும்புவில் ஓர் கொள்முதல் முனையத்தை உரிமைகொண்டாட நிட்சயம் அனுமதிக்காது. ஆகவே இலங்கையை கடன் என்ற விடையத்தை வைத்து இயக்கி வருகிறது சீனா.
தற்போது 690+ அதிகமான பொருட்களை இலங்கையில் இறக்குமதி செய்ய இலங்கை அரசு தடை விதித்துள்ளது. பெரும்பாலாக தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்காக அரசு பணத்தினை செலவு செய்கிறது.அந்நியச்செலாவணி கையிருப்பும் குறைந்த அளவிலேயே இருக்கின்றது. தற்போதைய சூழ்நிலையில் எந்த நாடும் கடன் கொடுக்க முன்வராது என்பது எதார்த்தம். பால் மா, சீனி, சமையல் எரிவாயு, என்பன விலை அதிகரித்து மக்களை ஓர் அச்ச நிலையினுள் தள்ளியுள்ளது.
கோட்டபாய என்ற விம்பத்தை மக்களிடம் கொண்டு சேர்பதிலேயே மொட்டுக்கட்சி கூடாரம் கவனம் செலுத்தியதே தவிர மக்களுக்கான திட்டங்களை வகுத்து திட்டமிடல்களை நிறைவேற்றவில்லை. தற்பொழுது மொட்டுக்கட்சியுடன் சேர்ந்து ராஜபக்ஷாக்களின் விம்பமும் மக்கள் முன்னிலையில் தோற்கடிக்கப்பட்டுள்ளது. போலி முகத்திரைகள் கிழிக்கப்பட்டு உட் கட்சியினுள்உள்ள சிறுகட்சிகள் சற்று கொதித்தெழ ஆரம்பித்துள்ளன அந்தகோபம் நியாயமானது.மக்கள் எதற்க்கும் தயாராக இருக்கவேண்டும் அனைத்தையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
நடைபெற்று முடிந்தவற்றை மீட்டுப்பார்த்தால் அவ் காலவழியே எதிர்காலம் பற்றிய சிறு அனுமானங்களை பெறுவீர்கள்.
இது ஓர் சிறு மீள்ஆய்வு மற்றும் தெளிவூட்டல்.
பிருத்தானியாவில் ஓர் நடன பாடசாலை வளகத்திலே 3 சிறுமிகள் கத்திக்குத்துக்கு இலக்காகி படுகொலைசெய்யப்பட்டதை தொடர்ந்து சந்தேக நபர் தொடர்பான அடையாளங்கள் தவறான முறையில் பகிரப்பட்டது.குறித்த கொலையாளி 17வயதுடையவன் அவன் இஸ்லாமியன் என தீவிர வலதுசாரிகளால் பரப்புரை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து பிரிட்டனில் பல பாகங்களில் வெறுப்பு போராட்டங்கள் வெடித்தன தொடர்ந்து கடைகள்,வீடுகள்,கார்கள் என்பன போராட்டக்காரர்களால் அழித்து சேதமாக்கப்பட்டது. இதுவரை 400 ற்கு மேற்பட்டவர்கள் நாடுமுழுவதிலிருந்தும் கைது செய்யப்பட்டுள்ளனர். இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதிகளை குறிவைத்து தாக்குதல்கள்நடத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றன.பிருத்தானியாவின் குடிவரவுக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையிலும் இந்த வன்முறைச்சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. சாலைகளில் தீவிர வலதுசாரிகள் கடைகள்,வணிகநிறுவனங்களை தாக்கி கொள்ளையிடுவதையும்,போலீசாரை பட்டாசுகள் வைத்து தாக்குவதும்,”Islam Out” போன்ற வாசங்களை உச்சரித்தபடியும் வன்முறையில் ஈடுபடுகின்றனர். அவர்கள் முன்னிற்கும் கோட்பாடாக “இங்கிலாந்து ஆங்கிலேயருக்கே” என்பதாகும்.மேலும் வன்முறைகள் மூளாமல் இருக்க பிரதமர...
Comments
Post a Comment